முட்டி அளவுக்கு கூட தண்ணி இல்ல!! இந்த வீடியோவை பார்த்து உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது!

ஜாவா 42 பாப்பர் (Jawa 42 Bobber) பைக்கில் ஆற்றை கடக்க முயன்ற இளம்பெண் ஒருவர் பைக்கை கண்ட்ரோல் செய்ய முடியாமல் கீழே விழுந்துள்ளார். கீழே விழும் அளவிற்கு ஆர்பரித்து செல்லாத ஆற்றில் இந்த இளம்பெண் தடுமாறி உள்ளதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

பெண்களிலும் பல கார் & பைக் ரேஸர்கள் உள்ளனர் என்றாலும், பெரும்பாலான பெண்களின் டிரைவிங் கொஞ்சம் சுமாரானதாகவே உள்ளதை கூறியே ஆக வேண்டும். குறிப்பாக, ஸ்கூட்டர் ஓட்டும் பெண்கள் பிரேக் இருந்தும் தங்களது கால்களால் ஸ்கூட்டரை நிறுத்துவது, இண்டிகேட்டர் போடாமல் திரும்புவது, சைடு மிரர்களை பயன்படுத்தாதது என அஜாக்கிரதையான செயல்களில் ஈடுப்படுகின்றனர். இதனை தினந்தோறும் நம் அன்றாட வாழ்வில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

girl falls into river

சில பெண்களின் இத்தகைய செயல்கள் சில நேரங்களில் விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது. பெண்களின் டிரைவிங்கால் ஏற்பட்ட விபத்துகள் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் உங்களில் நிறைய பேர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதன் காரணமாகவே, பெண்கள் 2-வீலர் ஓட்டி செல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அருகே செல்வது கொஞ்சம் ஆபத்தானது என்கிற கருத்து ஆண்கள் மத்தியில் உள்ளது.

இருப்பினும், சில பெண்கள் தைரியமாக பைக்குகளையும் ஓட்ட முயற்சிக்கின்றனர். அந்த வகையில், ஜம்மூ காஷ்மீர் நம்பர் பிளேட்டை கொண்ட ஜாவா 42 பைக்கில் இளம்பெண் ஒருவர் ஆற்றை கடக்க முயன்றுள்ளார். ஆனால், ஆற்றில் இறங்கிய சில வினாடிகளிலேயே பேலன்ஸை இழந்த அவர், பைக்குடன் ஆற்றில் கவிழ்ந்துள்ளார். அந்த சமயத்தில் பைக்கின் பின் இருக்கையில் ஆண் நபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

girl falls into river

அவர்தான் உடனடியாக அந்த பெண்ணையும், பைக்கையும் தூக்கி நிற்க வைத்தார். ஆற்றில் பைக் ஓட்டுவது கொஞ்சம் சிரமம் தான் என்றாலும், இந்த பெண் பைக்கில் சென்ற சமயத்தில் ஆற்றில் நீரின் வேகம் பெரியளவில் வேகமாக இல்லை. அதுமட்டுமின்றி, ஆற்றில் நீரின் ஆழமும் முழங்கால் அளவிற்கு மட்டுமே உள்ளதை இந்த படங்களில் காணலாம்.

இருப்பினும், உதவிக்கு பைக்கின் பின் இருக்கையில் ஓர் ஆண் நபர் வந்துள்ளார். பைக்கில் தனியாக ஆற்றை கடக்க முயன்றால் கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில், ஒருவர் மட்டுமே சென்றால் பைக்கின் எடை குறைவாக இருக்கும். ஆனால், பின் இருக்கையில் ஒருவர் அமர்ந்திருந்த போதிலும் இந்த பெண் ஆற்றில் பைக்கை கவிழ்த்துள்ளார். இதுல் இருந்து, இந்த பெண் பைக்கில் ஆற்றை கடக்க முயன்றது இதுதான் முதல்முறை என்பது தெரிகிறது.

girl falls into river

இதனால்தான், நீரின் வேகம் என்ன என்பதை அவரால் கணிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தில், பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் & ஜாக்கெட் என அனைத்தையும் முறையாக அணிந்துள்ளார். ஆனால், இந்த பெண் ஹெல்மெட் கூட அணிந்திருக்கவில்லை. இதில் இருந்து, இந்த ஜாவா 42 பைக்கின் உரிமையாளர் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த ஆண் நபர் தான் என்பது தெரிய வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆற்றை பைக்கில் கடக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதில் முக்கியமானது, எடையை பேலன்ஸ் செய்வது ஆகும். ஏனெனில், ஆற்றில் எப்போதும் ஒரே அளவில், ஒரே வேகத்தில் நீர் இருக்காது. இதனை கணிப்பதில்தான் இந்த பெண் கோட்டை விட்டுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2024, 12:21 [IST]
English summary
Girl falls into river with jawa 42 bike video gone viral
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X