அமெரிக்காவே ஆடிப்போகும் இன்ஜினை தயாரித்த இஸ்ரோ! நெல்லையில் நடந்த ரகசிய சோதனை வெற்றி!
இஸ்ரோ அடுத்த சில ஆண்டுகளில் விண்வெளிக்கு முதல்முறையாக மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ககன்யான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் அடுத்த மிகப்பெரிய திட்டமாக இந்த திட்டம் தான் இருக்கும் நிலையில், இந்த திட்டத்திற்கான 6வது ஸ்டேஜ் இன்ஜின் தற்போது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பல்வேறு விதமான சாதனைகளை செய்து வருகிறது. இதன்படி இஸ்ரோவின் அடுத்த மிகப்பெரிய கனவு திட்டமாக இருப்பது ககன்யான் திட்டம் தான் இந்த திட்டத்தின் படி பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்திற்கு மனிதர்களை கொண்டு சென்று அவர்கள் அங்கு ஆய்வு நடத்த மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

இதை வெற்றிகரமாக செய்வதற்காக பல்வேறு விதமான சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே முதற்கட்ட சோதனை வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட சோதனைக்காக தற்போது இஸ்ரோ தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த பயணத்திற்கான முழுமையான சோதனைகள் அவ்வப்போது பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி பூமியிலிருந்து விண்வெளிக்கு செல்லும் ராக்கெட் அங்கிருந்து பத்திரமாக மீண்டும் பூமிக்கு திரும்பி வருவதற்கு எஸ்.எம்.எஸ்.டி.எம் என்ற மாடுல் தேவைப்படுகிறது. இந்த மாடுலை செயல்படுத்துவதற்கான இன்ஜின் 6ம் கட்ட இன்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினை தற்போது இஸ்ரோ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
நெல்லை மாவட்டம் மஹிந்திரகிரியில் உள்ள இஸ்ரோ இந்தியன் சோதனை மையத்தில் வைத்து தான் இந்த இன்ஜின் எல்லாம் சோதனை செய்யப்பட்டது. சுமார் 1900 நொடிகள் இந்த இன்ஜின் செயல்பட வேண்டும் என்பதற்காக திட்டப்பிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் வெற்றிகரமாக திட்டமிட்ட இலக்கை இந்த இன்ஜின் எட்டி சோதனையில் வெற்றி பெற்றது.
இஸ்ரோ தொடர்ந்து இந்த ககன்யான் திட்டத்திற்காக கிரையோஜினிக் இன்ஜின், விகாஸ் இன்ஜின், பிஎஸ்4 இன்ஜின் என பல்வேறு வகையான இன்ஜின்களை தயாரித்து அதை சோதனை செய்து வருகிறது. அதன்படி தற்போது இந்த 6ம் கட்ட இன்ஜினும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சோதனை தொடர்ந்து அடுத்தக்கட்ட பணி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ககன்யான் திட்டத்திற்கான முதல் கட்ட சோதனையை ஏவுதலில் ஏவும் போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக ராக்கெட் உள்ளே இருக்கும் மனிதர்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் தப்பிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட எஸ்கேப் மாடுல் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்தது. இது தொடர்ந்து மனிதர்கள் இல்லாமல் ரோபோக்களை வைத்து சோதனை செய்யும் முயற்சி அடுத்த கட்டமாக நடக்க உள்ளது.
இரண்டாம் கட்டமாக முழுமையாக ககன்யான் திட்டம் மனிதர்கள் அல்லாமல் சோதனை செய்யப்படும் இதில் விண்வெளிக்கு ராக்கெட் ஏவுதல் மனிதர்கள் இருக்கும் கேப்சூல் விண்வெளியில் அடுத்த சில நாட்களுக்கு சோதனை செய்தல் மீண்டும் பத்திரமாக அந்த கேப்சூல் பூமிக்கு திரும்புதல் உள்ளிட்ட பல்வேறு விதமான சோதனைகள் செய்யப்படும். இந்த சோதனைகள் எல்லாம் வெற்றியடையும் பட்சத்தில் இஸ்ரோ ககன்யான் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தயாராகிவிடும்.
இந்த ககன்யான் திட்டத்திற்காக விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது இந்தப் பயிற்சிகள் முடிந்த பிறகு அவர்கள் சுகன்யான் திட்டத்திற்காக விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டு இறுதி அல்லது மத்தியில் ககன்யான் திட்டம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய விண்வெளி ஆய்வுமயமான இஸ்ரோ ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் முனைப்பாக இருந்து வருகிறது. பல்வேறு விதமான சோதனைகளில் வெற்றியை சந்தித்து வரும் இடையில், ககன்யான் திட்டமும் வெற்றிகரமாக நடந்து இந்தியா விண்வெளியில் அடுத்த மைல்கல்லை எட்டி பிடிக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications








