பளபளக்கும் எலக்ட்ரிக் கார் உடன் நிற்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா... அந்த ஹிட்டான படத்தில் நடிச்சவரா?

நடிகர் சூரி (Actor Soori) நடிப்பில் வெளியாகி கவனத்தை பெற்ற கருடன் (Garudan) திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பிரபல நடிகர் சசிகுமாரும் நடித்திருந்த இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் (Unni Mukundan)-உம் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பார். இன்னும் சொல்லப்போனால், இவர்தான் படத்தின் முக்கியமான வில்லன் கதாபாத்திரம் ஆகும். கருடனை தொடர்ந்து இவர் நடித்த 'மார்கோ' திரைப்படம் சமீபத்தில்தான் திரைக்குவந்த நிலையில், நடிகர் உன்னி முகுந்தன் பிராண்ட்-நியூ பி.எம்.டபிள்யூ (BMW) கார் ஒன்றை வாங்க தயாராகி வருகிறார்.

இந்தியாவில் மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனத்தின் கார்களுக்கு அடுத்து, மக்கள் பலரால் மிகவும் விரும்பப்படும் லக்சரி கார் நிறுவனமாக விளங்கும் பிஎம்டபிள்யூ, நம் நாட்டில் ஒவ்வொரு மாதத்திலும் நூற்றுக்கணக்கான கார்களை விற்பனை செய்து வருகிறது. இதன் காரணமாக, உலகளவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு நம் இந்தியா ஓர் முக்கியமான சந்தை ஆகும்.

unni mukundan takes test drive

இந்த நிலையில், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் பிஎம்டபிள்யூ கார் கஸ்டமராக மாற உள்ளார். இன்னும் சொல்லப்போனால், இந்த நடிகர் வாங்க இருப்பது பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். கேரளாவின் கொச்சியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom)-க்கு சென்ற நடிகர் உன்னி முகுந்தன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ் (IX) என்கிற எலக்ட்ரிக் காரை ஓட்டி பார்த்துள்ளார்.

அதாவது, ஐ.எக்ஸ் காரை வாங்குவதற்காக நடிகர் உன்னி முகுந்தன் ஷோரூமுக்கு சென்றிருப்பார் என நினைக்கிறோம். காரை வாங்குவதற்கு முன் ஒருமுறை டெஸ்ட் டிரைவ் (Test Drive) செய்து பார்த்துவிடலாம் என சாலையில் ஓட்டி பார்த்துள்ளார். இதுதொடர்பாக யூடியூப் (Youtube)-இல் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காட்சித்தரும் சில்வர் நிறத்திலான பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் கார் டெஸ்ட் டிரைவ்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் காராகும்.

unni mukundan takes test drive

காரின் சிவப்பு நிற நம்பர் பிளேட்டில் ஷோரூமின் பெயர் கொண்ட வாகன பதிவெண் இடம்பெற்றிருப்பதை காணலாம். நடிகர் உன்னி முகுந்தன் வேறொரு புத்தம் புதிய ஐஎக்ஸ் காரை தான் வாங்கியிருப்பார் என எதிர்பார்க்கிறோம். பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் இதுதான் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் ஆகும்.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐ.எக்ஸ் கார் முதல் நாளிலேயே நிர்ணயிக்கப்பட்ட யூனிட்கள் அனைத்தும் விற்று போனது. பின்னர் சில வாரங்கள் கழித்து மீண்டும் இந்த காருக்கான முன்பதிவுகளை பிஎம்டபிள்யூ துவங்கியது. மார்க்கெட்டில் தற்சமயம் எக்ஸ்டிரைவ் 40 மற்றும் எக்ஸ்டிரைவ் 50 என இரு விதமான வேரியண்ட்களில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது.

unni mukundan takes test drive

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.21 கோடி மற்றும் ரூ.1.40 கோடியாக உள்ளன. மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் காரில் 71kWh திறன் பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 425கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது, பிஎம்டபிள்யூ நிறுவனம். 0-இல் இருந்து 100kmph வேகத்தை இந்த காரில் வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் விலையாக மேலே குறிப்பிடப்பட்டவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். நடிகர் உன்னி முகுந்தன் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தார் என்று மட்டுமே தகவல்கள் வெளியாகி உள்ளதே தவிர்த்து, அவர் காரை வாங்கினார் என எந்த தகவலும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, January 2, 2025, 17:36 [IST]
English summary
Garudan movie actor unnikrishnan nair takes test drive of bmw ix electric car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X