பெட்ரூமில் செய்ய வேண்டியதை மெட்ரோ ரயிலில் அனைவரது முன்னிலையிலும் செய்த பெண்! வைரலாகும் வீடியோ!
டில்லி மெட்ரோ ரயிலை ஒரு பெண் பியூட்டி பார்லர் ஆக மாற்றிய சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இந்தப் பெண் மெட்ரோ ரயிலுக்குள் இருந்து சிகை அலங்காரம் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
டில்லி மெட்ரோ ரயிலில் அடிக்கடி வினோதமான சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாக இருக்கிறது. சமீப காலமாக டெல்லி மெட்ரோ ரயிலில் நடக்கும் சம்பவங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படியாக ஒரு பெண் தன் தலை முடியை ஸ்டிரைட்டனிங் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

டில்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் தங்கள் செல்போன் மற்றும் லேப்டாப்பை சார்ஜ் செய்து கொள்ள ஒரு பவர் சாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அவசரக் காலத்தில் பயணிகள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மெட்ரோ பயணம் சிறிய தூரப் பயணம் என்பதால் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் இந்த பவர் சாக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி மெட்ரோவில் பயணித்த பெண் ஒருவர் தான் கொண்டு வந்த ஹேர் ஸ்டிரைட்டனிங் கருவியை இந்த பவர் சாக்கெட்டில் சொருகி தனது முடியை ஸ்ட்ரைடெனிங் செய்யத் துவங்கி விட்டார். இதைக் கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமாகப் பார்த்தனர். ஒரு பெண் இப்படி செய்வதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

தன் வீட்டின் பெட்ரூமில் செய்ய வேண்டிய விஷயத்தை இந்தப் பெண் பொது இடத்தில் மெட்ரோவில் பலரது முன்னிலையில் செய்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சில இந்த காட்சியை தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவில் அந்த பெண்ணின் முகம் தெரியவில்லை.
இந்த வீடியோவை சில நெட்டிசன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக பல தினங்களில் வைரலாக பரவி வருகிறது. பல இந்த பெண்ணை விமர்சனம் செய்து வருகின்றனர். சிலர் இந்த பெண் செய்தது சரி என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதம் செய்து வருகின்றனர்.
ஆனால் இங்கு நம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் மெட்ரோ மெட்ரோ ரயிலில் இப்படியாக ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் கருவியைப் பயன்படுத்தலாமா கூடாதா என்பதைத் தான். மெட்ரோ ரயில்களில் கொடுக்கப்பட்டுள்ள பவர் சாக்கெட்கள் குறைவான பவரை மட்டுமே வழங்கும் திறன் கொண்டது. இது செல்போன், லேப்டாப்களை சார்ஜ் செய்வதற்கு மட்டுமே
இது முழுவதும் பேட்டரி பவரில் இயங்கும் திறன் கொண்டது. அதனால் இதில் அதிக பவரை இழுக்கும் எலெக்ட்ரிக் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது. மேலும் இந்த ஹேர் ஸ்ட்ரெய்டனிங் கருவி என்பது சூடாகி எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மை வாய்ந்தது. மெட்ரோ ரயில் என்பது அது பயணிக்கும் போது முற்றிலுமாக மூடி இருக்கும் நிலையில் பயணிக்கும்.
அப்பொழுது தெரியாமல் இப்படியாக ஹேர் ஸ்ரைட்டனிங் மெஷினை பயன்படுத்தும் போது அது தீப்பற்றினால் அந்த தீ விரைவாக மெட்ரோ ரயில் முழுவதும் பரவும் அபாயம் இருக்கிறது. இந்த சிறிய தவறாமல் மெட்ரோ ரயில் தீப்பிடித்து எறியக் கூட வாய்ப்புகள் உள்ளது. எதனால் இது போன்ற விஷயங்களைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீப காலமாக மெட்ரோவில் இப்படியாகச் சட்டவிரோதமாக பல்வேறு செயல்கள் நடப்பது வைரல் வீடியோவாக வெளியாகி வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் மெட்ரோ ரயில் உள்ளே பாதுகாப்பு காவலர்கள் யாரும் இல்லாததுதான். இதனால் பெட்ரோல் நிர்வாகம் ஒவ்வொரு மெட்ரோ ரயிலுக்குள்ளும் ஒரு பாதுகாப்பு காவலரை எப்பொழுதும் பணியில் இருக்கும் படி திட்டமிட வேண்டும்.


Click it and Unblock the Notifications








