அளவு எடுத்து செஞ்ச மாதிரி இருக்காங்க! 1 கோடி ரூபா கார்ல ஜிம்முக்கு வந்தது அவங்களா! மாஸ்டர் குடுத்து வெச்சவரு!
வெளிநாட்டில் பிறந்த பல்வேறு மாடல் அழகிகள் தற்போது பாலிவுட் திரையுலகில் கொடி கட்டி பறந்து வருகின்றனர். அப்படி வெளிநாட்டில் பிறந்து தற்போது பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் மாடல் அழகிதான் ஜார்ஜியா ஆண்ட்ரியானி (Giorgia Andriani). இத்தாலியின் மிலன் நகரில் பிறந்தவரான ஜார்ஜியா ஆண்ட்ரியானி, தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் பிரபல நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான அர்பாஸ் கான் (Arbaaz Khan) உடன், ஜார்ஜியா ஆண்ட்ரியானி காதல் உறவில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ஆனால் இருவரும் சமீபத்தில் பிரிந்து விட்டனர். இந்த சூழலில் ஜார்ஜியா ஆண்ட்ரியானியின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், ஜார்ஜியா ஆண்ட்ரியானி ஒரு விலை உயர்ந்த காரில் வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.

அனேகமாக அவர் ஜிம் (Gym) ஒன்றுக்கு வந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இங்கு வர அவர் பயன்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி (Mercedes Benz GLC) கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலை 75.90 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 76.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும்.

இந்த 2 இன்ஜின்கள் உடனும், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகிய 3 அம்சங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் 2 இன்ஜின்களின் பவர் அவுட்புட் வெவ்வேறானதாக உள்ளது. அதாவது பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 258 பிஎஸ்/400 என்எம் ஆகும்.
மறுபக்கம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 197 பிஎஸ் பவர் மற்றும் 440 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், அதிநவீன சொகுசு வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. இதில், 11.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
அத்துடன் ட்யூயல் ஸோன் ஏசி, 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் ஆகிய அம்சங்களையும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கார் கொண்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு இது மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வால்வோ எக்ஸ்சி60 (Volvo XC60), ஆடி க்யூ5 (Audi Q5) மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3) போன்ற கார்களுக்கு எல்லாம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








