மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடி டீலர்களுக்கு ஆர்டிஓக்கள் புது ட்ரீட்மெண்ட் மூலம் செக் வைத்துள்ளனர்.

மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி

உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஒரு ஆண்டில் மட்டும் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் 1.50 லட்சம் பேர். மேலும் பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடையவும் சாலை விபத்துக்கள் காரணமாக உள்ளன.

மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி

எனவே சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் தரப்பில் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் விதிகளை பின்பற்ற வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி

இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு சமீபத்தில் பல மடங்கு உயர்த்தியது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்தியாவில் மத்திய அரசால், புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி

இந்தியாவை பொறுத்தவரை, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான் சாலை விபத்துக்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இருக்கும் அதிகபட்ச பாதுகாப்பு கவசமே ஹெல்மெட்தான். எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது.

மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி

ஆனால் பெரும்பாலானோர் இந்த விதிமுறையை பொருட்படுத்துவது கிடையாது. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்காக இந்தியாவில் மற்றொரு விதியும் அமலில் உள்ளது. ஆம், புதிய டூவீலர்களை வாங்கும் அனைவருக்கும் 2 ஹெல்மெட்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இப்படி ஒரு விதிமுறை இருப்பதே பலருக்கு தெரியாது.

மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி

மத்திய மோட்டார் வாகன விதிகள், 138 (4)(f)-ன்படி, இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு, வாகன உற்பத்தியாளர்கள் ஹெல்மெட்களையும் சப்ளை செய்ய வேண்டும். அதுவும் இந்திய தர நிர்ணய சட்டம் (Bureau of Indian Standards Act), 1986 (63)-ன் கீழ், இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards) பரிந்துரைக்கு ஏற்ப அந்த ஹெல்மெட்கள் இருக்க வேண்டும்.

மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி

ஆனால் இப்படி ஒரு விதிமுறை இருப்பது தெரியாததால், வாகன ஓட்டிகள் எளிதில் ஏமாந்து விடுகின்றனர். புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கும் பலருக்கு டீலர்ஷிப்களில் இரண்டு ஹெல்மெட்கள் வழங்கப்படுவது கிடையாது. அரிதிலும் அரிதாக ஒரு சில இடங்களில் ஒரு ஹெல்மெட் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி

எனவே இந்த விதிமுறையை முறையாக பின்பற்ற உத்தரவிட வலியுறுத்தி, பாம்பே உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச்சில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விதிமுறைகளின்படி வாடிக்கையாளர்களுக்கு முறையாக ஹெல்மெட் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி

அத்துடன் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், வாகனங்கள் பதிவு செய்வதை நிறுத்தி விடுவோம் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். நீதிபதிகளின் இந்த உத்தரவையடுத்து, வாகன டீலர்களிடம் நாக்பூர் ஆர்டிஓக்கள் கடுமை காட்ட தொடங்கியுள்ளனர். இதன்படி டீலர்கள் இரண்டு ஹெல்மெட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தால் மட்டுமே வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி

நாக்பூர் நகரம் மற்றும் கிழக்கு என இரண்டு ஆர்டிஓ அலுவலகங்களில் தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. 2 ஹெல்மெட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதா? என்பதை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்கின்றனர். ஹெல்மெட்கள் வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி

இதுகுறித்து ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ''புதிய இரு சக்கர வாகனங்களை டெலிவரி கொடுக்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஹெல்மெட்களை வழங்க வேண்டும் என அனைத்து டீலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எங்களது மோட்டார் வாகன ஆய்வாளர்களும், உதவி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அனைத்து வாடிக்கையாளர்களின் பில்களையும் சரிபார்க்கின்றனர்.

மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி

இரண்டு ஹெல்மெட்களை வாடிக்கையாளர்கள் பெற்று விட்டனரா? என்பதை உறுதி செய்வதற்காக பில்கள் க்ராஸ் செக் செய்யப்படுகிறது'' என்றனர். இதுகுறித்து டூவீலர் டீலர்கள் சிலர் கூறுகையில், ''நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, நாக்பூரில் உள்ள அனைத்து டீலர்களும் தற்போது இரண்டு ஹெல்மெட்களை வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக வழங்கி வருகின்றனர்.

மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி

ஆனால் ஒரு சில வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தங்களிடம் ஹெல்மெட் இருப்பதாகவும், எனவே அதற்கு பதிலாக விலையை குறைத்து கொள்ளும்படியும் கேட்கின்றனர். ஆனால் அதுபோன்ற வாதங்களை நாங்கள் நிராகரித்து விடுகிறோம்'' என்றனர். நீதிமன்றம் மற்றும் ஆர்டிஓக்களின் அதிரடியால் புதிதாக டூவீலர் வாங்குபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2020, 20:13 [IST]
English summary
Give 2 Helmets To All Two Wheeler Buyers: RTO To Dealers. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+