Garib Rath Vs Rajdhani Express என்ன வித்தியாசம்? எதுல டிக்கெட் விலை கம்மி?

இந்திய ரயில்வே தனது சேவையை மேம்படுத்துவதற்காக பல்வேறு மாற்றங்களை ரயில்வே போக்குவரத்தில் அவ்வப்போது செய்து கொண்டே வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தே பாரத் என்ற மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரயிலை அறிமுகப்படுத்தினர்.

ஆனால் தற்போது இந்தியாவில் வந்தே பாரத் ரயில் 6-7 மணிநேர பயணத்தைப் பகல் நேரங்களில் செல்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. நீண்ட தூரப் பயணம்/இரவு பயணத்திற்கு வந்தே பாரத் ரயில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. நீண்ட தூரப் பயணத்திற்குச் சிறந்த ரயில் என்றால் அது ராஜ் தானி மற்றும் கரீப் ரத் என்ற இரண்டு வகை ரயில்கள் தான் இது எது பெஸ்ட் என்று தான் பார்க்கப்போகிறோம்.

Garib Rath Vs Rajdhani

கரீப் ரத்: மத்திய அரசு கரீத் ரத் என்ற ரயிலை முதன் முறையாகக் கடந்த 2006ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த ரயில் உருவாக்கப்பட்டதற்கு நோக்கம். ஏழைகளும் ஏசிரயிலில் பயணிக்க வேண்டும் என்பதற்காகத் தான் வழக்கமான ரயிலில் ஏசி பெட்டியில் பயணிக்க அதிகம் செலவாகும்.

அதனால் கரீப் ரத் ரயிலை உருவாக்கும் போதே மற்ற ஏசி பெட்டிகளை போல இல்லாமல் நெருக்க நெருக்கமாக இருக்கைகளை அமைத்து ஒரே பெட்டியில் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும்படி உருவாக்கப்பட்டது. இதனால் டிக்கெட் விலையைக் குறைந்த விலையில் கொடுக்க முடிந்தது.

Garib Rath Vs Rajdhani

கரீப் ரத் என்ற பெயருக்கு அர்த்தமே ஏழைகளுக்கான ரதம் என்று தான் பொருள். தற்போது இந்தியா முழுவதும் 26க்கும் மேற்பட்ட ரூட்களில் கரீப் ரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீண்ட தூரப் பயணம், குறைவான பட்ஜெட், ஏசி பெட்டியில் பயணம் வேண்டும் என்றால் கரீப் ரத் நல்ல சாய்ஸ்.

கரீப் ரத் ரயில் குறைவான டிக்கெட் விலை என்பதால் இதில் உணவுப் பொருள் அடங்காது. அதே நேரம், சில கரீப் ரத் ரயிலுக்கு ரயில் பாதையில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் சீறிப் பாயும் திறன் கொண்டதாக இருக்கிறது.

Garib Rath Vs Rajdhani

ராஜ்தானி: இந்த ரயிலைப் பற்றி உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகர் பகுதியிலிருந்து நாட்டின் தலைநகரான டில்லியை இணைக்கும் ரயில் இது. இந்த ரயிலுக்குத் தான் ரயில் பாதையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்த ரயிலும் முழுவதும் ஏசி பெட்டியால் ஆனாது. ஆனால் கரீப் ரத் போல இல்லாமல் வசதியாக செல்லக்கூடிய பெட்டிகள் இது. இங்குப் பயணிகளுக்கு உணவும் வழங்கப்படும். சைவம் மற்றும் அசைவ உணவுகளைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

காலையில் டீ, காலை உணவு, மதியம் சாப்பாடு, மாலை டீ மற்றும் இரவு உணவு என அனைத்தையும் இந்த ரயிலிலிருந்தபடியே ஆர்டர் செய்ய முடியும். தற்போது இந்தியா முழுவதும் 24 ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வருகின்றன.இந்த ரயில் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே நிறுத்தப்பட்டும். பெரிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படுவதால் மக்கள் அதிகமாக இதைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த இரண்டு ரயிலையும் ஒப்பிடும் போது இரண்டும் நீண்டதூர ரயில்கள் தான் என்றாலும் இரண்டும் வேறு வேறு தன்மை கொண்டது குறைந்த பட்ஜெட் பயணம் தான் முக்கியம் என்றால் கரீப் ரத் ரயிலையும், கொஞ்சம் சொகுசான பயணம் என்றால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் சிறந்தது. இது குறித்த உங்கள் கருத்துக்களை காணலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, April 10, 2023, 16:00 [IST]
English summary
Garib rath vs rajdhani express comparison on price and facilities
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X