அரையும் குறையுமாக சாலையில் டான்ஸ் ஆடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!! லைக்ஸிற்காக இப்படியா!

சமூக வலைத்தள பக்கங்களில் இணையவாசிகளின் கவனத்தை பெறுவதற்கு பிரபலங்கள் என சொல்லி கொள்வோர் செய்யும் அட்ராசிட்டிகள் தினந்தோறும் அதிகரித்து வருகின்றன. அவை எவருக்கும் தொந்தரவு அளிக்கக்கூடியதாக இல்லாவிட்டால் பிரச்சனையில்லை.

அரையும் குறையுமாக சாலையில் டான்ஸ் ஆடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!! லைக்ஸிற்காக இப்படியா!

வீடியோக்கள் போலீஸாரின் பார்வைக்கும் தான் செல்கிறது. ஆதலால் தொந்தரவு அளிக்கக்கூடியதாக இருந்தால், எளிதில் மாட்டிக்கொள்கிறார்கள். அவ்வாறு தான் மத்திய பிரதேசத்தில் ஷ்ரேயா கல்ரா என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் போலீஸிடம் சிக்கிக் கொண்டுள்ளார். இதுகுறித்த வீடியோவினை கீழே காணலாம்.

இந்த வீடியோவில் அவர் பொது சாலையில் வாகனங்களுக்கு இடையூறாக நடமாடுவதை பார்க்கலாம். சிகப்பு நிற சிக்னலில் வாகனங்கள் நிற்கும்போது தான் பயணிகள் சாலையை கடக்கும் பகுதியில் நடனமாடினார் என்றாலும், சிக்னல் பச்சைக்கு மாறிய பின்பும் கூட அவர் தொடர்ந்து நடனமாடியதாக தெரிகிறது.

அரையும் குறையுமாக சாலையில் டான்ஸ் ஆடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!! லைக்ஸிற்காக இப்படியா!

இந்த வீடியோவினை கண்ட சம்மந்தப்பட்ட பகுதி போலீஸார், உடனடி நடவடிக்கையாக ஷ்ரேயா கல்ராவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தின் போது அங்கு நின்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் முதலில், போக்குவரத்து போலீஸார் தான் சாலை விழிப்புணர்விற்காக இவ்வாறு நடன நிகழ்ச்சியை கொண்டுவந்திருப்பர் என நினைத்தனர்.

அரையும் குறையுமாக சாலையில் டான்ஸ் ஆடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!! லைக்ஸிற்காக இப்படியா!

ஆனால் இந்த பெண்ணின் நடனத்தில் எந்தவொரு கருத்தையும் சொல்வது போல் தெரியவில்லை. ஷ்ரேயா கல்ரா தொடர்ந்து சாலையின் மத்தியில் நடனமாடி கொண்டிருக்க, ஒரு பக்கம் அவரது இந்த செயல் முழுவதும் வேறொரு நபரால் வீடியோவாக காட்சிப்படுத்தபட்டுள்ளது. அதன்பின் அந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஊடகங்கள் வரையில் இந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் பிரபலமாகினார்.

அரையும் குறையுமாக சாலையில் டான்ஸ் ஆடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!! லைக்ஸிற்காக இப்படியா!

இந்த நிகழ்வு போலீஸாருக்கு தெரிய வந்ததை அடுத்து அவர்கள் ஷ்ரேயா கல்ரா பற்றியும், அருகில் நின்று படம் பிடித்த மற்றொரு சிறிய சிறுவனை பற்றியும் விபரங்களை சேகரிக்க துவங்கினர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக உதவி சூப்பிரண்ட் போக்குவரத்து போலீஸ் அதிகாரி அனில் படிடார் தெரிவித்தார்.

அரையும் குறையுமாக சாலையில் டான்ஸ் ஆடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!! லைக்ஸிற்காக இப்படியா!

அதனை தொடர்ந்து இவ்வாறு போக்குவரத்திற்கு இடையூறாக நடந்தவரின் பெயர் ஷ்ரேயா கல்ரா என்பதையும், அவருடன் இருந்தவரின் பெயர் குஷால் சவுகான் என்றும் போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதன்பின் ஷ்ரேயா கல்ராவிற்கு போலீஸாரிடம் இருந்து எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அரையும் குறையுமாக சாலையில் டான்ஸ் ஆடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!! லைக்ஸிற்காக இப்படியா!

