இஸ்ரோவில் 1 மணி நேரம் நடந்த உச்சகட்ட பரபரப்பு! மீண்டும் ககன்யான் சோதனை ஏவுதலை வெற்றிகரமாக செய்து சாதனை!

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கான இன்று நடந்த சோதனை முயற்சியை வெற்றிகரமாக முடிந்தது.8.45 மணிக்கு ஏவுதலில் பிரச்சனை ஏற்பட்டதை உடனடியாக சரி செய்து மீண்டும் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இஸ்ரோ ககன்யான் என்ற விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கனவு திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது. இந்த ககன்யான் திட்டம் மூலம் மூன்று விண்வெளி வீரர்களை தேர்வு செய்து அவர்களை ராக்கெட் மூலம் சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்திற்கு விண்வெளிக்கு அனுப்பி அங்கு மூன்று நாட்கள் அவர்களை தங்க வைத்து ஆய்வு செய்வார்கள். பின்னர் அவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு கொண்டு வருவது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

gaganyaan test flight launch

இந்தத் திட்டத்திற்காக LVM-3 ராக்கெட்டில் மாற்றங்களை செய்து அதில் மனிதர்கள் பயணிக்கும் படியாக வடிவமைத்துள்ளது. இதில் மனிதர்கள் அமர்ந்து செல்லும் க்ரூ மாடுல் ஒன்றை உருவாக்கி அதை பொருத்தியுள்ளது.மேலும் பயணத்தின் போது ஏதாவது பிரச்சனை என்றால் இடையிலேயே இந்த மிஷன் நிறுத்தப்பட்டு ராக்கெட் உள்ளே இருக்கும் மனிதர்கள் பத்திரமாக மீண்டும் பூமிக்கு திரும்பும் க்ரூ எஸ்கேப் மாடல் ஆகிய இரண்டு விதமான புதிய அம்சங்கள் இந்த ராக்கெட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதை சோதனை செய்யும் விதமாக இஸ்ரோ இன்று தனது க்ரூமாடுல் மற்றும் க்ரூஎஸ்கேப் மாடுல் ஆகியவற்றை சோதனை செய்தது. இதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சாலிட் புரொபஷனல் சிஸ்டம் என்ற ஒரே ஸ்டேஜ் ராக்கெட் மூலம் இந்த க்ரூ மாடுல் மற்றும் எஸ்கேப் மாடுல் ஆகிய பொருத்தப்பட்டு ஏவுதலுக்கு தயாராக இருந்தது. இந்திய நேரப்படி சரியாக காலை 8 மணிக்கு இந்த ஏவுதல் திட்டமிடப்பட்டிருந்தது.

gaganyaan test flight launch

ஆனால் வானிலையில் உள்ள பிரச்சனை காரணமாக முதலில் 8.30 மணிக்கு ஏவுதல் நேரம் மாற்றப்பட்டது. மேலும் அதன் பின்னரும் அது மாற்றியமைக்கப்பட்டு 8.45 மணிக்கு ஏவதிட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அப்பொழுது ஆட்டோமெட்டிக் லாஞ்ச் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சரியாக ஏவுதலுக்கு 5 நொடிக்கு முன்பு இதன் ஏவுதல் தானியங்கியாக ஹோல்டு பொசிஷனிற்கு சென்றது.

பின்னர் இந்த ஏவுதலில் பிரச்சனை இருப்பதாகவும், இதனால் தற்போது ஏவுதல் நடக்கவில்லை எனவும் இஸ்ரோ சேர்மன் அறிவித்தார். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது. என உடனடியாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய துவங்கினர். இதில் ஒரு சிறிய தொழிற்நுட்பம் தடையாக இருந்ததை உடனடியாக கண்டறிந்தனர். உடனடியாக அதை சரி செய்தனர். பின்னர் மீண்டும் ராக்கெட் ஏவுதலுக்காக தயார் செய்யப்பட்டது. ராக்கெட்டில் ஏவுதல் முயற்சியில் ரிலீஸ் ஆன கேஸ்களை மீண்டும் ரீஃபில் செய்தனர்.

gaganyaan test flight launch

அதன் பின் திட்டமிட்டபடி ராக்கெட் மீண்டும் ஏவுதலுக்கு தயாரானது. இதை கம்யூட்டர்கள் கணித்து அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்தது. இதையடுத்து இஸ்ரோ மீண்டும் இந்த ராக்கெட்டை ஆட்டோமெட்டிக் ஸிக்கோன்ஸ் முறையில் ஏவ அங்கீகாரம் அளித்தது. அதன்படி ராக்கெட்டும் விண்ணில் ஏவப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் உயரத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டு அங்கு இந்த மிஷன் திடீரென நிறுத்தப்பட்டது.

உடனடியாக இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த க்ரூ எஸ்கேப் மாடுல் ராக்கெட்டில் உள்ளே உள்ள மனிதர்களை எப்படி பத்திரமாக மீட்டுக்கொண்டு பூமிக்கு திரும்புமே அதேபோல சரியாக 17 கி.மீ உயரத்திலிருந்து பாராசூட் மூலம் கீழே இறங்கி சரியாக 2.5 கி.மீ உயரத்தில் வரும் போது மெயின் பராசூட் திறக்கப்பட்டு. இது திட்டமிட்டபடி மெதுவாக இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்தது. இதை இந்திய கடற்படையினர் மீட்டுக் கொண்டு வந்து மீண்டும் இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள்.

தற்காக ஏற்கனவே இந்திய கடற்கபடை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி செய்ய வேண்டும் என்ற டிரையலும் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இதன்படி கடற்படை கப்பல்கள், படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் இது மீட்கப்பட்டு மீண்டும் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்படும். இந்திய கடற்படையினரும் இதை வெற்றிகரமாக கண்டுபிடித்து மீட்கும் பணியில் இறங்கிவிட்டனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது. சமீபத்தில் சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 ஆகியவற்றை தொடர்ந்து தற்போது இந்த ககன்யான் சோதனை முயற்சியையும் வெற்றிகரமாக முடித்துள்ளது. மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டு இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிவிடும்.

Article Published On: Saturday, October 21, 2023, 11:23 [IST]
English summary
Gaganyaan mission isro successfully launches test flight
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X