Viral Video திகிலான சாலையில் உலாவிய பேய்! வீட்டுக்கு வந்ததும் லாரி டிரைவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
கார், லாரி, பஸ் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற பல்வேறு வகையான வாகனங்களிலும், தற்போது டேஷ்போர்டு கேமராக்களை (Dashboard Cameras) அதன் உரிமையாளர்கள் பொருத்தி வருகின்றனர். இவை சுருக்கமாக டேஷ்கேம் (Dashcam) என்று அழைக்கப்படுகிறது. வாகனங்களின் முன் பகுதியில் இந்த டேஷ்போர்டு கேமரா மாட்டப்பட்டிருக்கும்.
டேஷ்போர்டு கேமராக்களால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதுதான் அவை பிரபலமடைந்து வருவதற்கு முக்கியமான காரணம் ஆகும். முன் பகுதியில் என்ன நடக்கிறது? என்பதை இந்த கேமரா பதிவு செய்து விடும். எனவே சாலை விபத்து நிகழ்ந்தால், உங்கள் மீது தவறு இல்லை எனும்பட்சத்தில், அதை நிரூபிப்பதற்கு இந்த வீடியோ ஆதாரம் உதவி செய்யும்.

இதுதவிர சாலையில் அவ்வப்போது நடக்கும் அரிதான ஒரு சில நிகழ்வுகளும், டேஷ்போர்டு கேமராவில் பதிவாகி விடுகின்றன. டேஷ்போர்டு கேமராவில் பதிவான வைரல் வீடியோக்கள் (Viral Videos) பலவற்றை நீங்கள் பார்த்திருக்க கூடும். இந்த வரிசையில் அமானுஷ்யமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள முக்கியமான மாகாணங்களில் ஒன்று அரிசோனா. இந்த மாகாணத்தில் உள்ள 'ரூட் 87' என்ற சாலை வாகன ஓட்டிகளுக்கு திகிலான அனுபவத்தை வழங்கும் என்கின்றனர். வில்லியம் சர்ச் என்பவர் வெகு சமீபத்தில் இந்த சாலையின் வழியாக லாரியை ஓட்டி சென்றுள்ளார்.
அவரது லாரியில் டேஷ்போர்டு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. வீட்டிற்கு வந்த பிறகு, வில்லியம் சர்ச் அந்த கேமரா பதிவு செய்த காட்சியை பார்த்து கொண்டிருந்தார். அப்போது பேய் (Ghost) போன்ற உருவம் ஒன்று அந்த கேமராவில் பதிவாகி இருந்தது வில்லியம் சர்ச்சிற்கு தெரியவந்தது.
இதை பார்த்ததும் வில்லியம் சர்ச் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். சம்பந்தப்பட்ட பகுதியை கடக்கும்போது, பேய் போன்ற உருவம் எதுவும் வில்லியம் சர்ச்சின் கண்களுக்கு புலப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் வீட்டிற்கு வந்து வீடியோவை பார்க்கும்போது பேய் போன்ற உருவம் கேமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்துள்ளது.
சமூக வலை தளங்களில் அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆனால் அறிவியல் அடிப்படையில் பார்த்தால், பேய் என்ற ஒன்று இருப்பது இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே பேய் போன்ற உருவம் கேமராவில் எப்படி பதிவானது? என்பது உறுதியாக தெரியவில்லை.
அது வேறு ஏதேனும் ஒரு வெளிச்சமாக கூட இருக்கலாம் என நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த காலங்களிலும் கூட, குறிப்பாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், கேமராக்களில் பேய் போன்ற உருவம் பதிவானது தொடர்பான நிறைய வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
கேமராவில் பதிவானது பேய் என்பதை எங்களால் உறுதியாக நம்ப முடியவில்லை. ஆனால் வாகனங்களில் டேஷ்போர்டு கேமராக்களின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. உங்கள் வாகனத்தில் டேஷ்போர்டு கேமரா இருந்தால், சாலைகளில் நடக்கும் அரிதான நிகழ்வுகளின் வீடியோக்களுக்கு நீங்களும் உரிமையாளர் ஆக முடியும்.


Click it and Unblock the Notifications








