எம்பி பதவியை இராஜினாமா செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர்... மொத்தமாவே இத்தனை கார்கள் தான் இருக்கா?
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், கடந்த சில மாதங்களாக கவுதம் கமீரின் பெயர் அடிக்கடி செய்திகளில் இடம்பெறுவதை பார்க்கலாம். இதற்கு முக்கிய காரணம், இந்த 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் கோப்பையை கவுதம் கம்பீரின் பயிற்சியில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது. மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடுகையில், கவுதம் கம்பீர் கொஞ்சம் விசித்திரமானவர் என்றுதான் சொல்ல வேண்டும். அதிகமாக சிரிக்க மாட்டார், வேலையில்தான் எப்போதும் முழு கவனமாக இருப்பார். கிரிக்கெட் வீரராக இருந்த காலத்தில் இருந்து தற்போது பயிற்சியாளராக மாறிய காலம் வரையில் அவரது கேரக்டரில் எந்த மாற்றமும் இல்லை.
கவுதம் கம்பீரின் இந்த பண்புதான் இந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளது என சொல்லலாம். மேலும், சர்வதேச இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கிரிக்கெட் வாழ்க்கையில் 2வது இன்னிங்க்ஸை ஆரம்பித்துள்ள கவுதம் கம்பீரிடம் சொகுசு கார்கள் என்று பார்த்தால், 3 கார்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.

பி.எம்.டபிள்யூ 530டி (BMW 530d): லக்சரியான வசதிகளுடன் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய தரமான பிஎம்டபிள்யூ கார் 5-சீரிஸ் ஆகும். அத்தகைய பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரின் டீசல் வேரியண்ட் தான் 530டி ஆகும். இந்த கார் தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இல்லை. ஏற்கனவே இதன் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்தியாவில் விற்பனையில் இருந்த சமயத்தில், இந்த பிஎம்டபிள்யூ காரில் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டது. அதிகப்பட்சமாக 261 எச்பி மற்றும் 620 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த பிஎம்டபிள்யூ காரின் நீளம் 4.93 மீட்டர்கள் மற்றும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2.97 மீட்டர்கள் ஆகும்.

ஆடி க்யூ5 (Audi Q5): ஆடி நிறுவனத்தின் மிட்-லெவல் லக்சரி எஸ்யூவி கார் இதுவாகும். விஐபிகள் பலருக்கு பிடித்தமான கார் இதுவாகும். இந்த ஆடி காரில் 2.0 லிட்டர் TFSI என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 249 எச்பி மற்றும் 370 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
ஆடியின் அடையாளமான குவாட்ரோ சிஸ்டத்தின் மூலமாக என்ஜினின் இயக்க ஆற்றல் ஆனது காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்லும் வகையில் வழங்கப்படுகிறது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை ஆடி க்யூ5 காரில் குறைந்தப் பட்சமாக 6.3 வினாடிகளில் எட்டி விடலாம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் 350டி (Mercedes-Benz GLS 350d): கிரிக்கெட்டர் கவுதம் கம்பீரிடம் உள்ள பென்ஸ் கார் இதுவாகும். இந்த காரில் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 286 எச்பி மற்றும் 600 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
மேலே கண்ட ஆடி காரை போல, மெர்சிடிஸின் 4மேட்டிக் டெக்னாலஜி மூலமாக இந்த காரில் என்ஜினின் இயக்க ஆற்றல் ஆனது காரின் 4 சக்கரங்களுக்கும் செல்கிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.32 கோடியில் இருந்து ரூ.1.37 கோடி வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாஜக எம்பி ஆகவும் கவுதம் கம்பீர் சில காலம் பணியாற்றினார் என்பதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். இவ்வாறு, அரசியல், கிரிக்கெட் என ஜொலித்துக் கொண்டிருப்பவரிடம் மூன்றே 3 லக்சரி கார்கள் மட்டுமே உள்ளன என்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை, வெளியில் தெரிந்தது இந்த 3 கார்களாக இருக்கலாம். தெரியாமல் இருப்பது எத்தனையோ...


Click it and Unblock the Notifications









