ஏஐ கேமிராவில் சிக்கிய அமானுஷ்யம்! மாருதி 800 காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தது பேயா! வைரலாகும் படம்!
கேரளாவில் ஆட்டோ இன்டலிஜன்ஸ் (AI) வசதிக் கொண்ட கேமிராக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத மாநிலமாக கேரளாவை மாற்றும் முயற்சியின் அடிப்படையிலேயே இந்த வகை கேமிராக்களை மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் கேரள அரசு பொருத்தி இருக்கின்றது.
போக்குவரத்து காவலர்களைவிட அதி திறன் வாய்ந்ததாக இந்த கேமிராக்கள் காட்சியளிக்கின்றன. போக்குவரத்து விதிமீறல் அரங்கேறும் எனில் அதனை துள்ளியமாகக் கண்டுபிடித்து, அந்த குறிப்பிட்ட விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிக்கு அபராத செல்லாணை அனுப்பி வைப்பதில் இந்த ஏஐ கேமிராக்கள் கில்லாடியாக இருக்கின்றன.

குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல் என்ன என்பதை நிரூபிக்க புகைப்பட ஆதாரத்துடன் செல்லாண்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், தற்போது எந்தவித வாக்குவாதத்திற்கும் இடமில்லாமல் போயுள்ளது. சில நேரங்களில் அபராத செல்லாண் குறித்து காவலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே தகராறு ஏற்படக் கூடும்.
இந்த நிலை தற்போது முழுவதுமாக ஒழிந்திருக்கின்றது. மேலும், தவறுகள் சிறிதாக இருப்பினும்கூட கரிசணம் இன்றி ஏஐ கேமிராக்கள் வாயிலாக அபராத செல்லாண்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் கடந்த ஆறு மாதங்களாக அம்மாநிலத்தில் அதிரடிக்கு சற்றும் குறைச்சலின்றி காணப்படுகின்றது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே மாநிலத்தில் முதல் முறையாக ஏஐ கேமிராக்கள் அறிமுகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே, ஏஐ கேமிராவினால் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பேய் ஒன்று சிக்கியிருப்பதாக கூறி இணையத்தில் புகைப்படம் ஒன்று உலா வந்துக் கொண்டிருக்கின்றது. அந்த படத்தில் மாருதி 800 காரில் முன் பக்கத்தில் இருவரும் பின் பக்கத்தில், ஒருவரும் அமர்ந்து பயணிப்பதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.
இதில் பின்னால் அமர்ந்திருப்பதே பேய் என்று மாருதி 800 கார் உரிமையாளரால் கணிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் புகைப்படத்தைக் கண்டு அதிர்ந்துபோன அந்த குடும்பத்தினர். இதுகுறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்து இருக்கின்றனர். சம்பவ தினத்தன்று ஆல்டோ 800 காரில் ஒட்டுமொத்தமாக நான்கு பேர் பயணித்ததாகவும், முன் பக்கத்தில் இரண்டு பெரியவர்கள் மற்றும் பின் பக்கத்தில் இரண்டு சிறுவர்கள் என ஒட்டுமொத்தமாக நான்கு பேர் பயணித்ததாகவும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.
ஆனால், ஏஐ கேமிராவால் எடுக்கப்பட்ட படமோ காருக்குள் மொத்தமாகவே மூன்று பேர் மட்டுமே பயணிப்பதைப் போன்று காண்பிக்கின்றது. இதைப் பார்த்தே அதிர்ந்து போன மாருதி 800 உரிமையாளர், பின்னால் அமர்ந்திருப்பது என் பிள்ளைகளே இல்லை என்றும், அது வேறு யாரோ ஒருவர் போல் தெரிகின்றது என்றும் கூறி காவல்நிலையத்தையே பரபரப்பாக்கி உள்ளார்.
மேலும், எனது பிள்ளைகள் இரண்டு பேரும் காருக்குள் இல்லாலததைப் போல் அந்த படம் காட்டுகின்றது என்று கூறி கூடுதலாக திகிலையும் அவர் கிளிப்பி இருக்கின்றார். ஒரு நிமிடம் இந்த கதையை கேட்ட காவலர்களே ஏதோ அமானுஷ்யம்தான் அவருடைய காரில் வந்திருக்குமோ என நினைக்கத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிய காவல்துறையினர், ஏஐ கேமிராவால் எடுக்கப்பட்ட புகைப்படத்தையே உங்களுக்கு பகிர்ந்தோம் என தெரிவித்திருக்கின்றனர். சீட் பெல்ட் அணியாமல் டிராவல் செய்ததற்காகவே செல்லாண் மாருதி 800 ஓட்டுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு ஆதாராமாகவே புகைப்படமும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த புகைப்படமே தற்போது பெரும் சர்ச்சைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. பொதுவாக, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு விஞ்ஞானத்தில் ஓர் பெயர் உண்டு. பரேய்டோலியா (Pareidolia) என்பதே அந்த பெயர் ஆகும். வானத்தில் உள்ள மேகக் கூட்டத்தைப் பார்க்கும்போது அந்த மேகம் ஏதோ ஓர் உருவத்துடன் ஒத்துப்போவதைப் போல் தெரியும்.
இதேபோல், இருண்ட பகுதிக்குள் நாம் செல்லும்போது, அங்குள்ள மரங்கள் அல்லது செடிகள் ஓர் மனிதன் நிற்பதைப் போன்ற பிம்பத்தை வெளிப்படுத்தும். இதுமாதிரியான செயல்களையே பரேய்டோலியா என்பர். இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால், நம் கற்பனையானது, உண்மையில் இல்லாத விஷயங்களைப் பார்க்க வைப்பதையே பரேய்டோலியா என்கின்றனர்.
நம்முடைய மூளையானது, சீரற்ற விஷயங்களில் பழக்கமான வடிவங்களை கண்டுபிடிக்க விரும்புவதாலேயே இத்தகைய கற்பனைகள் நமக்கு தோன்றுகின்றன. ஆனால், இதனை நாம் அமானுஷ்யமாக பார்க்கின்றோம். அவ்வாறே, பின்னிருக்கையில் இருப்பவர் புதிய முகமாக மாருதி 800 கார் உரிமையாளருக்கு தோன்றி இருக்கின்றது. கருப்பு-வெள்ளை படம் என்பதாலேயே இந்த சிக்கல் ஏற்பட்டிருக்கக் கூடும் என யூகிக்க முடிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேமிராவின் கண்களில் அமானுஷ்யம் சிக்கும் என ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், இதை நம்புவதற்கான ஆதாரங்கள் பெரிய அளவில் இல்லை. மாருதி 800 சம்பவத்தில் இரண்டு குழந்தைகளில், ஒருவர் மட்டுமே தெரிந்திருக்கலாம். அது கருப்பு வெள்ளை படம் என்பதால், பிள்ளைகளின் தந்தைக்கே அவர்களை அடையாளம் காண முடியாமல் போயிருக்கக் கூடும் என யூகிக்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








