காலே ஒழுங்கா எட்டல! 20 லட்ச ரூபா பைக்க ஓட்டிகிட்டு வந்து ஊரே சிரிக்கும்படியான காரியத்தை செய்த இளம்பெண்!
இந்தியாவில் தற்போது ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்களும் வளர்ச்சியடைந்து வருகின்றனர். விலை உயர்ந்த பைக்குகளை ஓட்டுவதும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்திய சாலைகளில் முன்பெல்லாம் பெண்கள் ஸ்கூட்டர்களை ஓட்டுவதை மட்டும்தான் நாம் பார்த்து கொண்டிருந்தோம். ஆனால் தற்போது மிகவும் விலை உயர்ந்த, அதே நேரத்தில் அதிக எடை கொண்ட சூப்பர் பைக்குகளையும் கூட பெண்கள் ஓட்டுகின்றனர். இது உண்மையிலேயே நல்ல விஷயம்தான். சூப்பர் பைக்குகளை ஓட்டி கொண்டு செல்லும் பெண்களை சாலையில் பார்ப்பது கண்டிப்பாக மகிழ்ச்சியான ஒரு விஷயமாகதான் இருக்கிறது.
ஆனால் சூப்பர் பைக்குகளை ஓட்டும்போது, பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக குறைந்த உயரம் கொண்ட பெண்கள், சூப்பர் பைக்குகளை ஓட்டும்போது மிகுந்த முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்ன நடக்கும்? என்பதை விளக்கும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், பெட்ரோல் பங்க் ஒன்றில், கவாஸாகி இஸட்எக்ஸ்10ஆர் (Kawasaki ZX10R) சூப்பர் பைக் ஒன்று கீழே விழுந்து கிடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதன் அருகில் குறைந்த உயரம் கொண்ட பெண் ஒருவர் நின்று கொண்டுள்ளார். அவர்தான் அந்த பைக்கை ஓட்டி கொண்டு வந்தவர் ஆவார்.
ஆனால் எதிர்பாராத விதமாக பெட்ரோல் பங்க்கில், கவாஸாகி இஸட்எக்ஸ்10 ஆர் பைக்கை, அவர் கீழே போட்டு விட்டார். அத்துடன் அவரால் பைக்கை மீண்டும் மேலே தூக்க முடியவில்லை. நல்ல வேளையாக பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர், பைக்கை தூக்கி நிறுத்துவதற்கு, அந்த பெண்ணுக்கு உதவி செய்தார்.

அவர் உதவி செய்வதையும் நம்மால் வீடியோவில் பார்க்க முடிகிறது. இங்கே நல்ல விஷயம் என்னவென்றால், கீழே விழுந்த சூப்பர் பைக்கை எப்படி தூக்கி நிறுத்த வேண்டும்? என்பது அந்த பெட்ரோல் பங்க் ஊழியருக்கு நன்றாக தெரிந்துள்ளது. எனவே அவர் உடனடியாக பைக்கை தூக்கி நிறுத்தி விட்டார்.
இதன்பின் அந்த பெண் ரைடர், பைக்கில் ஏறி அமர்வதுடன், வீடியோ நிறைவடைந்து விடுகிறது. அவர் ஓட்டி வந்த கவாஸாகி இஸட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக்கின் விலை சுமார் 20 லட்ச ரூபாய் இருக்கும். அதே நேரத்தில் இந்த பைக்கின் எடை சுமார் 205 கிலோ ஆகும். எனவே இவ்வளவு அதிக எடை கொண்ட பைக்குகளை ஓட்டும்போது கவனமாக இருப்பது நல்லது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெண்கள் சூப்பர் பைக்குகளை ஓட்டுவதை நாங்கள் குறை சொல்லவில்லை. உண்மையில் அதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஆனால் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. ஏனெனில் சூப்பர் பைக்குகள் கீழே விழுந்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
முதலில் சூப்பர் பைக்கில் இருந்து கீழே விழுந்தால் காயங்கள் ஏற்படலாம். அத்துடன் பைக்கும் சேதம் அடையும். சூப்பர் பைக்குகளை சேதம் அடைந்தால், அவற்றை சரி செய்ய அதிக செலவு செய்ய நேரிடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. சாதாரண பைக்குகளை காட்டிலும், சூப்பர் பைக்குகளுக்கான ரிப்பேர் செலவு பல மடங்கு அதிகம்.
எனவே சூப்பர் பைக்குகளை ஓட்டும் பெண்கள், குறிப்பாக குறைந்த உயரம் கொண்ட பெண்கள், அதிக முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். சூப்பர் பைக்குகள் அதிக உயரம் கொண்டவை. அத்துடன் அகலமானவை. இதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு ரைடர் இருக்கையில் அமர்ந்தால் பயணம் சிறப்பாக இருக்கும்.
தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவை நன்றாக கவனித்தால், அந்த இளம் பெண் ரைடர் இருக்கையில் அமரும்போது, கால்கள் தரைக்கு சௌகரியமான முறையில் எட்டவில்லை என்பதை போல் தோன்றுகிறது. அவர் உயரம் குறைவாக இருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். கால்கள் தரைக்கு சௌகரியமான முறையில் எட்டவில்லை என்றால், பைக்குகளை கண்ட்ரோல் செய்வதென்பது கடினமான ஒன்றாக மாறி விடும்.
இதற்கிடையே தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நாம் காணும் பெண்ணுக்கு, சூப்பர் பைக்கை கையாளவோ அல்லது கீழே விழுந்தால் தூக்கவோ தெரியவில்லை என பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது போன்ற கடுமையான விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது எனவும் நாங்கள் கருதுகிறோம். அதே நேரத்தில் மறுபக்கம் ஒரு சிலர் இந்த பெண்ணுக்கு ஆதரவான கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








