ஏணியே விழுந்தாலும் ஒரு சின்ன கீறல் கூட விழாது! காரை கவர் பண்ண புது கவர் வந்துடுச்சு!

கார்கள் வைத்திருக்கும் பலருக்கும் இருக்கும் பெரிய தலைவலி அந்த காரை ஸ்கிராட்ச்கள் இல்லாமல் பாதுகாப்பாக வைத்திருப்பது தான். ஒருவர் கார் வாங்கி அதை தன் வீட்டில் நிறுத்தி வைத்திருந்தால் கூட ஏதாவது ஸ்கிராட்ச் விழ வாய்ப்பு இருக்கிறது. அப்படியே இல்லை என்றால் தூசு படிந்துவிடும். அதன் மூலம் கூட ஸ்கிராட்ச் விழ வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

இப்படி கிராட்ச்கள் விழாமல் இருக்க வேண்டும் என்றால் காருக்கு கவர் வாங்கி கார் பார்க் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் போது காரை அந்த கவரை கொண்டு மூடிவைத்தால் ஓரளவிற்கு ஸ்கிராட்சிலிருந்து காப்பாற்றலாம். ஆனால் காஸ்ட்லியான காரை வாங்கி அப்படியான ரிஸ்கை எல்லாம் எடுக்க முடியாது என்பவர்களுக்காக ஒரு கார் கவர் தயார் செய்யப்பட்டுள்ளது.

ஏணியே விழுந்தாலும் ஒரு சின்ன கீறல் கூட விழாது! காரை கவர் பண்ண புது கவர் வந்துடுச்சு!

அமெரிக்காவைச் சேர்ந்த கார் கேப்சூல் நிறுவனம் காஸ்ட்லியான கார்களை பாதுகாக்கப் புதுமையான ஒரு கவரை தயார் செய்துள்ளது அந்த கவருக்குள் கார் இருக்கும் போது காரின் அழகை வெளியிலிருந்து தெளிவாகப் பார்க்க முடியும். அதே நேரம் காரில் தூசி மட்டுமல்ல ஒரு பெரிய ஏணியே விழுந்தாலும் காருக்கு எந்த வித பாதிப்பு ஏற்படாது.

இது குறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு காஸ்ட்லியான காருக்கு இந்த கவரை போட்டுள்ளனர். அப்பொழுது அந்த கவரின் மீது சுத்தியல், ஸ்பேனர், ஸ்ரூடிரைவர் போன்றவற்றை எரிகின்றனர். கார் கவரும் கிழியவில்லை. உள்ள இருக்கும் காருக்கும் சேதமாகவில்லை. இதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

இந்த புதுமையான கார் கவரை கார்கேப்சூல் நிறுவனம் தயாரித்துள்ளது. இதை அந்நிறுவனம் 10 மிமீ டிரான்ஸ்பரன்ட் பிவிசி மெட்டீரியலை கொண்டு தயாரித்துள்ளது. இந்த கவருக்குள் மோட்டார் மூலம் வேகமாக காற்றை வேகமாக சுழற்றியடைய வைக்கிறது. இதனால் கவருக்குள் தூசு போன் விஷயங்களும் செல்லாது, கவரின் மேலே விழும் பொருட்களும் ஸ்டிராங்காக இருக்கும்.

இதற்காக ஒரு எலெக்ட்ரிக் ஃபேன் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மணி நேரத்திற்கு 3 முதல் 4 முறை காற்றைச் சுழற்றிக்கொண்டே இருக்கும். இதனால் கவருக்குள் வெப்பமும் கான்ஸ்டென்டாக இருக்கும். ஒரு வேலை இதில் உள்ள எலெக்ட்ரிக் ஃபேன் வேலை செய்யவில்லை என்றால் அதை இது சாதாரண கார் கவர் போலவே வேலை செய்யும்.

இந்த கவர் கிழிந்துவிட்டாலும் சுலபமாகப் பஞ்சர் போட்டுக்கொள்ளலாம். இந்த கவருக்குள் காற்று காருக்கும் கவருக்கும் இடையே 305 மிமீ வரை இருக்கும் பட்சத்தில் இதனால் இந்த கவர் மீது அதிக எடை கொண்ட பொருட்கள் தவறி விழுந்தாலும் காருக்கு எந்த வித சேதாரத்தையும் ஏற்படுத்தாது. இந்த கவர் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Article Published On: Thursday, February 23, 2023, 21:00 [IST]
English summary
Futuristic Protection bubble Car Cover by car capsule
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+