ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் வைத்திருக்கும் கார்களா இவை!! மேக்ஸ்வெல் உண்மையிலேயே விசித்திரமான மனிதர்!
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இதற்கு முன் அவரை பற்றி தெரியாதவர்களுக்கு கூட, சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையேயான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு தெரிந்திருக்கும்.
ஏனெனில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் தனியொரு ஆளாக 200 ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கி மேக்ஸ்வெல் 200 ரன்கள் குவித்தது இணையத்தில் பலரால் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. இத்தகைய திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரரிடம் தற்போதைக்கு வெறும் 2 சொகுசு கார்கள் மட்டும்தான் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

நிஸான் மேக்ஸிமா (Nissan Maxima): கிரிக்கெட்டர் மேக்ஸ்வெல் வைத்திருக்கும் தனித்துவமான கார்களுள் ஒன்று நிஸான் மேக்ஸிமா ஆகும். ஏனெனில், இந்த நிஸான் காரை வெளிநாடுகளில் கூட பலர் வைத்திருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள். இந்தியாவில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டது இல்லை. இப்படிப்பட்ட காரையே மேக்ஸ்வெல் வைத்துள்ளார்.
மேக்ஸிமா, நிஸானின் 4-கதவுகளை கொண்ட செடான் ரக கார் ஆகும். இந்த காரை சமீபத்தில் தான் வெளிநாடுகளில் நிஸான் நிறுவனம் அப்டேட் செய்து இருந்தது. இருப்பினும், பழைய மேக்ஸிமா காருடன் ஒப்பிடுகையில் புதிய மேக்ஸிமாவில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. நிஸான் விற்பனை செய்த அனைத்து மேக்ஸிமா கார்களிலும் வி6 என்ஜின் பொருத்தப்பட்டது.

வி6 என்ஜின் விலை குறைவான மேக்ஸிமா கார்களில் கூட அதிகப்பட்சமாக 300 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த காரில் என்ஜின் உடன் சிவிடி என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆம், இது ஓர் ஆட்டோமேட்டிக் நிஸான் கார் ஆகும். இந்த காரின் விலை கொஞ்சம் அதிகம் தான். இதற்கேற்ப இந்த காரின் உட்பக்க கேபின் நன்கு பிரீமியம் தரத்தில் வழங்கப்படுகிறது.
ஆடி க்யூ7 (Audi Q7): மேக்ஸ்வெல் வைத்திருக்கும் மிக விலை உயர்ந்த சொகுசு கார் இதுவாகும். ஜெர்மன் ஸ்டைல் லக்சரி காரான க்யூ7 ஆனது ஒரு அக்மார்க் விலையுயர்ந்த ஆடி கார் ஆகும். அதாவது, அந்த அளவிற்கு இந்த காரின் உட்பக்க கேபின் லக்சரி அம்சங்களினால் நிரம்பிக் கிடக்கிறது. அத்துடன், இந்த ஆடி காரில் 3-வரிசை இருக்கை அமைப்பு கொடுக்கப்படுவதால், பயணிகள் நிறைய பேரை ஏற்றிச் செல்லலாம்.

ஆடி க்யூ7 மொத்தம் 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒரு என்ஜின் ஆப்ஷனில் அதிகப்பட்சமாக 248 எச்பி வரையிலான இயக்க ஆற்றலும், மற்றொரு டர்போ வி6 என்ஜின் ஆப்ஷனில் சுமார் 335 எச்பி வரையிலான இயக்க ஆற்றலும் காருக்கு கிடைக்கிறது.
டர்போ என்ஜின் ஆப்ஷனில் கூடுதலாக செயல்படுதிறன் கிடைப்பது மட்டுமின்றி, இதற்கேற்ப இந்த என்ஜின் ஆப்ஷனில் வாங்கும்போது ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தையும் காரில் ஆடி வழங்குகிறது. ஆனால், இதில் எந்த என்ஜின் ஆப்ஷனில் மேக்ஸ்வெல் க்யூ7 காரை வைத்துள்ளார் என்பது தெரியவில்லை. இந்த விலைமிக்க ஆடி காரில் பயணிகளின் சவுகரியத்திற்காக ஏர் சஸ்பென்ஷன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுமார் ரூ.200 கோடியில் சொத்து மதிப்பை கொண்டுள்ள ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரிடம் வெறும் 2 சொகுசு கார்கள் மட்டுமே இருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. ஆச்சிரியத்தை தாண்டி, இந்த இரு சொகுசு கார்களை மட்டும்தான் மேக்ஸ்வெல் வைத்துள்ளாரா என்கிற சந்தேகத்தையும் கிளப்புகிறது.


Click it and Unblock the Notifications









