ராயல் என்பீல்டு பைக், மாருதி டிசையர் காரில் பேய்கள்...! வைரல் வீடியோ
ராயல் என்பீல்டு பைக் மற்றும் பழைய மாருதி டிசையர் காரில் பேய்கள் வருவது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ராயல் என்பீல்டு பைக் மற்றும் பழைய மாருதி டிசையர் காரில் பேய்கள் வருவது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அது தொடர்பான செய்திகளை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பேய்களை நம்புகிறீர்களா?
உங்களுக்கு பேய்கள் தொடர்பாக வெளிவரும் செய்திகளில் நம்பிக்கை இருக்கிறதா? நம்பிக்கை இருக்கிறதோ அல்லது இல்லையோ, பேய்கள் சம்பந்தமான பல்வேறு கதைகள் நம்மிடம் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன என்பது மட்டும் மறுப்பதற்கில்லை.

பேய்கள் என்ற பேச்சு வந்து விட்டாலே நம் இதயத்தில் இனம் புரியாத ஒருவித பயம் குடி கொண்டு விடுகிறது. இத்தகைய பய உணர்வும் நம்மிடம் பொதுவாகவே காணப்படும் ஒரு விஷயம்தான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நள்ளிரவு நேரத்தில் சாலையில் நீங்கள் தனியாக நடந்து சென்று கொண்டிருக்கும்போது, திடீரென பேய்கள் வந்தால், உங்களுக்கு எப்படி இருக்கும்? நீங்கள் என்ன செய்வீர்கள்?

அப்படிப்பட்ட ஒரு வீடியோ வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. ராயல் என்பீல்டு பைக் மற்றும் பழைய மாருதி டிசையர் காரில் பேய்கள் வருவது போன்று அந்த வீடியோ இருந்தது. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், தொடர்ந்து படியுங்கள். அதன்பின் உங்களுக்கே புரியும்.

என்ன இது? பேய்களா? என பயப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால் அந்த வீடியோ வெறும் பிராங்க் வீடியோதான். நமக்கு பிராங்க் வீடியோக்களை பற்றி நன்றாகவே தெரியும் அல்லவா? இங்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு பிராங்க் வீடியோக்கள் வேடிக்கையாக எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏதாவது ஒரு கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து கொண்டு, சாலையில் போவோர் வருவோரை கலாய்த்து, வேடிக்கைக்காக எடுக்கப்படும் வீடியோக்கள்தான் பிராங்க் வீடியோக்கள். இதனிடையே ராயல் என்பீல்டு பைக் மற்றும் பழைய மாருதி டிசையர் காரில் பேய்கள் போல் வந்து, பாதசாரிகளை பயறுமுத்தும் பிராங்க் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
வேடிக்கையா? ஆபத்தா?
ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் ரைடர்ஸ் சிலர், பேய்கள் போல உடை அணிந்து கொண்டு, ஆள் அரவமற்ற சாலையில், நள்ளிரவு நேரத்தில் நடந்து வரும் பாதசாரிகளை பயமுறுத்துவது போன்ற காட்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. பின்னர் அதே நபர்கள் பழைய மாருதி டிசையர் காரில் வந்து மேலும் சில பாதசாரிகளை பயமுறுத்துகின்றனர்.

நிச்சயமாக, பாதசாரிகளை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த வீடியோ எடுக்கப்படவில்லை. அதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். அத்துடன் வீடியோ எடுக்கப்பட்ட நேரத்தில் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் இதுபோன்ற சமயங்களில், பயமுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் பாதசாரிகள் யாரேனும், திடீரென பேலன்ஸை இழந்து கீழே விழுந்து விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உச்சகட்ட பதற்றத்தில் அவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏதேனும் ஏற்பட்டால், நிலைமை கை மீறி சென்று விடும் என்பதை உணர வேண்டும்.

அத்துடன் வாகனத்தை ஓட்டி வரும் நபர்களும், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்தில் சிக்க கூடிய அபாயமும் அதிகம் உள்ளது.

ஒருவேளை இந்த வீடியோக்கள் தொடர்பாக போலீசாருக்கு ஏதேனும் புகார்கள் சென்றால், இந்த வீடியோவை எடுத்தவர்கள் மற்றும் வீடியோவில் நடித்தவர்கள் சட்டப்பூர்வ பிரச்னையில் சிக்கி கொள்ள நேரிடும்.

ஏனெனில் பப்ளிக் சாலையில் வீடியோக்கள் எடுக்க வேண்டுமானால் உள்ளூர் போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் முதலில் அனுமதி பெற வேண்டும். விபரீதம் ஏதும் நிகழாதவரை, இவை எல்லாம் வெறும் பொழுதுபோக்கு அம்சமாகதான் பார்க்கப்படும். ஆனால் விபரீதம் நிகழ்ந்து விட்டால்? சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டிய தருணம் இது.
source: ADC Motion Pictures
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








