உங்க கார் கியரில் இப்படி விஷயத்தை பார்க்கவே முடியாது! ஆனா காஸ்ட்லியான கார்ல மட்டும் இருக்கும் ஏன் தெரியுமா?

நாம் கார்களில் பயணிக்கும் போது மேனுவல் கியர் கொண்ட கார்களில் புதிதாக கார் ஓட்டுபவர்கள் கார் எந்த கியரில் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்கு மிகப்பெரிய சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சில கார்களில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் இந்த தகவல் வந்தாலும் கியர்களில் படத்தில் உள்ளது போல எந்த கியரில் கார் இருக்கிறது என்பதை கண்டறியும் கருவி பெரும்பாலும் பொருத்தப்படுவதில்லை இது ஏன் தெரியுமா?

நாம் எல்லோரும் புதிதாக கார் ஓட்டி படிக்கும்போது நமக்கு இருந்து மிகப்பெரிய பிரச்சனை கார் தற்போது எந்த கியரில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முதல் கியர், மூன்றாவது கியர் மற்றும் டாப் கியர் அனைத்தும் மேல் பகுதியிலும் இரண்டு நான்கு ஆகிய கியர்கள் கீழ் பகுதியில் இருக்கும் போது சிலர் முதல் கியரை போட்டு காரை நகர்த்துவதாக நினைத்து மூன்றாம் கியரில் காரை நகர்த்துவார்கள்.

gated manual gearbox

சிலர் கார் டிரைவர்கள் இரண்டாம் கியரில் நன்றாக வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் போது மூன்றாம் கியரை மாற்றுவதற்கு பதிலாக டாப் கியரையோ அல்லது முதல் கியரையோ மாற்றி விடுவார்கள். இன்று எல்லோருக்கும் இதுக்கும் மிகப்பெரிய பிரச்சனை தற்போது கியர் பொசிஷன் எந்த இடத்தில் இருக்கிறது என்பது தெரியாதது தான். நன்கு பழகியவர்களுக்கு காரின் ரெஸ்பான்ஸ் வைத்தே கார் எந்த கீயரில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது நன்கு தெரியும்.

ஆனால் அதிக விலை கொண்ட அதிக பெர்ஃபார்மன்ஸ் கொண்ட கார்களில் நீங்கள் பார்த்திருந்தால் கீழ் பகுதியில் எந்த கியரில் கார் சென்று கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக தெரியும்படி கேட் ஒன்றை அமைத்து இருப்பார்கள் இதில் குறிப்பிட்ட இடத்தில் கியர் ராடு இருந்தால் வாகனம் அந்த கியரில் சென்று கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக டிரைவரால் உணர முடியும்.

gated manual gearbox

ஆனால் சிறிய ரக கார்களில் இப்படியான கியர் கேட் என்பது இல்லை. பலருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது ஏன் உயராக கார்களில் மட்டும் இந்த கியர் கேட் என்பது பொருத்தப்படுகிறது. மற்ற கார்களில் இல்லை என்பது பலர் கேள்வியாக இருக்கிறது. இதற்கு நாம் மேனுவல் கியர் சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் மேனுவல் கியர் சிஸ்டத்தில் கியரை மற்றும் ராடு எப்பொழுதும் கீழே இருக்கும் கியர் பாக்ஸூடன் இணைப்பிலேயே இருக்காத சற்று இடைவெளியில் தான் இருக்கும். அதனால் நீங்கள் ஆடிக்கொண்டு தான் இருக்கும். நேரடியாக எந்தவித இடைவெளியும் இல்லாமல் கியர் பாக்ஸ் தயாரிப்பது என்பது அதிக பொருட்செலவு கொண்டதாகும். இதற்காக அதிகமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் செலவு செய்து அந்த கியர் பாக்ஸ் தயார் செய்ய வேண்டும்.

அப்படி தயார் செய்தால் வாகனத்தின் விலையும் அதிகரிக்கும் இதன் காரணமாகவே இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக சாதாரண கியரையை தயாரித்து வாகனங்களில் பொருத்துகிறார்கள். இதனால் நீங்கள் இந்த இடத்தில் கியர் கேட் என்ற பொருளை வைத்து விட்டால் நீங்கள் கியர் மாற்றும்போது இது சிரமத்தை ஏற்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

அது மட்டுமல்லாமல் கியர் கேட்டில் இந்த கியரில்தான் வாகனம் பயணித்துக் கொண்டிருக்கிறது என நீங்கள் உறுதியாக சொல்ல முடியாது. வாகனம் முதல் கியரில் இருக்கும் போது கியர் ராடு மூன்றாவது கேட்டிலும் இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. கியர் ராடுக்கு கீழே உள்ள பாதிக்கும் உள்ள இடைவெளியை குறைத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

அதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இப்பொழுது குறைந்த விலை கார்களில் இப்படியான கியர் கேட்டை பொருத்துவதே இல்லை. இது என்னதான் டிரைவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றாலும் குறைந்த விலை கார்களில் இதை பொருத்துவது என்பது வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து நிறைந்ததாக இருக்கும் என்பதால் இதை அவர்கள் செய்வதே இல்லை.

அதிக விலை கொண்ட கார்களில் எல்லாம் கியர் பாக்ஸை நேரடியாக கியர் ஆடிலிருந்து பெரிய அளவில் இடைவெளி இல்லாமல் அதிக பொருட்ச அளவில் தயார் செய்து விடுவார்கள். அவர்களுக்கு காரின் விலை என்பது மிகப்பெரிய விஷயம் அல்ல காரில் உள்ள அம்சங்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள் என்பதால் உயர்ரக கார்களில் அதிக பெர்பார்மன்ஸ் கொண்ட கார்களில் மட்டுமே இதை காண முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படியாக கியர் பகுதியில் இருக்கும் கேட் என்பது இன்று பலருக்கு முக்கிய தேவையாக இருந்தாலும் இதை குறைந்த விலை கார்களில் கொண்டு வருவது என்பது சாத்தியமில்லாத ஒரு விஷயமாக இருக்கிறது. என்னதான் தொழில்நுட்பம் மறந்து விட்டாலும் இது பற்றி இதுவரை ஆட்டோமொபைல் துறை பெரிய அளவில் ஆராய்ச்சிகளை செய்யவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 13, 2024, 17:38 [IST]
English summary
Gated manual gearbox how it works full explanation
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+