அடுத்ததாக சென்னை- பெங்களூர் இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை கையில் எடுக்கும் ரயில்வே!
மும்பை- ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை தொடர்ந்து, அடுத்ததாக சென்னை- பெங்களூர் இடையில் புல்லட் ரயில் விடுவதற்கான திட்டத்தை கையில் எடுக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை- ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை தொடர்ந்து, அடுத்ததாக சென்னை- பெங்களூர் இடையில் புல்லட் ரயில் விடுவதற்கான திட்டத்தை கையில் எடுக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி- மும்பை, மும்பை- சென்னை, டெல்லி- கோல்கட்டா, டெல்லி- நாக்பூர் மற்றும் மும்பை- நாக்பூர் உள்ளிட்ட பல வழித்தடங்களில் புல்லட் ரயிலை இயக்குவதற்கான ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டன. சில வழித்தடங்களில் புல்லட் ரயில் இயக்குவதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த நிலையில், அடுத்ததாக சென்னை- பெங்களூர் இடையிலான வழித்தடத்தில் புல்லட் ரயில் இயக்குவதற்கு ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார். மேலும், இந்த வழித்தடத்தில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜெர்மனி ஆர்வம் தெரிவித்துள்ளது.
Recommended Video


மும்பை- ஆமதாபாத் திட்டத்திற்கு 0.1 சதவீத வட்டியில் 50 ஆண்டுகள் திருப்பி செலுத்தும் கால அளவுடன் ரூ.88,000 கோடி அளவுக்கு ஜப்பான் கடன் வழங்க இருக்கிறது.

இதனை பின்பற்றி, மிக குறைந்த வட்டி வீதத்தில் சென்னை- பெங்களூர் வழித்தடத்திற்கான புல்லட் ரயில் திட்டத்திற்கு கடன் வழங்குவதற்கும், தொழில்நுட்பத்தை வழங்குவதற்கும் ஜெர்மனி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறி இருக்கிறார்.

மும்பை- ஆமதாபாத் இடையிலான 508 கிமீ தூரத்திற்கான புல்லட் ரயில் வழித்தடம் ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், சென்னை- பெங்களூர் வழித்தடம் ரூ.85,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Trending On DriveSpark Tamil:

மும்பை- ஆமதாபாத் ரயில் திட்டத்தில் ஜப்பான் அளித்துள்ள அனைத்து உதவிகளையும் சென்னை- பெங்களூர் புல்லட் ரயில் திட்டத்திற்கு வழங்க தயாராக இருக்கிறோம் என்று ஜெர்மனி உறுதி அளித்துள்ளதாம். இதனால், இந்த ரயில் திட்டத்திற்கு ரயில்வே துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

மேலும், ஆய்வுப் பணிகளை சீன நிறுவனம் மேற்கொண்ட நிலையில், தன் சொந்த செலவில் ஜெர்மனியும் நடத்தி இருக்கிறது. இந்த நிலையில், அண்மையில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் போர் மூளும் சூழல் ஏற்பட்டதையடுத்து, இந்த திட்டத்தில் சீன நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. எனவே, இந்த திட்டம் ஜெர்னிக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பங்காரூப்பேட்டை- வாணியம்பாடி மற்றும் காட்பாடி அரக்கோணம் இடையில் மலைப்பாங்கான பகுதிகள் அதிகம் இருப்பதால், ஏற்கனவே உள்ள வழித்தடத்தை ஒட்டியே புல்லட் ரயில் வழித்தடத்தையும் அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, 350 கிமீ தூரத்திற்கு புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்படும். பெங்களூரில் இரண்டு புல்லட் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இவை இரண்டுமே நிலத்தடியில் அமைக்கப்படும். ஆனால், சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புல்லட் ரயில் புறப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது சென்னை- பெங்களூர் இடையிலான தூரத்தை சதாப்தி ரயில் 5 மணிநேரத்தில் கடக்கிறது. ஆனால், புல்லட் ரயில் மணிக்கு 320 கிமீ வேகம் வரை இயக்கப்படும் என்பதால், இரண்டு மணிநேரத்திற்குள் இரு நகரங்களையும் இணைத்துவிடும்.
Trending On DriveSpark Tamil:


Click it and Unblock the Notifications