இதுபோன்று, இவர் போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த காரின் மேற்கூரையில் நடனமாடிய வீடியோ சில தினங்களுக்கு முன்பு வைரலானது. டிஜிட்டல் செல்லான் சிஸ்டங்கள் வந்த பிறகு தற்போது எல்லாம் போக்குவரத்து போலீஸார்கள் மிகவும் பிஸியாகிவிட்டனர். இவ்வாறான செயல்களில் ஈடுப்படுவோர்க்கு அப்போதே நோட்டீஸை அனுப்பி, டிஜிட்டலிலேயே பண பரிவர்த்தனையை முடித்து கொள்கின்றனர்.

அரையும் குறையுமாக சாலையில் டான்ஸ் ஆடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!! லைக்ஸிற்காக இப்படியா!

வீடியோவின் அடிப்படையில் தான் இந்த குற்றங்கள் தீர்மானிக்கப்படுவதால், போலீஸாரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை புகார்களில் ஆதாரமாக எடுத்து கொள்கின்றனர். நம் இந்த செய்தியில் பார்க்கும் ஷ்ரேயா கல்ரா எந்தவொரு வாகனத்தை கொண்டும் போக்குவரத்திற்கு இடையூறு செய்யவில்லை. நடனம் மட்டும் தான் ஆடினார். ஆனால் அதுவே குற்றச்செயலாகும்.

அரையும் குறையுமாக சாலையில் டான்ஸ் ஆடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!! லைக்ஸிற்காக இப்படியா!

இதைதான் தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். இந்த விஷயத்தில், தான் பதிவேற்றிய வீடியோ தான் தனக்கே எதிராக அமைந்துவிட்டது. அதற்காக இவ்வாறு வீடியோ எடுக்காமல் டான்ஸ் ஆடலாமா என கேட்காதீர்கள். ஏனெனில், பெரும்பாலும் நகர சாலைகளில் மூலைக்கு மூலை சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால் எப்படி இருந்தாலும் சிக்கி கொள்வீர்கள்.

அரையும் குறையுமாக சாலையில் டான்ஸ் ஆடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!! லைக்ஸிற்காக இப்படியா!

இந்த சிசிடிவி கேமிராக்களை தொடர்ந்து கண்காணிப்பதற்காகவே போலீஸ் துறையில் தனியாக குழு உள்ளது. வாகனத்தில் குற்றச்செயல்கள் நடந்தால், சிசிடிவியில் வாகனத்தின் பதிவெண்ணை வைத்து விரைவாக அதன் உரிமையாளர்களை போலீஸார் நெருங்கிவிடுகின்றனர்.

அரையும் குறையுமாக சாலையில் டான்ஸ் ஆடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!! லைக்ஸிற்காக இப்படியா!

இவ்வளவு கெடுப்பிடிகள் இருந்தும், சாலை விபத்துகளில் உலகளவில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. இதற்கு மக்கள் தொகை பெருக்கம், அதனால் ஏற்படும் வாகனங்கள் பெருக்கம் ஒரு காரணம் என்றாலும், மிக முக்கிய காரணங்கள் வாடிக்கையாளர்களும், பாதசாரிகளும் சாலை விதிகளை ஒழுங்காக கடைப்பிடிக்காததும், அலட்சியப்படுத்துவதுமே ஆகும்.

அரையும் குறையுமாக சாலையில் டான்ஸ் ஆடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!! லைக்ஸிற்காக இப்படியா!

தினந்தோறும் ஏகப்பட்ட வாகன ஓட்டிகள் ஆக்ரோஷமாக வாகனத்தை ஓட்டிவதினாலும், சாலை விதிமுறைகளை உதாசீணப்படுத்துவதினாலும் விபத்தில் சிக்கி வருகின்றன. இதனை குறைக்க அரசாங்கமும், போலீஸாரும் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், விபத்துகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்தப்பாடில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Traffic police serve notice to Instagram influencer for dancing in the middle of the road.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X