மலையாளம்-தெலுங்கு படங்கள்ல மட்டுமே நடிச்சதால இந்த காரை வாங்கியிருப்பாங்களோ! தமிழ்ல இவங்கள எப்படி மிஸ் பண்ணாங்க
மலையாள திரை உலகைச் சேர்ந்த வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் காயத்ரி சுரேஷ். இவரே புதிதாக ஓர் காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் புதிய காரில் வலம் வரும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. பலரையும் ஆச்சரியப்படுத்தக் கூடிய வகையிலேயே அவர் வாங்கியிருக்கக் கூடிய கார் மாடல் உள்ளது. விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கியிருப்பாரோ என நினைத்துக் கொள்ள வேண்டாம்.
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பட்ஜெட் விலைக் கொண்ட கார் மாடல் ஒன்றையே அவர் வாங்கி இருக்கின்றார். டாடா அல்ட்ராஸ் ரேசர் பதிப்பு (Tata Altroz Racer Edition)-யையே அவர் வாங்கி இருக்கின்றார். இந்த காரைதான் அவர் வாங்கி இருக்கின்றார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தற்போது வெளியாகி இருக்கும் படங்களை வைத்து பார்க்கையிலேயே மலையாள நடிகை டாடா அல்ட்ராஸ் ரேசர் பதிப்பை வாங்கியிருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. அல்ட்ராஸ், ஓர் குட்டியான உருவம் கொண்ட ஹேட்ச்பேக் ரக கார கார் மாடல் ஆகும். மிக அதிக பிரீமியம் அம்சங்களுக்கு பெயர்போன காராகவும் அதுக் காட்சியளிக்கின்றது.
இதைவிட அதிக பிரீமியம் அம்சங்கள் மற்றும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டதாக அல்ட்ராஸ் ரேசர் பதிப்புக் காட்சியளிக்கின்றது. இதையே நடிகை தற்போது வாங்கி இருக்கின்றார். கோடிக் கணக்கான ரூபாய் சொத்துக்களைக் கொண்டிருக்கும் மலையாள நடிகை காயத்ரி சுரேஷ் இந்த காரை வாங்கி இருப்பதே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
இவர் மலையாளத்தில் மட்டும் அல்ல தெலுங்கு திரையுலகிலும் சில படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால், தமிழில் இவர் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. இவர் தமிழ் திரையுலகில் கால் தடம் பதித்தால் இவரின் மார்க்கெட் இன்னும் பெரிய அளவில் விரிவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நடிகை நயன்தாரா போல முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. காயத்ரி சுரேஷ் இடத்தில் ஏற்கனவே விலை உயர்ந்த கார் மாடல்கள் சில பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த பட்ஜெட் விலை டாடா காரை அவர் வாங்கி இருக்கின்றார்.

எளிமையான வாழ்க்கைக்கு மாறும் பொருட்டு இந்த காரை அவர் வாங்கியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. டாடா அல்ட்ராஸ் ரேசர் இந்தியாவில் ரூ. 9.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
இந்த பதிப்பின் வெளிப்புறத்தைப் போலவே உட்பக்கமும் ரேஸ் கார்களுக்கு இணையானதாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அந்தவகையில், காரின் வெளிப்பத்தில் இரண்டு வெள்ளைக் கோடுகள் வழங்கப்பட்டு இருப்பதை போல உட்பக்கத்தில் மூன்று கோடுகள் இருக்கைகள் உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டு இருக்கும், உடல் நிறத்தினாலான வண்ணம் மற்றும் வெள்ளை நிறத்தால் அவை இருக்கும்.
1.2 லிட்டர் டர்போசார்ஜட் ரெவட்ரோன் எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மட்டுமே இந்த கார் மாடலில் வழங்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பன்முக அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் ஒன்றாக அல்ட்ராஸ் காட்சியளிக்கின்றது. பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகிய ஆப்ஷன்களிலேயே இந்த கார் மாடல் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவே அதற்கு கணிசமான அளவு நல்ல வரவேற்பை இந்தியாவில் கிடைக்கச் செய்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








