மோசமான வானிலை, எந்த சாலையிலும் செல்லும் அட்டகாசமான மீட்பு வாகனம்!!
மோசமான வானிலை மற்றும் எந்தவொரு சாலையிலும் செல்லும் தகவமைப்புகளை கொண்ட புதிய மீட்பு வாகனத்தை ருமேனியாவை சேர்ந்த கியோ ஓ மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சாதாரண ரக மீட்பு வாகனங்கள் அனைத்து சாலைகளிலும் செல்லத்தக்க அம்சங்களை கொண்டிருப்பதில்லை. மேலும், சில மோசமான வானிலைகளிலும் சிறப்பாக செயல்படாது.
ஆனால், ரெஸ்கியூ(Rescue) என்று பெயரிடப்பட்ட இந்த வாகனம் மீட்புப் பணிகளில் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கும் என்று கியோ ஓ மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. பார்ப்பதற்கு ஹம்மர் எஸ்யூவியை நினைவூட்டும் இந்த இந்த மீட்பு வாகனத்தில் இருக்கும் வசதிகள் மற்றும் கருவிகள் உள்பட கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இருக்கை வசதி
எஸ்யூவி தோற்றம் கொண்ட இந்த பிரம்மாண்டமான மீட்பு வாகனத்தில் 11 பேர் செல்ல முடியும்.

த்ரீ இன் ஒன்
ரெஸ்கியூ வாகனத்தில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் உள்ளன.

வடிவம்
5.2 மீட்டர் நீளம், 2.7 மீட்டர் அகலம், 2.39 மீட்டர் உயரம் கொண்டதாக ரெஸ்கியூ வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 3.2 டன் எடை கொண்டது. இதில், தீயணைப்புக்கான 620 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியும் உள்ளது.

பிரத்யேக மிதவை டயர்கள்
இந்த வாகனத்தின் சக்கரங்களில் காற்றடைக்கப்பட்ட பைகள் பொருத்தப்பட்டுள்ளன. தவிர, இந்த வாகனத்தின் டயர் கூட மிதவை போன்று செயல்படும்.

பற்சக்கரங்கள்
சில மோசமான சாலைகளில் செல்வதற்கு வசதியாக பீரங்கி மற்றும் பொக்லின் எந்திரங்களில் உள்ளது போன்று டிராக் வீல் பற்சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

எஞ்சின்
இந்த வாகனத்தில் 340 எச்பி மற்றும் 500 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின்கள் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. டீசல் மாடலில் 218 எச்பி மற்றும் 304 எச்பி கொண்ட எஞ்சின்களுடன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் புகாத அமைப்பு
தண்ணீரில் மிதந்து செல்லும்போது உள்ளே நீர்புகாத வகையில் கட்டமைப்பக்கப்பட்டுள்ளது.

டிராலி
இந்த வாகனத்தின் பின்புறம் டிராலி ஒன்றையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த டிராலியை படகு போன்றும், தரையில் கட்டி இழுத்துச் செல்லவும் முடியும்.

ஜிபிஎஸ் வசதி
இந்த வாகனத்தில் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

ஆல் டெர்ரெய்ன் வெகிக்கிள்
பனி படர்ந்த சாலைகள், பாலைவனம், சாதாரண சாலைகள், கரடு முரடான மலைச்சாலைகள் என அனைத்திலும் செல்லும் அமைப்பு கொண்டதோடு, தண்ணீரிலும் மிதந்து சென்று அவசர காலங்களில் செயலாற்றும் ஓர் முழுமையான மீட்பு வாகனமாக கியோ ஓ மோட்டார்ஸ் இதனை உருவாக்கியுள்ளது. இந்தியா போன்ற இயற்கை சீற்றங்களால் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளுக்கு அவசியமான மீட்பு வாகனம் இது. அதனை அடுத்த ஸ்லைடில் இணைக்கப்பட்ட வீடியோவில் கண்கூடாக காணலாம்.
வீடியோ
வீடியோவில் ரெஸ்கியூ மீட்பு வாகனத்தின் அனைத்து பயன்பாடுகளையும் காணலாம்.


Click it and Unblock the Notifications








