சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் ஜிம் உரிமையாளர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் போட்றுவீங்க!

ஜிம் உரிமையாளர் ஒருவர் சொகுசு கார்களை வாங்கி குவித்து வருகிறார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் ஜிம் உரிமையாளர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் போட்றுவீங்க!

உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்டவர்களுக்கு ஃப்யூசன் ஜிம் (Fusion Gym) கண்டிப்பாக தெரிந்திருக்கும். மிகவும் பிரபலமான இந்த ஜிம்மின் உரிமையாளர் அமித் சிங் (Amit Singh). ஃபிட்னஸ் மட்டுமல்லாது, மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களின் மீதும் அமித் சிங்கிற்கு ஆர்வம் அதிகம். கடந்த ஜூன் மாதம் மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 (Mercedes-Maybach GLS 600) காரை அவர் வாங்கினார்.

சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் ஜிம் உரிமையாளர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் போட்றுவீங்க!

இந்த வரிசையில் தற்போது போர்ஷே 718 கேமேன் ஜிடி4 (Porsche 718 Cayman GT4) காரை அமித் சிங் வாங்கியுள்ளார். இந்த ஸ்போர்ட்ஸ் காரின் விலை 1.63 கோடி ரூபாய் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரில் 4.0 லிட்டர், பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 414 பிஹெச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் ஜிம் உரிமையாளர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் போட்றுவீங்க!

போர்ஷே 718 கேமேன் ஜிடி4 காரில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் பிடிகே ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் இன்ஜின் சக்தியானது, பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது. மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 4.4 வினாடிகளில் எட்டி விடும்.

சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் ஜிம் உரிமையாளர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் போட்றுவீங்க!

அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 304 கிலோ மீட்டர்கள் ஆகும். நாங்கள் ஏற்கனவே கூறியபடி அமித் சிங்கிற்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவரிடம் போர்ஷே 718 பாக்ஸ்டர் (Porsche 718 Boxter), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் (Lamborghini Huracan Spyder) போன்ற கார்களும் இருக்கின்றன.

சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் ஜிம் உரிமையாளர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் போட்றுவீங்க!

மேலும் ஃபெராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB) காரை அமித் சிங் வைத்துள்ளார். போர்ஷே 718 கேமேன் ஜிடி4 காருக்கு முன்னதாக அவர் வாங்கிய கார் மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600. இது மிகவும் சொகுசான எஸ்யூவி கார் ஆகும். இந்த காரின் விலை 2.43 கோடி ரூபாய் ஆகும். இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் ஜிம் உரிமையாளர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் போட்றுவீங்க!

அமித் சிங்கிடம் உள்ள மற்றொரு காரான உருஸ், இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் லம்போர்கினி நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக இருக்கிறது. எஸ்யூவி கார்களின் நடைமுறை பயன்பாடு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களில் செயல்திறன் ஆகியவற்றின் கலவையாக இது உருவாக்கப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம்.

சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் ஜிம் உரிமையாளர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் போட்றுவீங்க!

லம்போர்கினி உருஸ் காரில், 4.0 லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 641 பிஹெச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இன்ஜின் சக்தியானது, 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மூலம், காரின் 4 சக்கரங்களுக்கும் கடத்தப்படுகிறது.

சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் ஜிம் உரிமையாளர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் போட்றுவீங்க!

லம்போர்கினி உருஸ் காரின் விலை 3.15 கோடி ரூபாய் ஆகும். இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான். அமித் சிங்கிடம் உள்ள அனைத்து கார்களுமே மிகவும் விலை உயர்ந்தவையாக உள்ளன. எதிர்காலத்தில் அமித் சிங் இன்னும் நிறைய விலை உயர்ந்த கார்களை வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு நமது வாழ்த்துக்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Fusion gym owner amit singh buys porsche 718 cayman gt4
Story first published: Monday, September 27, 2021, 13:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X