பிரிட்டிஷ் காலத்தில் இருந்து ஒரு இன்ச் கூட நகராமல் நிற்குது!! இந்த காருக்கு பின்னால் இவ்வளவு பெரிய கதையா!
பேய் கதைகளுக்கு எப்போதுமே மவுசு உள்ளது. இதனால்தான் நம் தமிழ் சினிமாவிலும் மாதத்திற்கு ஒரு பேய் படமாவது வெளிவந்து விடுகிறது. நம்மில் பெரும்பாலானோர் குறைந்தது ஒரு பேய் கதையை ஆவது பிற கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். சிலர் நிஜமாக கூட, பேயை நேரில் பார்த்த அனுபவத்தை கொண்டிருக்கலாம்.
ஆனால் உண்மையில், பேய் உள்ளதா இல்லையா என்பது இன்னமும் விவாதத்திற்குரிய ஒன்றாகவே உள்ளது. பேய் இந்த இடத்தில் உள்ளது, இந்த பங்களாவில் உள்ளது என மற்றவர்கள் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால், காரில் பேய் உள்ளது என கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நடிகை நயன்தாரா நடித்த டோரா திரைப்படம் தான் இந்நேரம் உங்களது நினைவிற்கு வந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால் உண்மையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் லோனாவாலா என்ற பகுதியில் பழைய ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றில் பேய் இருப்பதாக அங்குள்ள பகுதி மக்களால் நம்பப்படுகிறது. நீங்கள் மஹாராஷ்டிராவின் புனேவுக்கு அருகே வசிக்கிறீர்கள் எனில், ஆயிஷா பங்களாவை பற்றியும், இந்த பேய் புகுந்ததாக கூறப்படும் ரோல்ஸ்-ராய்ஸ் காரை பற்றியும் அறிந்திருப்பீர்கள்.
ஆயிஷா பாங்களாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் தான் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் ஆகும். இந்த துருப்பிடித்த, பழமையான, பேய் புகுந்ததாக நம்பப்படும் ரோல்ஸ்-ராய்ஸ் காரை பார்வையிடுவதற்காகவே அவ்வப்போது பலர் ஆயிஷா பங்களாவுக்கு செல்கின்றனர். குறிப்பாக, இளம் பைக் ரைடர்கள் எந்தவொரு பயமுமின்றி, மொபைல் போனில் காட்சிப்படுத்தி இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் பற்றி தங்களது யூடியூப் சேனலில் பதிவிடுவதற்காகவே ஆயிஷா பங்களாவுக்கு படையெடுக்கின்றனர்.

ஆயிஷா என்ற 17 வயது இளம்பெண் தனது குடும்பத்துடன் இந்த பங்களாவில் வசித்து வந்துள்ளார். பின்னர், ஏதோ ஒரு பிரச்சனையில் நிறைய பேர் கூட்டமாக பங்களாவுக்குள் நுழைந்து, உள்ளே இருந்த அனைவரையும் கொன்றுவிட்டு, ஆயிஷாவை கற்பழித்து கொன்றுள்ளனர். இந்த சம்பவம் இன்றோ, நேற்றோ நடந்தது கிடையாது, இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன், அதாவது 1947க்கு முன் நடந்தது ஆகும்.
இந்த சம்பவத்திற்கு பின், இரவு நேரங்களில் இந்த பங்களாவில் இருந்து சத்தங்களை மக்கள் கேட்டுள்ளனர். அப்போதில் இருந்து, இது பேய் பங்களா என அழைக்கப்பட்டு வருகிறது. சிலரோ, இந்த பங்களாவில் வசித்தவர்கள் கிறித்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், இந்த சம்பவத்தில் பங்களாவில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர் என்றாலும், ஆயிஷா அப்போது கொல்லபட்டரா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை எனவும் கூறுகின்றனர்.

இவ்வாறு, இந்த பங்களாவை பற்றியும், அங்கே இப்போதும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரோல்ஸ்-ராய்ஸ் காரை பற்றியும் பல விதமான கதைகள் உலா வருகின்றனர். ஆனால், அவற்றுள் எது உண்மை என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்த பங்களாவில் இருக்கும் கார் ஆனது ரோல்ஸ்-ராய்ஸ் சில்வர் ஷேடோவ் ஆகும். இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் 1965இல் இருந்து 1980 வரையில் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த காரில் ஆற்றல்மிக்க 6.75 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த ரோல்ஸ்-ராய்ஸ் சில்வர் ஷேடோவ் காரை இப்போதும் ஒருவர் சொந்தமாக கொண்டுள்ளார் என்றும், அவர் இந்த காரை பட்டி, டிங்கரிங் பார்த்து ரீ-ஸ்டோர் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை 2004இல் திரைக்கு வந்த லாகீர் என்ற பாலிவுட் திரைப்படத்திலும் காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராஜஸ்தானில் புல்லட் பாபா ஷ்ரைன் என்ற பெயரில் புல்லட் மோட்டார்சைக்கிள் ஒன்றை மக்கள் சாமியாக கும்மிட்டு வருகிறார்கள். பைக் ஒன்றினுள் சாமி உள்ளதாக நம்பும் மக்களை, கார் ஒன்றினுள் பேய் ஆவி புகுந்துள்ளதாக நம்ப வைப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் உண்மையில், பைக், கார் போன்றவை ஓர் இயந்திரம் ஆகும். அவற்றிற்கு எந்தவொரு உணர்ச்சிகளும் கிடையாது. ஆகையால் அவற்றை சாமியாக கும்மிடுவதோ, பேய் இருப்பதாக பயப்படுவதோ முட்டாள்தனம்.


Click it and Unblock the Notifications









