இந்தியாவின் இரண்டாவது டெஸ்லா காரை வாங்கி கணவருக்கு பரிசளித்த ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

இந்தியாவின் இரண்டாவது டெஸ்லா காரை வாங்கி கணவருக்கு பரிசளித்த ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

By Azhagar

பாய்ஸ் பட நாயகி ஜெனிலியா தனது காதலரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துக்கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார்.

இந்தியாவின் 2வது டெஸ்லா காரை வாங்கினார் ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயான பின்பும், திரைப்படம் சார்ந்த விழாக்கள் மற்றும் கலந்துரையாடலில் ஜெனிலியா தீவிரமாக பங்கேற்று வருகிறார்.

இந்தியாவின் 2வது டெஸ்லா காரை வாங்கினார் ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

இப்போதும் புதுமண தம்பதிகள் போல காதலை அவ்வப்போது வெளிப்படுத்தி வரும் இவர்கள், ஒருசேர இருந்தால் ஊடகங்களின கண்களை பறிக்கவும் தவறுவதில்லை.

இந்தியாவின் 2வது டெஸ்லா காரை வாங்கினார் ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

வருடா வருடம் கணவரின் பிறந்தநாளன்று புதிய பரிசுகளை வழங்கி ஆச்சர்யப்படுத்தும் ஜெனிலியா, இந்த வருடம் ரித்தேஷ் பிறந்தாள் பரிசாக டெஸ்லா நிறுவனத்தின் புதிய மாடல் எக்ஸ் எஸ்யூவி காரை பரிசளித்துள்ளார்.

இந்தியாவின் 2வது டெஸ்லா காரை வாங்கினார் ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

இதன்மூலம் நாட்டின் இரண்டாவது டெஸ்லா காரை வாங்கிய பிரபலம் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் ஜெனிலியா.

முன்னதாக இந்தியாவின் முதல் டெஸ்லா காரை எஸ்ஸார் குழும தலைவர் பிரசாந்த் ரூயா வாங்கி இருந்தார்.

இந்தியாவின் 2வது டெஸ்லா காரை வாங்கினார் ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

மனைவி ஜெனிலியா அளித்த இந்த பரிசை பற்றி புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் ரித்தேஷ் தேஷ்மூக்.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போது தான் நமக்கு சிறிய குழப்பம் ஏற்பட்டது. காரணம் ரித்தேஷின் டெஸ்லா கார் ஸ்டீயரிங் இடது கைப்புறத்தில் உள்ளது.

இந்தியாவின் 2வது டெஸ்லா காரை வாங்கினார் ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

மின்சார ஆற்றலில் இயங்கும் திறன் பெற்ற டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவி கார். மேலும் உலகளவில் சிறந்த வேகத்திறனை பெற்ற எஸ்யூவி மாடலாகவும் இந்த கார் உள்ளது.

Recommended Video

Okinawa Praise Electric Scooter Launched In India - DriveSpark
இந்தியாவின் 2வது டெஸ்லா காரை வாங்கினார் ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

ட்வின் மோட்டார்கள் ஒருசேர இயங்கும் இந்த காரின் அதிகப்பட்ச வேக திறன் 762 பிஎச்பி என்பது குறிப்பிடத்தக்கது. ஆல் வீல் டிரைவிங் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பை இந்த கார் பெற்றுள்ளது.

இந்தியாவின் 2வது டெஸ்லா காரை வாங்கினார் ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

967 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இந்த கார், துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 4.8 விநாடிகளில் எட்டும். மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும்.

இந்தியாவின் 2வது டெஸ்லா காரை வாங்கினார் ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

தற்போதைய மாடல் எக்ஸ் காரை விட அதிவேக திறன் பெற்ற பி90டி என்ற வேரியண்டை டெஸ்லா விற்பனை செய்கிறது. இது 3.8 விநாடிகளில் 0-100 கி.மீ வேகத்தை எட்டும்.

இந்தியாவின் 2வது டெஸ்லா காரை வாங்கினார் ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

இதில் லூடிக்ரோயஸ் என்ற ஒரு மோடு உள்ளது. இது தேர்வு செய்யப்பட்டால், 3.2 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை மாடல் எக்ஸ் பி90டி கார் எட்டிவிடும்.

இந்தியாவின் 2வது டெஸ்லா காரை வாங்கினார் ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

தேர்வுகளுக்கு ஏற்றவாறு மாடல் எக்ஸ் கார் 5,6 மற்றும் 7 இருக்கைகளில் கிடைக்கும். இதனுடைய கதவுகள் பறவைகளின் இறகுகளை போல இயங்கக்கூடியவை.

இந்தியாவின் 2வது டெஸ்லா காரை வாங்கினார் ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ள ரித்தேஷ் தேஷ்முக் இந்தாண்டு தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அதனை ஒட்டியே மனைவி ஜெனிலியா ரித்தேஷிற்கு புதிய டெஸ்லா மாடல் எக்ஸ் காரை பரிசளித்துள்ளார்.

இந்தியாவின் 2வது டெஸ்லா காரை வாங்கினார் ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

எனினும் இதனுடைய வேரியண்டுகள் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அமெரிக்காவில் மாடல் எக்ஸ் காரின் விலை 80,000 டாலர்கள் மதிப்பில் அதாவது ரூ.52 லட்சம் விலையில் தொடங்குகிறது.

இந்தியாவின் 2வது டெஸ்லா காரை வாங்கினார் ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

இந்தியாவில் வலது புற டிரைவிங் அமைப்பை பெற்ற கார்களுக்கு மட்டுமே பதிவு செய்ய அனுமதியுண்டு. பிரசாந்த் ரூயா வாங்கிய டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவி காரும் வலது புற டிரைவிங்கை கொண்டதுதான்.

இந்தியாவின் 2வது டெஸ்லா காரை வாங்கினார் ’பாய்ஸ்’ ஜெனிலியா..!!

அதனால் இதை ஒருவேளை குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லும் போது ரித்தேஷ் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது. இருந்தாலும் அதை அவர் இந்தியா கொண்டு வருகிறாரா என்று தெரியவில்லை.

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Article Published On: Wednesday, December 20, 2017, 10:30 [IST]
English summary
Read in Tamil: Genelia Gifts Tesla Model X SUV Car to Husband Ritesh Deshmukh On His 40th Birthday. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+