போக்குவரத்து விதிமுறைகள் பற்றி பாடல் பாடி வெளியிட்ட கானா பாலா..!!

Written By:

போக்குவரத்து விதிமுறைகள் பற்றி பாடகர் கானா பாலா பாடிய விழிப்புணர்வு பாடல் சி.டியை காவல் துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதம் வெளியிட்டார்.

போக்குவரத்து விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட கானா பாலா.!!

போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க தமிழக காவல் துறை பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

போக்குவரத்து விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட கானா பாலா.!!

இதில் திரைப்பட பிரபலங்கள் பலரும் பங்கேற்று, போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களில் அவ்வப்போது நடித்து வருகின்றனர்.

போக்குவரத்து விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட கானா பாலா.!!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்களால் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் விபத்து நடப்பதும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களால் நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பது தொடர் கதையாகி வருகின்றன.

போக்குவரத்து விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட கானா பாலா.!!

போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்க கானா பாடல் ஒன்றை வெளியிட காவல் துறை முடிவு செய்தது.

போக்குவரத்து விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட கானா பாலா.!!

இதற்கான விழிப்புணர்வு பாடலை திரைப்பட பாடகர் கானா பாலா ஒலி மற்றும் ஒளி வடிவில் தற்போது தயாரித்துள்ளார். அதை நேற்று சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேற்று வெளியிட்டார்.

போக்குவரத்து விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட கானா பாலா.!!

"சாலை விதிகளை மதிச்சு பாரு.. சாவே இல்லாம நிலைச்சு வாழு.." என்று தொடங்கும் இந்த பாடலில் மஞ்சள் கோட்டை தாண்டாதீங்க, வெள்ளை கோட்டை மீறாதீங்க, குடித்து விட்டு வண்டி ஓட்டாதீஙக, சிக்னலை மதிச்சு நில்லுங்க, ஹெல்மெட் அணியுங்க, சீட் பெல்ட் இல்லாம கார் ஓட்டாதீங்க என பல சாலை விதிகள் குறித்த வரிகள் இடம்பெற்றுள்ளன.

போக்குவரத்து விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட கானா பாலா.!!

மேலும் இந்த பாடலின் ஒளி வடிவமும், இதற்காக நடைபெற்ற அறிமுக விழாவில் திரையிடப்பட்டது. அதில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த பல்வேறு காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

போக்குவரத்து விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட கானா பாலா.!!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கானா பாலா தான் இனிமேல் பணத்திற்காக சினிமாவில் பாடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளதாக கூறினார்.

போக்குவரத்து விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட கானா பாலா.!!

மக்கள் நலன் சார்ந்த காரியங்களுக்காக மட்டுமே இனி இசை வாழ்வில் ஈடுபட உள்ளதாகவும், அதையும் இலவசமாக செய்வேன் எனவும் கானா பாலா தெரிவித்தார்.

போக்குவரத்து விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட கானா பாலா.!!

திரைப்படங்கள் மூலமாக சென்னை கானா பாடல்களை உலகளவில் பிரபலமாக்கிய முக்கியமானவர்களில் ஒருவர் கானா பாலா.

திரைத்துறையில் இருந்து விலகினாலும், கானா பாலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Gaana Bala Releases a gaana song for Traffice Awareness with Chennai City Police Commissioner. Click for Details...
Story first published: Wednesday, June 14, 2017, 13:04 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark