TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு புல்லட் ரயில்! பயண நேரம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி..
சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருவுக்கு அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படவுள்ளது. இதன் பயண நேரம் உங்களுக்கு நிச்சயமாக ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
போக்குவரத்து துறையின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக, பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகம் தற்போது வெகுவாக சுருங்கி விட்டது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிப்பதற்கான நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
ஜப்பான், சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில், அதிவேக புல்லட் ரயில்கள் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விட்டன. எனினும் விரைவில் வல்லரசாக உருவெடுக்கும் என நம்பப்படும் இந்தியாவில் தற்போது வரை புல்லட் ரயில் இல்லை.
ஆனால் இந்த குறை விரைவில் நிவர்த்தியாக போகிறது. அதுவும் அதிவேக புல்லட் ரயில் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது என்பது மற்றொரு ஆச்சரியமான செய்தி. ஆம், சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருவுக்கு புல்லட் ரயில் இயக்குவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் சென்னையில் இருந்து மைசூருவுக்கு ரயிலில் பயணம் செய்ய சுமார் 7 மணி நேரம் ஆவதால், பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் முயற்சியில் இந்திய ரயில்வே ஈடுபட்டு வருகிறது. எனவே இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், சென்னை-அரக்கோணம்-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் அதிவேகமான புல்லட் ரயிலை இயக்குவது தொடர்பான மெகா திட்டத்தை, இந்திய ரயில்வே துறையிடம் தற்போது ஜெர்மனி அரசு முன்வைத்துள்ளது.
சென்னை-அரக்கோணம்-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் அதிவேக புல்லட் ரயிலை இயக்கும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை, ரயில்வே போர்டு சேர்மன் அஸ்வனி லோஹனியிடம், ஜெர்மனி நாட்டின் தூதர் மார்ட்டின் நே சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி சென்னை-அரக்கோணம்-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் சுமார் 435 கிலோ மீட்டர் தூரத்திற்கு புல்லட் ரயில் பாதை அமைக்கப்படும். இந்த புல்லட் ரயில் மூலமாக சென்னையில் இருந்து மைசூருவுக்கு வெறும் 2 மணி நேரம் 25 நிமிடங்களில் சென்றடைந்து விட முடியும்.
ஏனெனில் மணிக்கு சுமார் 320 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும். தற்போது சென்னையில் இருந்து மைசூருவுக்கு ரயிலில் செல்ல 7 மணி நேரம் ஆகிறது. ஆனால் புல்லட் ரயில் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால் பயண நேரம் வெறும் 2 மணி நேரம் 25 நிமிடங்களாக குறைந்து விடும்.


அதாவது சுமார் 5 மணி நேரத்தை மிச்சம் பிடிக்கலாம். பின்னர் படிப்படியாக பயண நேரம் குறைக்கப்பட்டு கொண்டே வரப்படும். ஜெர்மனி நாட்டு தூதர் அளித்த சாத்தியக்கூறுகள் தொடர்பான அறிக்கை குறித்து ரயில்வே வாரியம் தற்போது தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கினால், சென்னை-மைசூரு இடையேயான பயண நேரமானது, வரும் 2030ம் ஆண்டிற்குள் 5 மணி நேரத்திற்கும் மேலாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்.
MOST READ: எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?
ஜெர்மனி நாட்டு அரசு அளித்துள்ள சாத்தியக்கூறுகள் தொடர்பான அறிக்கையின்படி, 85 சதவீத ரயில் பாதை, தூண்கள் உதவியுடன் உயரமாக அமைக்கப்படும். அத்துடன் இந்த வழித்தடத்தில் மொத்தம் 11 இடங்களில் குகைகள் அமைக்கப்படும். இதில், புல்லட் ரயில் புகுந்து செல்லும்.
முன்னதாக மும்பை-அகமதாபாத் இடையே ஜப்பான் நாட்டின் உதவியுடன் புல்லட் ரயில் இயக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
எனவே மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதை ஜப்பான் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஆனால் சென்னை-அரக்கோணம்-பெங்களூரு-மைசூரு இடையேயான புல்லட் ரயில் திட்டத்தில் இது போன்ற பிரச்னைகள் எழாது என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெர்மனி தூதர் மார்ட்டின் நே கூறுகையில், ''சென்னை-அரக்கோணம்-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் புல்லட் ரயில் இயக்குவது தொடர்பாக ஆய்வு நடத்தி முடித்துள்ளோம். இதற்கான நிதியை ஜெர்மனி அரசுதான் வழங்கியது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு இந்த திட்டம் நல்ல தீர்வாக இருக்கும். இந்த திட்டத்தின்படி, மிகப்பெரிய அளவில் நிலங்களை கையகப்படுத்தியே ஆக வேண்டும் என்ற தேவை நிச்சயம் இருக்காது. குறைந்த அளவிலான நிலங்களை கையகப்படுத்தினாலே போதுமானதுதான்.
MOST READ: மோடியின் அடுத்த அதிர்ச்சி 'வாகன மதிப்பிழப்பு'... இனி ஒரு பய வண்டி ஓட்ட முடியாது...
எனவே இதைக்காட்டிலும் வேறு சிறப்பான திட்டம் எதுவும் இருக்க முடியாது'' என்றார். இதுதவிர சென்னை-மும்பை, மும்பை-நாக்பூர், டெல்லி-மும்பை, டெல்லி-கொல்கத்தா வழித்தடங்களில் புல்லட் ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.