29 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்த காரை கண்டு பிடித்த போலீஸ்! இன்னிக்கு இந்த காரின் விலை இவ்வளவு கோடியா?
லண்டன் மெட்ரோபொலிட்டன் போலீசார் கடந்த 1995-ம் ஆண்டு இமோலா பகுதியில் நடந்த சன் மேரியோ கிராண்ட் பிக்ஸ் ரேஸ் டிராக்கில் இருந்து காணாமல் போன எப் 512எம் டெஸ்டரோசா மாடல் காரை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த காரை பிரபல எஃப் ஒன் டிரைவர் கெர்கார்டு பெக்கர் என்பவர் சொந்தமாக வைத்திருந்தார். சுமார் 29 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த 1995-ம் ஆண்டு ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த எஃப்1 கார் ரேஸ் டிரைவர் இவர் தனக்கு சொந்தமாக ஃபெராரி நிறுவனத்தின் எப் 512எம் டெஸ்டரோசா என்ற சிவப்பு நிற காரை வைத்திருந்தார். இவர் அப்பொழுது இத்தாலி நாட்டில் உள்ள இமோலா என்ற பகுதியில் நடந்த சான் மரியோ கிராண்ட் ஃபிரிக்ஸ் போட்டிக்கு கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார்.

இந்த போட்டி மைதானத்தில் வைத்து இவருக்கு சொந்தமான ஃபெராரி எஃப் 512எம் டெஸ்டரோசா என்ற கார் திருடு போனது. அதே இடத்தில் இருந்த மற்றொரு காரும் திருடு போனது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டிருந்தது. போலீசார் இந்த புகாரை பதிவு செய்து திருடு போன காரை தேடி வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் 29 ஆண்டுகளாக இந்த கார் கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில் ஃபெராரி நிறுவனத்திற்கு ஒரு தகவல் ஒன்று கடந்த ஜனவரி மாதம் கிடைத்துள்ளது. அதன்படி அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் லண்டனில் உள்ள ஒரு காரை சொந்தமாக வாங்கியுள்ளார். இது பழைய ஃபெராரி காராகும். இந்த கார் குறித்து அந்நிறுவனம் ஆய்வு செய்தபோது இதுதான் 1995 ஆம் ஆண்டு திருடப்பட்ட கார் என்பது அந்நிறுவனத்திற்கு தெரிய வந்தது. உடனடியாக அந்நிறுவனம் லண்டன் மெட்ரோபொலிட்டன் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையஎடுத்து லண்டன் போலீசார் இது குறித்து விசாரணையில் இறங்கிய போது இந்த கார் கடந்த 2023-ம் ஆண்டு வரை ஜப்பான் நாட்டில் இருந்துள்ளது என்றும், அதன் பின்னர் 2023-ம் ஆண்டு லண்டனுக்கு வந்துள்ளது என்றும், அதன் பின்பு இங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் நேரத்தில் தான் இது ஃபெராரி நிறுவனத்திற்கு தெரிய வந்தது. அதன் மூலம் லண்டன் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த கார் திருடப்பட்டபோது இதன் மதிப்பு 3.50 லட்சம் பவுண்டுகள் ஆகும். அதாவது இன்றைய இந்திய பண மதிப்பில் ரூபாய் 3.68 கோடியாகும். இந்த கார் தொலைந்த போது நான்கு நாட்கள் இந்த காரை தேடி அலைந்துள்ளனர். அதன் பின்னர் இந்த கார் கிடைக்காததால் இந்த கார் கிடைக்காது என இந்த கேஸை கிடப்பில் போட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கார் நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்காகவே இருந்தது.

இதற்கிடையில் லண்டன் போலீசாரும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் டீலர் ஷிப்புகள் இடையே உள்ள ஒப்பந்தத்தின்படி அந்நிறுவனங்கள் விற்பனை செய்யும் இரண்டாம் கட்ட கார்கள் குறித்த தகவல்கள் எல்லாம் சரிபார்க்கப்பட்டு அவை எந்த வழக்குகளும் இல்லாத கார்களாக இருந்தால் மட்டுமே விற்கப்படவேண்டும் அல்லது வழக்கு தொடர்புடைய கார்கள் என்றால் இது குறித்து போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கார் லண்டனை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம் அமெரிக்காவில் உள்ள நபருக்கு விற்பனை செய்யப்படும் போது இது குறித்த தகவலை ஃபெராரி நிறுவனம் செக் செய்து பார்த்தபோது குறிப்பிட்ட கார் 29ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போனதாக புகார் அளிக்கப்பட்டு தேடப்படும் கார் என கண்டுபிடிக்கப்பட்டு இது குறித்து லண்டன் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் தற்போது வெற்றிகரமாக தொலைந்து போன காரை 29 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த காரின் சொந்தக்காரரான பர்கர் எஃப் 1 கார் பந்தயத்தில் புகழ்பெற்றவர். 1984 ஆம் ஆண்டு இவர் எஃப்1 கார் பந்தையத்தில் தனது வாழ்க்கையை துவங்கி சுமார் 1997-ம் ஆண்டு வரை இவர் பல்வேறு பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை 10 கிராண்ட் பிரிக்ஸ் விருதுகளை பெற்றவர். இரண்டு முறை சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாவது இடத்திற்கு வந்தவர். இவர் ஃபெராரி கார்களை ஒட்டும் திறமையான டிரைவர்களில் ஒருவராக இருந்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபெராரி போன்ற நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு கார்கள் குறித்த தரவுகளையும் நீண்ட ஆண்டுகள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். இதன்படி ஃபெராரி கார் திருடப்பட்டால் அந்த கார் வேறு எங்கு விற்கப்பட்டாலும் உடனடியாக பிடிக்கப்படுவதற்கு பல்வேறு தொழில்நுட்பங்களை தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். அப்படியான ஒரு தொழில்நுட்பத்தில் தான் இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









