இந்தியாவுக்கு வரும் பறக்கும் கோட்டை! இதுல இத்தன ரகசியங்கள் மறஞ்சிருக்கா! இன்னும் மிரட்சில இருந்து மீள முடியல!
ஜி20 மாநாடு (G20 Summit) புது டெல்லியில் (New Delhi), வரும் செப்டம்பர் 9-10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (US President Joe Biden) உள்பட, உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே புது டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் செப்டம்பர் 8 (நாளை) இந்தியா வருகிறார். பறக்கும் கோட்டை (Flying Fortress) என வர்ணிக்கப்படும் ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில்தான், ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.

28,000 மற்றும் 29,000 ஆகிய டெயில் கோடுகளை (Tail Codes) கொண்ட 2 போயிங் 747-200பி (Boeing 747-200B) சீரிஸ் விமானங்கள்தான், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்கள் என அழைக்கப்படுகின்றன. இதில் ஒரு ஏர் ஃபோர்ஸ் விமானத்தில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வரவுள்ளார்.
கிட்டத்தட்ட 6 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடத்தின் உயரத்திற்கு இந்த விமானத்தின் உயரம் இணையானது. அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் ஒரு மணி நேரம் பறக்க வேண்டுமென்றால், இந்திய மதிப்பில் சுமார் 1.70 கோடி ரூபாயை செலவிட வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அளவிற்கு அதிநவீன பாதுகாப்பு வசதிகள் மற்றும் சொகுசு வசதிகளை ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் கொண்டுள்ளது. இந்த விமானத்தில் அமெரிக்க அதிபருக்கான 'சூட்' இடம்பெற்றுள்ளது. இதில், பெரிய அலுவலகம் மற்றும் கான்ஃபரன்ஸ் அறை ஆகிய வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் மூத்த ஆலோசகர்கள், ரகசிய சேவை அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தூங்குவதற்கான இடவசதியும் கூட இந்த 'சூட்' பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் மருத்துவ வசதிகளும் இருக்கின்றன. இந்த விமானத்தில் அனைத்து நேரங்களிலும் மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள்.
அத்துடன் இந்த விமானத்தில் 2 உணவு தயாரிப்பு கூடங்களும் இருக்கின்றன. இவற்றின் மூலம் ஒரே நேரத்தில் 100 பேருக்கு உணவளிக்க முடியும். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் டாப் ஸ்பீடு மணிக்கு 600 மைல்கள் ஆகும். அதாவது மணிக்கு 965 கிலோ மீட்டர்கள் வேகத்தில் இந்த விமானம் பறக்கும்.
அத்துடன் ஒருவேளை எரிபொருள் தீர்ந்து விட்டால், இந்த விமானத்தை தரையிறக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நடுவானிலேயே வேறொரு விமானத்தில் இருந்து எரிபொருள் நிரப்பி கொள்ளும் வசதி, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே காலவரையறையின்றி இந்த விமானத்தால் தொடர்ச்சியாக பறக்க முடியும்.
அணுகுண்டு தாக்குதல்களால் ஏற்படக்கூடிய எலக்ட்ரோமேக்னடிக் வெடிப்புகளை தாங்க கூடிய வல்லமையை ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் பெற்றுள்ளது. அத்துடன் எதிரிகளின் ஏவுகணைகளை திசை திருப்பும் எலெக்ட்ரானிக் ஜாமர்கள் மற்றும் எதிரிகளின் ரேடார்களை 'ஜாம்' செய்ய கூடிய பாதுகாப்பு அமைப்புகளும் இந்த விமானத்தில் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமெரிக்க அதிபர் இருக்கையில் அமர்பவர், அமெரிக்காவிற்கு மட்டுமல்லாது, உலகிற்கே மிகவும் முக்கியமான தலைவராக பார்க்கப்படுகிறார். எனவே அமெரிக்க அதிபர் இருக்கையில் அமர்பவருக்கு, ஏர் ஃபோர்ஸ் ஒன் போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய விமானங்கள் மிகவும் அவசியமானவையாக கருதப்படுகின்றன.


Click it and Unblock the Notifications