மோடி 3.0... புல்லட் இரயிலுக்கு காத்திருங்கள்!! வேற லெவலில் மாற போகும் இரு இந்திய நகரங்கள் - வைரல் வீடியோ!

'ஃப்யூச்சர் ஆஃப் இந்தியா' (Future Of India) என்கிற பெயரில் இந்தியாவின் முதல் புல்லட் இரயில் குறித்த விபரங்களை இரயில்வே அமைச்சகம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இரயில்வே துறை கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் இரயில்கள் இந்தியன் இரயில்வேயின் சமீப கால சிறந்த அறிமுகங்கள் என சொல்லலாம். அதேபோல், நாடு முழுவதும் இரயில் நிலையங்களும் குறிப்பிடத்தக்க வேகத்தில் மேம்படுத்தப்பட்டு வருவதாக மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவ்வப்போது தனது எக்ஸ் பக்கத்தில் படங்கள், வீடியோக்களுடன் தெரிவித்து வருகிறார்.

railway minister highlighting bullet train

அந்த வரிசையில், சமீபத்தில் புதியதாக ஒரு வீடியோ அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் குஜராத்தின் அகமதாபாத் இடையே விரைவில் கொண்டுவரப்பட உள்ள புல்லட் இரயில் குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அமைச்சரின் இதுகுறித்த எக்ஸ் பதிவில், "உலக-தர என்ஜீனியரிங்கின் மார்வல்" என்றும், "இந்தியாவின் எதிர்காலம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், "நாம் கனவுகளை அல்ல யதார்த்தத்தை நெசவு செய்கிறோம். மோடி 3.0இல் புல்லட் இரயிலுக்காக காத்திருங்கள்" எனவும் தனது எக்ஸ் பதிவில் இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மும்பை மற்றும் அகமதாபாத் இடையே 508கிமீ தொலைவிற்கு இந்த புல்லட் இரயில் சேவை கொண்டுவரப்படுகிறது.

railway minister highlighting bullet train

அதிகப்பட்சமாக மணிக்கு 320கிமீ வேகத்திற்கு இயங்கக்கூடிய புல்லட் இரயில்களின் மூலம் இந்த 508கிமீ தொலைவை வெறும் 2 மணிநேரங்களில் கடந்துவிடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டு வரும் புல்லட் இரயில் பாதையில் மொத்தம் 24 ஆற்று பாலங்கள் மற்றும் 28 இரும்பு பாலங்கள் இடம்பெறுகின்றன.

அத்துடன், மலைகளை குடைந்து 7 சுரங்கங்களும் தோண்டப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமாக, கடலுக்கு அடியில் 7 கிமீ தொலைவிற்கு ஒரு சுரங்கம் அமைக்கப்படுகிறது. தற்போது இரயில்வே துறை அமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோவின்படி பார்க்கும்போது, இந்தியாவிலேயே முதல்முறையாக 'ஜே ஸ்லாப் டிராக் சிஸ்டம்' இந்த புல்லட் இரயில் வழித்தடத்திற்காக அமைக்கப்படுகிறது.

railway minister highlighting bullet train

அட்வான்ஸ்டு கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பத்தின் மூலமாக, இந்த புல்லட் இரயிலில் முன்கூட்டியே நிலநடுக்கத்தை கூட அறிந்துக் கொள்ள முடியும் என வீடியோவில் கூறப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு இடையே வசதிகள் மிகுந்த 12 இரயில் நிலையங்கள் எழுப்பப்பட உள்ளன. 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே மும்பை- அகமதாபாத் இடையேயான இந்த புல்லட் இரயில் உருவாக்க பணிகள் துவங்கிவிட்டன.

2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் குஜராத்தின் பிலிமோரா மற்றும் சூரத் இடையேயான 50கிமீ-க்கு இரயில் டிராக் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுவிடும் என இரயில்வே அமைச்சர் கடந்த ஆண்டில் தெரிவித்து இருந்தார். இந்த வழித்தடத்தில் முதற்கட்டமாக 35 புல்லட் இரயில்களை இயக்க இந்தியன் இரயில்வே திட்டமிட்டுள்ளது. 2050ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 105ஐ தொட்டுவிடும் என கூறப்படுகிறது.

railway minister highlighting bullet train

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாளுக்கு நாள் இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களும் அதிகரித்து வருகின்றன. ஆதலால், விரைவான போக்குவரத்துக்கு புல்லட் இரயில்கள் அவசியமாகின்றன. 2026 ஆகஸ்ட்டிற்குள் 50கிமீ-க்கு வழித்தடம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மும்பை- அகமதாபாத் இடையேயான புல்லட் இரயில் சேவை முழுவதுமாக நிறைவடைய இன்னும் 10 ஆண்டுகள் கூட ஆகலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 14, 2024, 12:36 [IST]
English summary
Future of india railway minister highlighting nations first bullet train
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X