வந்தே பாரத் ரயிலை பார்த்து மிரண்டுபோன ஜி20 பிரதிநிதிகள்.. என்னங்க இப்படி புகழ்ந்து தள்ளி இருக்காங்க!

உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் (Vande Bharat) ரயிலுக்கு இந்தியர்கள் மத்தியில் மட்டுமில்லைங்க வெளிநாட்டினர் மத்தியிலும் நல்ல பெயரே கிடைத்து இருக்கின்றது. ஜி20 (G20) மாநாடுக்காக இந்தியா வந்திருக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகள் சிலருக்கு வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

இவர்களே வந்தே பாரத் ரயிலின் பொறியியல் திறமை மற்றும் வசதிகளைப் பார்த்து வியந்துபோயிருக்கின்றனர். உலக தரம் வாய்ந்த இந்த ரயிலில் கந்தி நகரின் தலைநகரில் இருந்து மும்பை வரையில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஜி20 நாடுகளைச் சேர்ந்த ஊடகவியளாளர்கள் மற்றும் தூதர்கள் இதில் பயணித்தனர்.

 g20 delegation travelled in vande bharat

முதலில் அவர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ரயில் பயணத்தின்போது குளிர்பானம் மற்றும் தண்ணீர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன. இவ்வாறு மிக சிறந்த உபசரிப்பே ஜி20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு இந்தியன் ரயில்வேஸ் அதன் சார்பில் வழங்கியது. இந்த உபசரிப்பும், அட்டகாசமான வந்தே பாரத் ரயில் பயணமுமே ஜி20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை வெகுவாக கவர்ந்திருக்கின்றது.

இந்த உபசரிப்பில் தெற்கு ஆப்பிரிக்காவின் பிரதிநிதியான ரெபேக்கா என்பவர் மெய் மறந்துபோயிருக்கின்றார். அவர், தன்னுடைய இந்த பயணம் குறித்த அளவற்ற மகிழ்ச்சியை அவர் இந்திய ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக, துள்ளியமான நேரத்தில் ரயில் புறப்படுவதைக் கண்டு அவர் வியந்து போயிருக்கின்றார்.

இதுதவிர, ரயிலின் உட்புறத்தைக் கண்டும் அவரை அசந்து போயிருக்கின்றார். வழக்கமான ரயில்களில் பயணிப்பதைவிட வந்த பாரத் ரயில்களில் அதிக இட வசதி மற்றும் சொகுசான ரயில் பயண அனுபவத்தையும் தான் பெற்றதாக ரெபேக்கா தெரிவித்து இருக்கின்றார். இவரை போலவே இன்னும் பலர் நம்முடைய உள் நாட்டு தயாரிப்பான வந்தே பாரத் ரயிலை பார்த்து வியந்து நின்றிருக்கின்றனர்.

அனைவருக்கும் சொகுசான ரயில் பயணம் என்கிற நோக்கிலேயே இந்தியன் ரயில்வேஸ் வந்தே பாரத் ரயிலை உருவாக்கி இருக்கின்றது. இந்த வந்தே பாரத் ரயில்களைப் பற்றி சில சர்ச்சையான கருத்துக்களை எழுப்பி வந்தாலும், அது உருவாக்கம் உண்மையில் மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.

இந்த ரயிலுக்கு நாட்டு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி ஒரு சிலர் இந்த ரயிலைப் புறக்கணிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த மாதிரியான ரூட்களில் வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தை குறைக்க இருப்பதாக இந்தியன் ரயில்வேஸ் சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தகுந்தது.

சென்னை ஐசிஎஃப்-ல் வைத்தே இந்தியன் ரயில்வேஸ் வந்தே பாரத் ரயில்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இங்கு மட்டுமே இந்த ரயில் உற்பத்தி செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. வழக்கமான ரயில்களைப் போல் 24 பெட்டிகளை வந்தே பாரத் ரயில் கொண்டிருக்காது. அது 16 பெட்டிகளை மட்டுமே கொண்டிருக்கும்.

அனைத்தும் ஏசி மற்றும் சொகுசான இருக்கை வசதிகளைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. நட்சத்திர ஓட்டலில் இருப்பதைப்போன்ற அனுபவத்தை இந்த ரயில் அதன் பயணிகளுக்கு வழங்கும். ஒற்றை வந்தே பாரத் ரயிலை முழுமையாக உருவாக்க 2 மாதத்திற்கும் அதிகமான காலம் தேவைப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒட்டுமொத்தமாக 75 வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்வதே இந்தியன் ரயில்வேஸின் இப்போதைய இலக்காகும். இதுமட்டுமில்லைங்க ஒவ்வொரு மாதமும் 6 முதல் 7 வந்தே பாரத் ரயில்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பது அதன் நோக்கமாக இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக நாடுகளில் உள்ள ரயில்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் முழுக்க முழுக்க இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட்டதே இந்த வந்தே பாரத் ரயில்கள் ஆகும். விரைவில் பாண்டி-சென்னை-திருப்பதியை இணைக்கும் வகையில் ஓர் ரயிலை தெற்கு ரயில்வேஸ் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 23, 2023, 10:29 [IST]
English summary
G20 delegation travelled in vande bharat gandhinagar to mumbai
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+