594கிமீ நீளத்தில் உ.பி-யில் மற்றுமொரு விரைவுச்சாலை!! ஆட்சியை தக்கவைக்க பக்கா ப்ளான் உடன் ஆளும் பாஜக அரசு!

உத்திர பிரதேசத்தில் 594கிமீ நீளத்திற்கு மேலும் ஒரு விரைவு சாலையை அமைக்கவுள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

594கிமீ நீளத்தில் உ.பி-யில் மற்றுமொரு விரைவுச்சாலை!! ஆட்சியை தக்கவைக்க பக்கா ப்ளான் உடன் ஆளும் பாஜக அரசு!

இந்தியாவில் சாலைகள் விரிவாக்கத்தில் மத்தியில் ஆளும் ஒன்றிய அரசாங்கம் முனைப்புடன் செயல்பட்டு வருவதை பார்த்து கொண்டுதான் வருகிறோம். அதிலும் குறிப்பாக, உத்திர பிரதேச மாநிலத்தில் விரைவு சாலைகள் அமைக்கும் பணிகள் புதியது புதியதாக துவங்கப்பட்டு வருகின்றன.

594கிமீ நீளத்தில் உ.பி-யில் மற்றுமொரு விரைவுச்சாலை!! ஆட்சியை தக்கவைக்க பக்கா ப்ளான் உடன் ஆளும் பாஜக அரசு!

சில வாரங்களுக்கு முன்பு இந்த மாநிலத்தில் திறக்கப்பட்ட பூர்வாஞ்சல் விரைவு சாலையை பற்றி செய்திகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்திருப்பீர்கள். ஏனெனில், அந்த சாலையின் தரத்தினை வெளிக்காட்டும் விதமாக, பிரதமர் மோடி அவர்கள் இந்த விரைவு சாலையில் ஹெலிகாப்டரில் வந்திறங்ககியது அந்த சமயத்தில் நாடு முழுவதும் ட்ரெண்டாகியது.

594கிமீ நீளத்தில் உ.பி-யில் மற்றுமொரு விரைவுச்சாலை!! ஆட்சியை தக்கவைக்க பக்கா ப்ளான் உடன் ஆளும் பாஜக அரசு!

இந்த நிலையில், உத்திர பிரதேசத்தில் 594கிமீ நீளத்திற்கு மேலும் ஒரு விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளது. உத்திர பிரதேச மாநிலம், மீரட் நகரத்தின் பிஜௌலி கிராமத்தில் இருந்து ஷாஜஹான்பூர் வழியாக பிரயாக்ராஜின் ஜூடப்பூர் தண்டு கிராமம் வரையில் அமைக்கப்பட உள்ள இந்த கங்கா விரைவு சாலைக்கு நேற்று (டிச.18) பிரதமர் மோடி நேரில் சென்று அடிக்கல் நாட்டினார்.

594கிமீ நீளத்தில் உ.பி-யில் மற்றுமொரு விரைவுச்சாலை!! ஆட்சியை தக்கவைக்க பக்கா ப்ளான் உடன் ஆளும் பாஜக அரசு!

இந்த நிகழ்ச்சியில் உத்திர பிரதேச மாநில முதல்வரும், மற்ற மத்திய & மாநில அதிகாரிகளும் பிரதமருடன் கலந்து கொண்டனர். ஏறக்குறைய 10 முக்கிய நகரங்களை ஒருங்கிணைக்கும் இந்த விரைவுச்சாலை, மிக முக்கிய நகரமான லக்னோவை ஒருங்கிணைக்காதது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை லக்னோவிற்கு என்று தனியாக விரைவுச்சாலை திட்டம் ஏதேனும் இருக்கலாம்.

594கிமீ நீளத்தில் உ.பி-யில் மற்றுமொரு விரைவுச்சாலை!! ஆட்சியை தக்கவைக்க பக்கா ப்ளான் உடன் ஆளும் பாஜக அரசு!

இதற்கான மொத்த செலவாக ரூ.36,200 கோடி கணிக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்படும் விலையே ஆகும். இந்த 594கிமீ விரைவுச்சாலை முழுவதுமாக சுங்கச்சாவடிகளின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. மேலும், இதன் மூலமாக கிடைக்கும் தொகையை வைத்தே எதிர்காலத்தில் இந்த விரைவுச்சாலை பராமரிக்கப்பட உள்ளது. இந்த மாநிலத்தின் மற்ற சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை இந்த விரைவுச்சாலை பெரிய அளவில் குறைக்கும்.

594கிமீ நீளத்தில் உ.பி-யில் மற்றுமொரு விரைவுச்சாலை!! ஆட்சியை தக்கவைக்க பக்கா ப்ளான் உடன் ஆளும் பாஜக அரசு!

இத்துடன், ஷாஜஹான்பூரில் இந்த விரைவு சாலையில், ஒரு பகுதியாக 3.5 கிமீ நீளத்தில் ஓடுபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது விமானப்படை விமானங்கள் அவசரமாக தரையிறங்கவும், அங்கிருந்து புறப்படவும் உதவியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையால் ஒன்று மட்டும் நிச்சயம், மாநிலத்தின் தொழிற்துறை, வர்த்தகம், வேளாண்மை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேம்பாடு அடையும்.

594கிமீ நீளத்தில் உ.பி-யில் மற்றுமொரு விரைவுச்சாலை!! ஆட்சியை தக்கவைக்க பக்கா ப்ளான் உடன் ஆளும் பாஜக அரசு!

உத்திர பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு ஆளும் பாஜக அரசுக்கு இந்த விரைவுச்சாலைகள் மிகவும் சாதகமானவைகளாக அமைந்துள்ளன. உத்திர பிரதேச விரைவுச்சாலை & தொழிற்துறை மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புதிய கங்கா விரைவுச்சாலைக்கான 94% நிலங்கள் கடந்த ஒரு வருடத்தில் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

594கிமீ நீளத்தில் உ.பி-யில் மற்றுமொரு விரைவுச்சாலை!! ஆட்சியை தக்கவைக்க பக்கா ப்ளான் உடன் ஆளும் பாஜக அரசு!

கங்கா விரைவுச்சாலை திட்டத்திற்கு உ.பி மாநில அரசு கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அனுமதி அளித்தது. அப்போது இதற்கான செலவு தொகையாக ரூ.36,230 கோடி நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பிறகு பிரதமர் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். கங்கா விரைவுச்சாலை திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த திட்டத்தில் சாலை மட்டுமின்றி, சாலையை ஒட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளும் நடப்பட உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ganga expressway foundation stone laid by pm modi estimated cost 36000 crore details
Story first published: Sunday, December 19, 2021, 3:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X