ஹெல்மெட் எங்கேம்மா... முகத்தை காட்டுவதற்காகவே மேக்கப்-அப் போட்டு நடு இரவில் பெண்களின் பைக் ரைடு!

பொதுவாகவே, பெண்கள் அதிகமாக மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவது இல்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இன்றைய மாடர்ன் உலகில் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது என்றாலும், இந்தியாவில் இன்னமும் நிறைய பெண்கள் பைக் ஓட்ட தயக்கம் காட்டுவதை பார்க்க முடிகிறது. ஆனால், இங்கு சில இந்திய பெண்கள் நடு ராத்திரியில் பவர்ஃபுல்லான ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகளை ஓட்டி மாஸ் காட்டியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

பவர்ஃபுல்லான 2-சிலிண்டர் என்ஜினை கொண்ட பைக்குகளை கண்ட்ரோல் & ஹேண்ட்லிங் செய்வது என்பதே தனி திறமை ஆகும். சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பைக்கை பயன்படுத்தியவர்களுக்கு டபுள்-சிலிண்டர் என்ஜின் பைக் உடன் பழகுவதற்கு நேரம் எடுக்கும். அதிலிலும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டபுள்-சிலிண்டர் என்ஜின் பைக்குகளை பற்றி சொல்லவே வேண்டாம்.

girls rides royal enfield bikes

ஏனெனில், ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அவற்றின் அதிக எடையினால் தனித்தன்மை உடன் விளங்குகின்றன. அப்படியிருந்தும் இங்கு சில பெண்கள் 2-சிலிண்டர் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை அசால்ட்டாக ஓட்டி அசத்தி உள்ளனர். இதுதொடர்பாக, இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், நடு இரவில் இந்த பெண்கள் பைக்குகளை ஓட்டுவதை காணலாம்.

வீடியோவின் துவக்கத்தில், இரு பெண்கள் தங்களது ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி650 (Continental GT650) மற்றும் இண்டர்செப்டர் 650 (Interceptor 650) பைக்குகளில் தங்களது மற்றொரு தோழிக்காக காத்திருக்கின்றனர். பின்னர், அந்த தோழியும் தனது ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கில் வந்த பின்னர் இந்த பெண்களின் இரவு பயணம் துவங்குகிறது.

girls rides royal enfield bikes

காண்டினெண்டல் ஜிடி650 மற்றும் இண்டர்செப்டர் 650 இவை இரண்டுமே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 2-சிலிண்டர் என்ஜினை கொண்ட 650சிசி மோட்டார்சைக்கிள்கள் ஆகும். இந்த பைக்குகளை ஏற்கனவே ஓட்டிய நன்கு அனுபவமிக்கவர்கள் போன்று இந்த பெண்கள் விளங்குகின்றனர். இதனால்தான், தேவையான நேரங்களில் முழு ஆக்ஸலரேஷனை கொடுத்து இவர்களால் அதிவேகத்தில் பைக் ஓட்ட முடிகிறது.

சமூக வலைத்தளங்களில் கவனத்தை பெறுவதற்காக இவ்வாறு அவர்கள் வீடியோவை காட்சிப்படுத்தி பதிவேற்றம் செய்துள்ளனர் என்பது பார்த்தாலே தெரிகிறது. ஆனால் அதற்காக சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதது பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது. எல்லாவற்றிற்கும் முக்கியமான ஹெல்மெட் இவர்கள் மூன்று பேரின் தலையிலும் இல்லை.

girls rides royal enfield bikes

இதற்காக இந்த பெண்கள் மீது போலீசார் அபராதம் விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல், பைக் ரைடிங்கில் உண்மையாக ஆர்வம் உள்ளவர்கள் அதற்கேற்ப ரைடிங் ஜாக்கெட், கையுறைகள், கை மற்றும் கால்முட்டி பாதுகாப்பான்கள் உள்ளிட்டவற்றை முறையாக அணிந்திருப்பர். ஆனால், இந்த பெண்களுக்கு தங்களது முகத்தை காட்டுவதுதான் முக்கியமானதாக இருந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இவ்வாறு இன்ஸ்டாகிராம்/ யூடியூப் ரீல்ஸ் வீடியோவுக்காக போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. இதற்கு ஒருபக்கம் போலீசார் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இவ்வாறான செயல்கள் குறைந்தப்பாடில்லை. ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் கலக்கிய இந்த 3 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Friday, February 28, 2025, 16:49 [IST]
English summary
Girls rides royal enfield bikes without helmet check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X