கௌதம் அதானியின் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பார்த்து இருக்கீங்களா? இதெல்லாம் அவருக்கு சாதாரண விஷயம்...
உலகின் பெரும் பணக்காரரும், நமது இந்தியாவை சேர்ந்த தொழிலதிபருமான கௌதம் அதானி சமீபத்தில் மும்பையில் அவரது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ 730 எல்டி டிபிஐ சிக்னெச்சர் (BMW 730 LD DPE Signature) காரில் காட்சி தந்துள்ளார். இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
கௌதம் அதானியை பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். குஜராத்தில் பிறந்தவரான இவர் அதானி குழுமம் மற்றும் அதானி அறக்கட்டளையின் நிறுவனராகவும், தலைவராகவும் விளங்குகிறார். சில மாதங்களுக்கு முன்பு, உலகின் பெரும் பணக்காரராக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு அடுத்த 2வது இடத்தை பெற்ற போது கௌதம் அதானியை உலகமே திரும்பி பார்த்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் இந்த சந்தோஷம் அவருக்கு நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. அமெரிக்காவை சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான இண்டர்பர்க், பங்குகளை கையாளுவதிலும், கணக்குகளை சமர்பிப்பதிலும் கௌதம் அதானியின் குழுமம் இதுவரையில் இல்லாத அளவிற்கு கார்ப்பிரேட் வரலாற்றிலேயே மிக பெரிய மோசடியில் ஈடுப்பட்டு உள்ளதாக அதிரடியாக கடந்த ஜனவரியில் குற்றஞ்சாட்டியது.
இது நேரடியாக அதானியின் வணிகத்தை பாதிக்க, அடுத்த சில நாட்களிலேயே உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 2வது இடத்தில் இருந்து சரிந்தார். இந்த நிலையில், மும்பையில் பிஎம்டபிள்யூவின் விலையுயர்ந்த லக்சரி காரான 730 எல்டி டிபிஐ சிக்னெச்சர் காரில் கௌதம் அதானி காட்சி தந்துள்ளார். இருப்பினும் காரினுள் கௌதம் அதானி உள்ளாரா என்பதை தெளிவாக காண முடியவில்லை.

பாதுகாப்பிற்காக, கௌதம் அதானியின் பிஎம்டபிள்யூ காருக்கு அருகாமையிலேயே ஒரு கருப்பு நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் செல்வதை வீடியோவில் காணலாம். இதில் ஃபார்ச்சூனர் காரின் விண்ட்ஷீல்டில் "போலீஸ்" என குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே பதிவிடப்பட்டுள்ள இதுகுறித்த வீடியோவில் கௌதம் அதானியின் பிஎம்டபிள்யூ கார் மட்டுமின்றி, மும்பையில் இந்த குறிப்பிட்ட சாலையில் சென்ற மற்ற லக்சரி & ஸ்போர்ட்ஸ் கார்களையும் பார்க்க முடிகிறது.
பொதுவாகவே பெரும் பணக்காரர்கள் அதிகப்படியான பாதுகாப்பு உடனே பொது சாலையில் பயணிப்பர். ஆனால் கௌதம் அதானி பெரும்பாலும் குறைவான பாதுகாப்பு உடன் மட்டுமே பயணிப்பது வழக்கம் என கூறப்படுகிறது. கௌதம் அதானியிடம் உள்ள பிஎம்டபிள்யூ 730 எல்டி டிபிஐ சிக்னெச்சர் கார் ஆனது முந்தைய தலைமுறை பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரின் கூடுதல் லக்சரி வெர்சன் ஆகும்.

இந்த காரின் உள்ளே கேபின் ஆனது உயர் தரத்திலான பாகங்களால் வடிவமைக்கப்படுகிறது. குறிப்பாக, பிரத்யேகமான லெதரால் வடிவமைக்கப்படும் இருக்கைகளை பல்வேறு விதங்களில், தேவைக்கேற்ப மடக்கியும், நீட்டியும் கொள்ளலாம். இந்த பிஎம்டபிள்யூ காரில் 3.0 லிட்டர், 6-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 261.49 பிஎச்பி மற்றும் 620 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பிஎம்டபிள்யூ பிராண்டிலேயே இது விலையுயர்ந்த கார் ஆகும். இருப்பினும் கௌதம் அதானி போன்றோருக்கு இவ்வாறான கார் கூட சாதாரணமாக தான் தெரியும். ஏனெனில் சமீபத்தில்தான் இவர் ரூ.4 கோடியில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் லாங் வீல்பேஸ் காரை வாங்கி இருந்தார். கௌதம் அதானியிடம் ஃபெர்ராரி கலிஃபோர்னியா மற்றும் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
