ஸ்கூல் நடத்தியே ரேஞ்ச் ரோவர் காரை வாங்கிட்டாரா! இவரா அந்த பள்ளி கூடங்களை நடத்துறாரு!..

பள்ளிக் கூடங்களை நடத்தி வரும் ஒருவர் மிகவும் காஸ்ட்லியான சொகுசு காரை வாங்கி ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கின்றார். குளோபல் எடுகேஷனல் சொல்யூஷன்ஸ் (Global Educational Solutions), எனும் பெயரில் உலக நாடுகளில் பள்ளிக் கூடம் நடத்தி வருபவர் முனீர் அன்சாரி பரயில். இவரே மிக விலை உயர்ந்த காரை வாங்கி இருக்கின்றார். லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Land Rover Range Rover Sport) சொகுசு கார் மாடலை வாங்கி இருக்கின்றார்.

இது ஓர் ஆடம்பர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் முனீர் அன்சாரி பரயில்-ம் ஒருவர் ஆவார். கேரளாவைப் பூர்வீமாகக் கொண்ட இவர் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் பள்ளிக் கூடங்களை நடத்தி வருகின்றார். அந்தவகையில், அரபு நாட்டிலும் இவருடைய பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன.

Muneer ansari parayil buys land rover range rover sport

குறிப்பாக, அபுதாபி, அல்அயின், பஹ்ரைன், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் அவருடைய பள்ளிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவருடைய பெரும்பாலும் நர்சரி பள்ளிக் கூடங்களையே நடத்தி வருகின்றார். இத்தகைய நபரே தற்போது முத்தூட் மோட்டார்ஸ் எனும் லேண்ட் ரோவர் கார் விற்பனையாளர் வாயிலாக புத்தம் புதிய ஆடம்பர காரை வாங்கி இருக்கின்றார்.

அந்த கார் மாடல் பிரீமியம் நிறமான கியோலா கிரீன் எனும் வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் ஒரே ஒரு யூனிட்டே ரூ. 1 கோடியே 45 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த கார் மாடலின் உற்பத்தி பணிகள் இந்தியாவிலேயே நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட முதல் ரேஞ்ச் ரோவர் கார் மாடல் என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது. இந்தியர்களின் பெரும் பிரியமான கார் மாடலாக லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் உள்ளது.

இந்த கார் மாடலை இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் தொடங்கி திரை நட்சத்திரங்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் பலரிடத்தில் இந்த கார் மாடல் பயன்பாட்டில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இந்த கார் மாடலை இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் லேண்ட் ரோவர் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Land rover range rover sport

3.0 லிட்டர் பெட்ரோல் டைனமிக் எஸ்இ மற்றும் 3.0 லிட்டர் டீசல் டைனமிக் எஸ்இ ஆகியவையே அவை ஆகும். முதல் எஞ்சின் அதிகபட்சமாக 394 பிஎச்பி பவரையும், 550 என்எம் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது. இரண்டாவது எஞ்சின் அதிகபட்சமாக 346 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை உருவாக்கும்.

இரண்டிலும் 8ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த காரில் அட்வான்ஸ்டு அம்சங்களாக 13.1பிவி ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 13.7அங்குல டிஜிட்டல் டிரைவர்களுக்கான திரை, ஹெட்ஸ்-அப் திரை மற்றும் ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், மிக சௌகரியமான ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு டைனமிக் ஏர் சஸ்பென்ஷன், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு செல்வந்தர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, லேண்ட் ரோவரின் ரேஞ்ச் ரோவர் மாடலில் கிடைக்கும் கார் மாடல்களுக்கு டிமாண்ட் மிக அமோகம். இதை உறுதிப்படுத்தும் விதமாக உலக நாடுகள் பலவற்றில் பள்ளிக் கூடங்களை நடத்திவரும் முனீர் இந்த காரை வாங்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, March 3, 2025, 23:20 [IST]
English summary
Global educational solutions managing director muneer ansari parayil buys land rover range rover car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+