கார்களுக்கான கண்ணாடி கூடாரம்... அடடா, இதத்தான்யா எதிர்பார்த்து காத்திருக்கேன்!

By Saravana

கார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய பிரச்னைகளில் ஒன்று சரியான நிறுத்துமிடம் இல்லாமல் இருப்பதுதான். பல லட்சம் போட்டு வாங்கிய கார் வெயிலிலும், மழையிலும் தெருவோரங்களில் நிறுத்தப்பட்டு பாதிப்புகளை ஏற்படுவதை கண்டு மனம் நொறுங்கி போவதுண்டு.

அத்துடன், தினசரி பயன்படுத்தும்போது அதனை துடைப்பதும் தினசரி நேரத்தை விரயமாக்குகிறது. இந்தநிலையில், தெருவோரங்களில் கார் நிறுத்துவோருக்கு வசதியாக ஓர் அருமையான கண்ணாடி கூடாரம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

கேஸ்பாக்ஸ்

கேஸ்பாக்ஸ்

இத்தாலியை சேர்ந்த நிறுவனம் கேஸ்பாக்ஸ் என்ற பெயரில் இந்த கண்ணாடி கூடாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

காருக்கு பாதுகாப்பு

காருக்கு பாதுகாப்பு

வெயில், மழை, தூசி மற்றும் பறவை எச்சங்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காருக்கு இது விடுதலை தரும்.

எளிதானது...

எளிதானது...

இந்த கூடாரத்தை திறப்பதும், மூடுவதும் வெகு எளிதானது. காரை நிறுத்துவதற்கும் மிக வசதியாக இருக்கும்.

ரிமோட் வசதி

ரிமோட் வசதி

கூடாரத்தை திறப்பதற்கு ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இயக்க முடியும்.

 காற்றோட்டம்...

காற்றோட்டம்...

இது கண்ணாடி கூடாரமாக இருந்தாலும் உள்ளே காற்றோட்டம் இருக்கும் விதத்தில் வசதியுடையது. இதனால், வெப்பத்தினால் அதிக பாதிப்பு ஏற்படாது.

டிசைன்...

டிசைன்...

இந்த கூடாரத்தின் கண்ணாடி மீது கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள முடியும். அத்துடன் விரும்பும் வண்ணத்திலும் தேர்வு செய்துகொள்ளலாம்.

விளக்கு வசதி

விளக்கு வசதி

மின் விளக்கு ஒன்றும் பொருத்திக் கொள்ள முடியும்.

பிரிப்பதும் எளிது

பிரிப்பதும் எளிது

எளிதாக இந்த கூடாரத்தை பிரித்து விரும்பும் இடத்தில் அமைத்துக் கொள்ளலாம். வாசலில் பெரிய இடவசதி உள்ளவர்கள் கூட இந்த கூடாரத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாம். அலங்காரமாக இருக்கும்.

பயன்பாடு

பயன்பாடு

கார் நிறுத்துவதற்கு மட்டுமின்றி, பிற சமயங்களில் சாவகாசமாக அமர்ந்து கொள்வதற்கும், உணவு உண்பதற்குமான இடமாக மாற்றிக் கொள்ள முடியும். அதற்கு மின் விசிறியும் கூட பொருத்திக் கொள்ளலாம்.

இதர வசதிகள்

இதர வசதிகள்

வாடிக்கையாளர் விருப்பத்தின்பேரில் ஏசி, திருட்டு எச்சரிக்கை அலராம், மழை சென்சார், சோலார் பேனல்கள், வாக்கம் க்ளீனர்கள் போன்றவற்றை இதனுடன் தருகின்றனர்.

வடிவம்

வடிவம்

காரின் நீள, அகலத்துக்கு தகுந்தவாறு பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது.

பேக்கேஜ்

பேக்கேஜ்

இது மொத்தமாக 1,000 கிலோ எடையுடையதாக தெரிவிக்கப்படுகிறது.

விலை

விலை

20,000 டாலர் முதல் 50,000 டாலர் விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The GazeBox likely won’t solve these problems, but it might offer an interesting alternative if your home doesn’t come equipped with a garage. The structure is meant to provide shelter for your car — keeping it safe from sun, rain, ice, snow, and birds — but also transform into a gazebo when the car is parked elsewhere.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X