10 தலைமுறைக்கு சொத்து இருக்கும் ஒருவரை பகைச்சிக்கிட்டா இப்படித்தான்!! ரேமண்ட் சிஇஓ தானே இது?
கௌதம் சிங்கானியா (Gautam Singhania), இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களுள் ஒருவர். முகேஷ் அம்பானி, கௌதம் அதானிக்கு இணையாக கௌதம் சிங்கானியாவை சொல்வார்கள். அந்த அளவிற்கு மல்டி-மில்லியனராக விளங்கும் கௌதம் சிங்கானியா தான் பிரபலமான ரேமண்ட் குழுமத்தின் தலைவர் ஆவார். கடந்த சில வாரங்களாக, லம்போர்கினி நிறுவனத்தை தாக்கி பேசி செய்திகளில் இடம்பெற்று வருகிறார். அந்த வரிசையில் மற்றொரு சர்ச்சைக்குரிய விவாதத்துடன் கௌதம் சிங்கானியா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
கௌதம் சிங்கானியா போன்ற பெரும் தொழிலதிபர்களின் பொழுதுப்போக்குகளே வித்தியாசமானவைகளாக இருக்கும். அதாவது, யாரும் இல்லாத மைதானத்தில் 2,3 பேர்களுடன் கோல்ஃப் விளையாடுவது, இருட்டறையில் ஒரேயொரு விளக்கு வெளிச்சத்தில் ஸ்னூக்கர் விளையாடுவது போன்றதாக இருக்கும். அதேபோல், தங்களது விலையுயர்ந்த கார்களை ரேஸ் டிராக்கில் அதிவேகமாக ஓட்டி பார்ப்பதையும் வழக்கமாக கொண்டிருப்பர்.

இந்த பழக்கம் இந்திய பெரும் தொழிலதிபர் கௌதம் சிங்கானியாவிடமும் உள்ளது. பல விலையுயர்ந்த கார்களில் நிறைய தடவை இவர் பொது வெளியில் காட்சி தந்துள்ளார். இந்த நிலையில், ஒருவர் லம்போர்கினி ரெவல்டோ காரில் ரேஸ் டிராக்கில் ஃபெராரி எஸ்.எஃப்90 காருடன் பந்தயத்தில் ஈடுப்படும் வீடியோவை கௌதம் சிங்கானியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
லம்போர்கினி ரெவல்டோ vs ஃபெராரி எஸ்.எஃப்90 என்கிற தலைப்புடன் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவின் ஆரம்பத்தில், லம்போர்கினி காரை ஃபெராரி கார் எளிதாக முந்தி செல்கிறது. இதனால், ஃபெராரி கார் எளியதாக வெற்றி பெற்றது போல் தெரிந்தாலும், வீடியோவின் இறுதியில் அதிக பவரை ஜெனரேட் செய்து லம்போர்கினி ரெவல்டோ கார் ஃபெராரி எஸ்.எஃப்90 காரை முந்துவது காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "ஃபெராரி எஸ்.எஃப்90 மகுடத்தை எடுத்துக் கொண்டு லம்போர்கினி ரெவல்டோவை மிஞ்சுவதை காட்டும் வீடியோவை பார்த்தேன்! லம்போர்கினி, இது உங்கள் யுக்தியை மறுபரிசீலனை செய்வதற்கான நேரமாக இருக்கலாம்" என கௌதம் சிங்கானியா குறிப்பிட்டுள்ளார். இந்த லம்போர்கினி, ஃபெராரி கார் இடையேயான பந்தயத்தை யூடியூப்பில் முழுமையாக காணலாம்.
இந்த பந்தயத்திற்கு, "காளை மாடை (லம்போர்கினி) விட குதிரை (ஃபெராரி) வேகமானது", "வேகம் மீதான ஆர்வத்திற்கு எப்போதும் முடிவில்லை" என்றெல்லாம் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் மாத துவக்கத்தில் தனது லம்போர்கினி ரெவல்டோ கார் பிரேக் டவுன் ஆகி நடுரோட்டில் நின்றதில் இருந்து லம்போர்கினி கார்கள் மீது தொழிலதிபர் கௌதம் சிங்கானியா கோபத்தில் உள்ளார்.
கேப் கிடைக்கும் இடத்தில் எல்லாம் லம்போர்கினி கார்களை தாக்கி பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர், கடந்த அக்டோபர் மாதத்தில் சென்னையில் லம்போர்கினி கார் ஒன்றின் சக்கர ரிம் தனியாக கழன்று விழுந்ததை வைத்து, லம்போர்கினி கார்களின் தரம் இப்படி தான் உள்ளதா? என கேள்வியெழுப்பி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இவ்வாறான ஒரு வீடியோ கௌதம் சிங்கானியாவின் பார்வையில் பட்டுள்ளது.
1,965 கிலோ எடை கொண்ட லம்போர்கினி ரெவல்டோ காரில் 6.5 லிட்டர் வி12 ஹைப்ரீட் என்ஜின் பொருத்தப்படுகிறது. ட்யூயல்-கிளட்ச் கியர்பாக்ஸ் வாயிலாக என்ஜின் ஆற்றல் காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்கிறது. மறுப்பக்கம், 1,783 கிலோ எடை கொண்ட ஃபெராரி எஸ்.எஃப்90 காரில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போ வி8 ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதுவும், 8-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக என்ஜின் ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில், லம்போர்கினி ரெவல்டோ காருக்கும், ஃபெராரி எஸ்.எஃப்90 காருக்கும் ரேஸ் வைத்தால் எது வெற்றி பெறும் என்பது டிரைவர்களையும் பொறுத்தது ஆகும். தொழிலதிபர் கௌதம் சிங்கானியா லம்போர்கினி நிறுவனத்தின் மீது கடுமையான கோபத்தில் உள்ளார். இதனை சிங்கானியா உடன் இணைந்து பேசி லம்போர்கினி நிறுவனம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இல்லையேல், இந்தியாவில் லம்போர்கினியின் பாதி மார்க்கெட்டை கௌதம் சிங்கானியா காலி செய்துவிடுவார்.


Click it and Unblock the Notifications








