படம் பார்க்க ரூ82 ஆயிரம் சம்பளம் தரும் ஃபைனான்ஸ் நிறுவனம்! ஏன்னு தெரிஞ்சா ஆச்சிரியப்படுவீங்க!
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படம் பார்ப்பதற்காக ரூ82 ஆயிரம் சம்பளத்துடன் ஒரு தனியார் நிறுவனம் வேலைக்கு ஆளைத் தேடி வருகிறது. 20 மணி நேரப் படத்தை பார்ப்பது தான் இவர்களது வேலையாம். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ஹாலிவுட்டில் வெளியாகிப் பிரபலமான திரைப்படம் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், இந்த படம் இதுவரை 9 பாகங்கள் வெளியாகியுள்ளது இன்று தான் அதன் 10வது பாகமும் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கார்கள் மற்றும் அதைச் சுற்றியே கதை நகரும். இதனால் கார் விரும்பிகளுக்கு இந்த சிரீஸில் வரும் திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும். இப்படியாக இந்த திரைப்படத்தைப் பார்ப்பது தான் வேலை எனச் சொல்லி அதற்கு ஒரு நிறுவனம் வேலைக்கு ஆட்களைத் தேடி வருகிறது.

இந்த வேலையில் சேரும் நபர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்ரியர்ஸ் திரைப்பட சிரீஸில் உள்ள அத்தனை படங்களையும் பார்க்க வேண்டும். அது மட்டுமல்ல அதில் வரும் விபத்து காட்சிகள் குறித்துக் குறிப்புகளை எழுதிக் கொடுக்க வேண்டும். குறிப்புகள் என்றால் படத்தில் எந்த காட்சியில் விபத்து ஏற்படுகிறது. விபத்தில் சிக்கிய வாகனங்கள் எது? இந்த விபத்தில் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதாரம் எவ்வளவு, விபத்தால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதைக் குறிப்பிட வேண்டும்.
இந்த வேலையை ஃபைனான்ஸ் பஸ் என்ற நிறுவனம் தான் அறிவித்துள்ளது. இந்த வேலையைச் செய்து முடிப்பவர்களுக்கு 1000 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ82 ஆயிரம் சம்பளமாக வழங்க முன் வந்துள்ளது. இதுபோக இந்த படத்தை ஆன்லைனில் ஸ்டிரீம் செய்து பார்க்கும் போது ஸ்நாக்ஸ் கொறித்துக்கொள்ளத் தினமும் 100 அமெரிக்க டாலர் அதாவது சுமார் ரூ8 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை செய்பவர்கள் தரும் குறிப்புகளை வைத்து ஃபைனான்ஸ் நிறுவனம் தனது ஆட்டோமொபைல் ஃபைனான்ஸ் திட்டங்களுக்கான ஆய்வுகளைச் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சொல்லும் போது ஈஸியான சாதாரண வேலை போல இருக்கலாம். ஆனால் படமே 20 மணிநேரம் வரை ஓடும்.
இதன் ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்துக் குறிப்பெடுத்து எழுத மிக அதிகமான நேரம் தேவைப்படும் சுமார் 200 மணி நேரம் இதற்காக வேலை பார்க்க வேண்டியது வரும் தினமும் 8 மணி நேரம் வேலை பார்த்தால் இந்த பணி முடிய 25 நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி தேதி, 18 வயது பூர்த்தியடைந்த அமெரிக்காவைச் சே்ந்த யார் வேண்டுமானாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்காக விண்ணப்பிக்கப்பட்டவர்களில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்து ஃபைனான்ஸ் பஸ் நிறுவனம் பணியை வழங்கும் யார் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் என்ற வரும் 26ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வாகனங்களுக்கான ஃபைனான்ஸ் வழங்கும் நிறுவன விபத்துக்கள் குறித்து ஆய்வு செய்வது வழக்கம்தான் இதற்காகச் சாலை விபத்துகள் குறித்துப் பதிவு செய்யப்பட்ட காவல் துறை புகார்கள், மற்றும் சிசிடிவி விடியோக்களை வைத்துத் தான் இவ்வாறான ஆய்வுகள் நடத்தப்படும். ஆனால் ஃபைனான்ஸ் பஸ் நிறுவனம் வித்தியாசமாகத் திரைப்படங்களில் உள்ள காட்சிகளிலிருந்து தன் ஆய்வுசெய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: திரைப்படங்களில் என்னதான் காட்சிகள் இயல்பானதாக இல்லாமல் கட்டமைக்கப்பட்டதாக இருந்தாலும் அது இயல்பாக தெரிவதற்காகப் பல ஆய்வுகளைச் செய்த பின்பு தான் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இதனால் இது தத்ரூபமாக இருக்கும். இதன் காரணமாகத் தான் இந்த படங்களை இந்நிறுவனம் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications









