பாக்க தேவத மாதிரி இருக்காங்க! ஆனா செஞ்ச காரியத்தை பாத்தீங்களா! வீடியோவ முழுசா பாத்ததும் தூக்கி வாரி போட்றுச்சு
இந்தியாவில் ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), வாட்ஸ்அப் (Whatsapp), யூடியூப் (Youtube) மற்றும் எக்ஸ் (X) ஆகிய சமூக வலை தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த சமூக வலை தளங்களில் வேகமாக பிரபலமாக வேண்டும் என்பதற்காக, ஒரு சிலர் ஆபத்தான பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுகின்றனர். கடந்த காலங்களில், பொது சாலைகளில் மிகவும் அபாயகரமான பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்ட பலரின் வீடியோக்கள் வெளியாகி, அனைவர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வரிசையில் மற்றொரு அதிர்ச்சிகரமான புதிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வைரல் வீடியோவில் இளம்பெண் ஒருவர் யமஹா ஆர்எக்ஸ்100 (Yamaha RX100) பைக்கில் ஸ்டண்ட் செய்வதை பார்க்க முடிகிறது. அவரது கைகள், ஹேண்டில்பாரில் இல்லை. பைக் தானாகவே பயணிக்கிறது. அந்த இளம்பெண் 2 கால்களையும் ஒரு பக்கமாக போட்டு கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்.

போதாக்குறைக்கு ஹெல்மெட் உள்பட எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களையும் அவர் அணியவில்லை. பொது சாலையில் மிகவும் அபாயகரமான முறையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த இளம்பெண், சமூக வலை தளங்களில் பிரபலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே 'ரீல்ஸ்' மூலம் லைக்குகளை பெறுவதற்காகவே இந்த அபாயகரமான பைக் ஸ்டண்ட்டில் அவர் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளம்பெண்ணின் இந்த செயல், நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இளம்பெண் மீது சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மிக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் எண்ணமும் கூட!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாம் தற்போது காணும் வீடியோ, புனே நகரில் எடுக்கப்பட்டுள்ளது. புனே மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்களும், இளம்பெண்களும் 'ரீல்ஸ்' மோகத்தில் இப்படிப்பட்ட ஆபத்தான பைக் ஸ்டண்ட்களை மேற்கொள்கின்றனர். பைக் ஸ்டண்ட்களில் ஆர்வம் இருப்பதில் தவறு ஒன்றும் கிடையாது.
ஆனால் அதை தங்களுக்கும், மற்றவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் பொது சாலைகளில் செய்ய கூடாது. ஆர்வம் உள்ளவர்கள் மிகவும் பாதுகாப்பான தனியார் இடங்களில், பாதுகாப்பான முறையில் பைக் ஸ்டண்ட்களை மேற்கொள்ளலாம். அதுவும் ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் அணிந்து கொண்டுதான் செய்ய வேண்டும்.
அதை விடுத்து விட்டு லைக்குகளை குவிப்பதற்காக, எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், பொது சாலைகளில் மேற்கொள்ளப்படும் அபாயகரமான பைக் ஸ்டண்ட்களை ஏற்று கொள்ள முடியாது. எனவே விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இது போன்ற நிகழ்வுகள், மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில், அபாயகரமான பைக் ஸ்டண்ட்களினால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








