அப்பளம் போல நொறுங்கிய சொகுசு கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கௌதம் மேனன்..!!

Written By:

தமிழ் திரைத்துறையின் முன்னணி இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன், சென்னை அருகே நடந்த கார் விபத்தில் காயங்களுடன் உயிர்தப்பினார்.

கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கௌதம் மேனன்..!!

மின்னலே மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் உட்பட பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவில் இயக்கியுள்ளார்.

கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கௌதம் மேனன்..!!

இன்று அதிகாலை 3.30 மணியளவில் கௌதம் மேனன், காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தார்.

கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கௌதம் மேனன்..!!

அப்போது, சோலிங்கநல்லூர் போக்குவரத்து நிறுத்தம் அருகில் கௌதம் மேனின் கார் வந்தபோது, அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மீது கார் மோதியது.

கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கௌதம் மேனன்..!!

இந்த விபத்தில் இயக்குநர் கௌதம் மேனனின் ஆடம்பர காரின் முன்பக்கம் அடையாளம் தெரியாத வகையில் அப்பளம் போல நொறுங்கியது. மேலும் காரின் வலது பக்கவாட்டு பகுதியிலும் உராய்வு ஏற்பட்டது.

Recommended Video - Watch Now!
[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கௌதம் மேனன்..!!

வெளிப்புறத்தில் மட்டுமில்லாமல், காரின் உட்புறங்களிலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கௌதம் மேனன்..!!

அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் இயக்குநர் கௌதம் மேனன் உயிர் தப்பினார். பின்னர் கிண்டி போக்குவரத்து காவலர்கள் அவரை அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கௌதம் மேனன்..!!

தொடர்ந்து பல வெற்றி படங்களை அளித்து வரும் கௌதம் வாசுதேவ் மேனன், தற்போது விக்ரமின் நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கௌதம் மேனன்..!!

இவற்றுடன் தனுஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் வீகென்டு மச்சான் என்ற வெப் சிரீஸ் என பல திரைப்பட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கௌதம் மேனன்..!!

இதற்கிடையில் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த விபத்து, திரைப்பட பணிகளை பாதிக்காது என கௌதம் மேனன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கௌதம் மேனன்..!!

சென்னை சாலை கட்டமைப்பில் 61 இடங்கள் ஆபத்தான பகுதிகளாக உள்ளன, அதனை போக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கௌதம் மேனன்..!!

சாலை விபத்துகளுக்கான எண்ணிக்கையில் இந்தியளவில் தமிழ்நாடு தான் முதன்மை வகிக்கிறது.

மேலும் சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாவட்டங்களுக்கான பட்டியலில் சென்னை முதன்மை பெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Gautham Menon's Luxury Car Collided With a Tipper Lorry near Chennai. Click for Details...
Story first published: Thursday, December 7, 2017, 13:31 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark