இரயிலை அதிரவிட்ட கல்லூரி மாணவிகள்... டான்ஸ் ஸ்டெப்ஸ் செம்ம - வீடியோ இணையத்தில் வைரல்!!
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விஷயம் வைரலாகி வருவது சகஜமான ஒன்றுதான். இந்த வகையில், டெல்லியில் இரயிலில் குத்தாட்டம் போட்ட மாணவிகளின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
இந்த உலகில் எத்தனை முறை அனுபவித்தாலும் திகட்டாத விஷயங்களாக கடல், யானை மற்றும் இரயிலை கூறுவார்கள். இரயிலில் நீண்ட தொலைவிற்கு பயணம் செய்ய போகிறோம் என்றாலே ஓர் இனம் புரியாத சந்தோஷம் நம்மை தொற்றிக் கொள்ளும். குழுவாக இரயிலில் பயணம் செய்ய போகிறோம் என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு வாரத்திற்கு முன்பாகவே அந்த பயணத்திற்கு தயாராகி விடுவோம்.

அப்படித்தான், சமீபத்தில் தலைநகர் டெல்லியில் இரயிலில் குழுவாக பயணம் செய்த கல்லூரி மாணவிகள் சந்தோஷத்தை தாங்கி கொள்ள முடியாமல், குழுவாக சேர்ந்து ஓர் அசத்தலான நடனத்தை போட்டுள்ளனர். மேலும், அந்த நடனத்தை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில் காட்சித்தரும் மாணவிகள் அனைவரும் இரயில் பெட்டி ஒன்றில் அருகருகே இருக்கையை முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.
இரயில் பெட்டியின் வலது பக்க அப்பர் பெர்த்தில் இருந்த ஓர் மாணவியின் நடனத்தில் துவங்கி, இந்த வீடியோ இடதுப்பக்க அப்பர் பெர்த்தில் இருந்த மாணவியில் நடனத்திற்கு வந்து, கடைசியாக கீழே நின்று கொண்டிருந்த மாணவிகளின் நடன அசைவுகளில் முடிவடைகிறது. இந்த வீடியோவினை சம்பந்தப்பட்ட மாணவிகள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட, தற்போது அவர்களது வீடியோவினை பலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
Bhai mere se train mein logo ke aage khana bhi khaya nhi jata😔😭 pic.twitter.com/esLxk9ymom
— whydahi(Himesh's version) (@vaidehihihaha) May 4, 2023
மேலும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் மாணவிகளின் தைரியத்தையும், நடனத்தையும் பாராட்டும் அதேவேளையில், சிலர் மாணவிகளை கிண்டல் செய்யும் விதமாகவும் பதவிகளை பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் மாணவிகள் குறித்து ஆபாசமாகவும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். பொது வெளியில் இவ்வாறான வீடியோவை பதிவிட்டால், எல்லா தரப்பில் இருந்தும் கருத்துகள் வர தான் செய்யும்.
நல்ல கருத்துகள் மட்டும் தான் வர வேண்டும், ஆபாச கருத்துகள் வர கூடாது என சொல்ல முடியாது. அதுமட்டுமில்லாமல், வீடியோவில் மாணவிகளின் நடன அசைவுகளும் ஆபாசமானதாகவே உள்ளன. மற்றப்படி, இந்த சம்பவம் நடந்துள்ள இரயில் எது? என்பது குறித்த விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை. அதேபோன்று வீடியோவில் காட்சித்தரும் டெல்லி கல்லூரி மாணவிகள் குறித்த விபரங்களும் தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வாறான ஆபாச நடன அசைவுகளை இரயில் போன்ற பொது இடத்தில் செய்வது தவறாகும். ஏனெனில் மற்றவர்களுக்கு இது தவறான முன் உதாரணமாக அமையக்கூடும். அதுமட்டுமின்றி ஏற்கனவே கூறியதுபோல், இவ்வாறான செயல்களுக்கு சிலரிடம் இருந்து ஆபாச கமெண்ட்களும் வெளிவரலாம். அதனை எண்ணி பின்னர் மனம் குமுறுவதை விட இவ்வாறான ஆபாச நடன அசைவுகளை பொது வெளியில் செய்யாமல் இருப்பது அல்லது குறைந்தப்பட்சம் அதனை காட்சிப்படுத்தி இணையத்தில் பதிவிடாமல் தவிர்க்கலாம்.


Click it and Unblock the Notifications