கார் கதவை திறந்துபோட்டுட்டு ரோடுலையே ஒக்காந்துட்டாரு!.. ரோடுல அமர்ந்திருப்பவரு யாருனு தெரியுதா?..
உலகில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் காஸ்ட்லியான கார் மாடல்களில் ஒன்றாக மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஒன் (Mercedes-AMG One) கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் ஹைப்பர் கார் (Hyper Car) மாடல் ஆகும். இந்த காரை ஒட்டுமொத்த உலகத்திலேயே ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவரே ஜார்ஜ் ரஸ்ஸல் ஆவார். இவர் சமீபத்திலேயே இந்த காரை தன்னுடைய கார் கலெக்சனில் இணைத்தார். இவர் யார் என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பலாம்.
பிரபல எஃப்1 (F1) ரேஸ் வீரரே இவர் ஆவார். இந்த காருக்கு 'டிரீம் கார்' என்கிற பெயரை அவர் சூட்டி இருக்கின்றார். அதாவது, இந்த காரை அவர் தனது கனவு வாகனமாக குறிப்பிடுகின்றார். இதனாலேயே இந்த காருடன் அவர் இப்போது நீண்ட நேரம் செலவழிப்பதாகக் கூறப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் நடத்திய சமீபத்திய ஃபோட்டோ ஷூட் உள்ளது. மேலும், அந்த காருடன் எடுத்துக் கொண்ட படங்களையே அவர் இப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கின்றார். குறிப்பாக, அவர் காருக்கு முன்னால் தரையில் அமர்ந்தபடி எடுத்துக் கொண்ட படம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
இதற்கு மட்டுமல்ல இந்த காருக்காகவும் இப்போது இந்த படங்கள் இணையத்தில் தீயாய் பரவிக் கொண்டிருக்கின்றது. ஏனெனில் அவ்வளவு அதிக சிறப்புகளையும், அரிய வகை கார் மாடலே இதுவாகும். அடர் நீள நிறம் மற்றும் குரோம் அக்செண்டுகளால் இந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த நிற அலங்கரிப்ப இந்த கார் எவ்ளோ சிறப்பானது என்பதைக் காண்பிக்கும் விதமாக இருக்கின்றது. இதில் மட்டுமல்ல இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எஞ்சினும் அதீத திறனை வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றது. 1.6 லிட்டர் டர்போசார்ஜட் வி6 மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதே வகை எஞ்சினே லீவிஸ் ஹமில்டன் 2015 ஃபார்முலா 1 (Lewis Hamilton's 2015 Formula 1) காரில் பயன்படுத்தப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த மோட்டாருடன் சேர்த்து இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 1063 எச்பி ஆற்றலை உருவாக்கும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 375 கிமீ ஆகும். இதுமட்டுமல்ல இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட 2.9 செகண்டுகளே போதுமானது ஆகும். இத்தகைய அதீத ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட காரையே எஃப்1 பந்தய வீரர் ஜார்ஜ் ரஸ்ஸல் தற்போது வாங்கி இருக்கின்றார்.
மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஃப்1 கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பு மட்டுமே 2.72 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த காரை மொத்த உலகத்திற்காகவும் 275 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைக்காக உருவாக்கியது என்பது கவனிக்கத்தகுந்தது. இவை அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக அளவில் ஒரு சிலர் மட்டுமே இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவரே எஃப்1 பந்தய வீரர் ஜார்ஜ் ரஸ்ஸல் ஆவார். இந்த காரை வாங்கியதன் வாயிலாக, அவர் இப்போது தலைப்பு செய்தியாகவே மாறி இருக்கின்றார். இந்த கார் அவருடைய கோப்பைகளைபோல கராஜில் மின்னும் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








