கார் ஜன்னலை மூடிவிட்டு ஏசி போட்டு தூங்கிய டிரைவர்! காலையில் உயிரிழந்த பரிதாபம்! உண்மையான காரணம் இது தான்!
மது அருந்திவிட்டு இரவில் காருக்குள் ஏறி ஏசியை ஆன் செய்து தூங்கிய டிரைவர் அதிகாலையில் காரில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. காருக்குள் ஏசியை போட்டுவிட்டு டிரைவர் தூங்கிய நிலையில் அவர் எப்படி உயிரிழந்தார் என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் மிகப்பெரிய அறிவியல் காரணமும் இருக்கிறது. காருக்குள் ஏசியை போட்டுவிட்டு இரவு முழுவதும் தூங்கக் கூடாது என்பதற்கான விரிவான விளக்கத்தையும் இங்கே காண்போம்.
உத்திர பிரதேச மாநிலம் காஸியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் கல்லு தூபே. 36 வயதான இவர், ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் தூபைவிடம் காரை கொடுத்து ஆப் மூலம் இயங்கும் நிறுவனம் ஒன்றுடன் தனது காரை இணைத்து அந்த ஆப் மூலம் வரும் புக்கிங்களுக்கு ஏற்றார் போல் அவரை கைது செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளார்.

இரவு நேரம் கடைசி டிரிப்பை எடுத்து முடித்தவுடன் டிரைவர் தனது காரிலேயே வீட்டுக்கு சென்று விடலாம். மறுநாள் காலை காரை எடுத்துக்கொண்டு டூட்டிக்கு வர வேண்டும் என பேசப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பணியில் அவர் இருந்துள்ளார். காரின் உரிமையாளருக்கு ஆப் மூலம் அனைத்து தகவல்களும் கிடைத்துவிடும் என்பதால் அவர் காரை பற்றி பெரிதாக கவலைப்பட தேவையில்லை.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த தூபே அன்று இரவு அவர் அருகில் உள்ள மது கடைக்கு சென்று அதிக அளவில் மதுவை குடித்துள்ளார். அதிகமாக மது குடித்ததால் கடும் போதையில் இருந்த தூபே இனி கார் ஓட்ட வேண்டாம் என நினைத்து மதுக்கடை அருகே காரை நிறுத்தி காரில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் மூடிவிட்டு காரில் ஏசியை ஆன் செய்துவிட்டு தூங்கிவிட்டார்.

மறுநாள் காலையில் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தனது செல்போன் ஆப்பை எடுத்துப் பார்த்தபோது அவருக்கு பல்வேறு முக்கியங்கள் வந்துள்ளது. ஆனால் அவர் அந்த புக்கிங்கை ஏற்காமல் இருந்துள்ளார். இதையடுத்து சந்தேகப்பட்ட டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் உடனடியாக தூபேவிற்கு போன் செய்து பார்த்துள்ளார் அவர் போனையும் எடுக்காததால் தனது ஆப் மூலம் காரின் ஜிபிஎஸ்-யை பயன்படுத்தி கார் தற்போது எங்கு இருக்கிறது என பார்த்து அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்பொழுது கார் ஒரு மதுபான கடை அருகே நின்று கொண்டிருந்தது உள்ளே துபாய் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது காரின் உரிமையாளர் அவரை எவ்வளவு இழுப்ப முயற்சித்தும் அவரால் எழுப்ப முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த காரின் உரிமையாளர் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தகவல் சொன்னார். போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்ததும் உடனடியாக காரின் கண்ணாடியை உடைத்து பார்த்தார்கள்.

அப்பொழுதுதான் தூபே ஏதோ பிரச்சனையில் இருப்பது தெரிந்து அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அங்கு தூபேவை பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து துபே உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் தூபே மது குடித்துவிட்டு காரிலேயே ஏசியை ஆன் செய்துவிட்டு தூங்கியது தெளிவாக தெரிகிறது. மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் இந்த கார் சிஎன்ஜி ஆப்ஷனும் இருக்கிறது. அதே நேரத்தில் பெட்ரோல் ஆப்ஷனும் இருக்கிறது. இதில் இவர் பெட்ரோல் எரிபொருளில் இயங்கும் வகையில் வைத்துவிட்டு ஏசியை ஆன் செய்து தூங்கி உள்ளார். இவர் தூங்கியா சில மணி நேரங்களுக்கு பிறகு பெட்ரோல் முழுமையாக தீர்ந்ததால் ஏசி ஆப் ஆகிவிட்டது.
காரின் ஜன்னல் கண்ணாடிகள் முழுமையாக மூடப்பட்டிருந்ததால் காருக்குள் காற்றோட்டம் என்பது இல்லாமல் இருக்கும். நீண்ட நேரமாக குறிப்பிட்ட இடத்தில் காற்றோட்டம் இல்லாமல் இருந்தால் அந்த இடத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கார்பன் மோனாக்சைடு அளவு அதிகரித்து விடும். கார்பன் மோனாக்சைடு வாயுவை ஒருவர் சுவாசித்தால் அவரது இருதயத்திற்கு ரத்தம் செல்வது நின்று விடும்.
இதனால் அவர் மூச்சு திணறி உயிரிழந்து விடுவார். இப்படியாகத்தான் தூபே உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இருந்தாலும் இவரது பிரேத பரிசோதனைக்கு பிறகு இவர் மரணித்துக்கான காரணம் என்ன என்பது தெளிவாக தெரிய வரும். பலர் இப்படியாக வாகனங்களில் முழுமையாக கண்ணாடிகளை ஏற்றிவிட்டு ஏசியை ஆன் செய்து படுக்கும் பழக்கம் இருக்கிறது.
இது முற்றிலும் தவறான விஷயமாகும் முழுவதுமாக கார் ஜன்னல் கண்ணாடிகளை ஏற்றி விட்டால் காருக்குள் காற்றோட்டம் இல்லாமல் மூச்சுத்திணறி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏசியில் கோளாறு ஏற்படும் பட்சத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. பலர் இதை அறியாமையால் செய்து வருகிறார்கள். நீங்கள் இது போன்ற முயற்சியில் நிச்சயம் ஈடுபடாதீர்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கே இது குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் நீங்கள் வாகனங்களில் படுத்து தூங்கும் சூழ்நிலைகளை தவிர்த்து விடுங்கள். இதில் பல்வேறு விதமான பிரச்சினைகள் இருக்கிறது அதனால் வாகனங்களில் முழுமையாக கண்ணாடிகளை ஏற்றிவிட்டு ஏசியை ஆன் செய்ய ஆன் செய்து கொடுக்கலாம் என நினைக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications









