ரூ. 1.45க்கு எரிபொருளா... பேசமா இந்த நாட்டுக்கு போய்டலாமா?.. உலக நாடுகளின் எரிபொருள் விலை விபரம்!!

எந்த நாட்டில் மிகக் குறைவான விலையிலும், எந்த நாட்டில் மிக மிக அதிக விலையிலும் எரிபொருள்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ரூ. 1.45க்கு பெட்ரோலா... பேசமா இந்த நாட்டுக்கு போய்டலாமா?.. உலக நாடுகளின் எரிபொருள் விலை விபரம்!!

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரூ. 100ஐ பெட்ரோல் விலை தொட்டிருக்கின்றது. டீசல் விலையும் விரைவில் நூறைத் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

ரூ. 1.45க்கு பெட்ரோலா... பேசமா இந்த நாட்டுக்கு போய்டலாமா?.. உலக நாடுகளின் எரிபொருள் விலை விபரம்!!

கடும் விலையுயர்வால் காரில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் இருசக்கர வாகனங்களுக்கும், இருசக்கர வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் மிதிவண்டிகளுக்கும் மாற தொடங்கியிருக்கின்றனர். அந்தளவிற்கு மிகக் கடுமையாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துக் கொண்டே வருகின்றது.

ரூ. 1.45க்கு பெட்ரோலா... பேசமா இந்த நாட்டுக்கு போய்டலாமா?.. உலக நாடுகளின் எரிபொருள் விலை விபரம்!!

இந்தியாவில் இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைக் கொண்டிருக்கும் அதேவேலையில் உலக நாடுகள் சிலவற்றில் மிக மிகக் குறைவான விலையில் எரிபொருள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. அந்தவகையில், எந்த நாட்டில் மிகக் குறைவான விலையிலும், எந்த நாட்டில் மிக மிக அதிக விலையிலும் எரிபொருள்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

ரூ. 1.45க்கு பெட்ரோலா... பேசமா இந்த நாட்டுக்கு போய்டலாமா?.. உலக நாடுகளின் எரிபொருள் விலை விபரம்!!

குளோபல் பெட்ரோல் பிரைசஸ்.காம் (Global Petrol Prices.com) எனும் தளம் கடந்த 14ம் தேதி வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது வெளியிட்டிருக்கும் தகவலின்படி, தென் அமெரிக்காவின் வெனிசுலாவில் 0.02 அமெரிக்க டாலர்கள் எனும் விலையில் எரிபொருள் விற்பனைக்குக் கிடைப்பது தெரிய வந்திருக்கின்றது.

ரூ. 1.45க்கு பெட்ரோலா... பேசமா இந்த நாட்டுக்கு போய்டலாமா?.. உலக நாடுகளின் எரிபொருள் விலை விபரம்!!

இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 2க்கும் குறைவான விலை ஆகும். அதாவது, ஒரு ரூபாய் 48 காசுகளுக்கு வெனிசுலாவில் ஒரு லிட்டர் எரிபொருள் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆச்சரியமா இருக்கா, இது உண்மைதான். இதற்கு அடுத்தபடியாக ஈரான் நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இங்கு ரூ. 4.75க்கு எரிபொருள் லிட்டர் ஒன்று விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ரூ. 1.45க்கு பெட்ரோலா... பேசமா இந்த நாட்டுக்கு போய்டலாமா?.. உலக நாடுகளின் எரிபொருள் விலை விபரம்!!

ஆசியாவிலேயே இங்குதான் மிக மிக மலிவு விலையில் எரிபொருள் விற்கப்படுகின்றது. இதையடுத்து மிக மிக குறைவான விலையில் மத்திய ஆப்பிரிக்காவின் அங்கோளாவில் எரிபொருள் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இங்கு ரூ. 18.24க்கு லிட்டர் எரிபொருள் விற்கப்பட்டு வருகின்றது. இவையே உலகளவில் ரூ. 20க்கும் குறைவான விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகும் இடங்களாகும்.

ரூ. 1.45க்கு பெட்ரோலா... பேசமா இந்த நாட்டுக்கு போய்டலாமா?.. உலக நாடுகளின் எரிபொருள் விலை விபரம்!!

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் எவ்வளவு விலையில் பெட்ரோல் விற்பனைக்குக் கிடைக்கிறது என தெரிஞ்சா இன்னும் ஷாக்காயிருவீங்க. அங்கு லிட்டர் ஒன்று ரூ. 50.11க்கு விற்கப்பட்டு வருகின்றது. இந்தியாவைக் காட்டிலும் 50 சதவீதம் மிகக் குறைவான விலை இதுவாகும். நமது நாட்டில் பெட்ரோல் விலை ரூ. 100 தாண்டி ஓடத் தொடங்கியிருக்கின்றது.

ரூ. 1.45க்கு பெட்ரோலா... பேசமா இந்த நாட்டுக்கு போய்டலாமா?.. உலக நாடுகளின் எரிபொருள் விலை விபரம்!!

இந்தியாவில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் ரூ. 100க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனைச் செய்யப்படுகின்றது. சென்னையில் சில தனியார் எண்ணெய் நிறுவனங்கள் ரூ. 100க்கு பெட்ரோலை விற்கத் தொடங்கியிருக்கின்றன. அதேசமயம், பொது எண்ணெய் நிறுவனங்கள் 99.14 ரூபாய் என்ற விலையில் ஒரு லிட்டர் பெட்ரோலை விற்று வருகின்றன. இது, ஜூன் 22ம் தேதி நிலவரப்படியிலான விலை மதிப்பாகும்.

ரூ. 1.45க்கு பெட்ரோலா... பேசமா இந்த நாட்டுக்கு போய்டலாமா?.. உலக நாடுகளின் எரிபொருள் விலை விபரம்!!

இந்தியாவைக் காட்டிலும் அதிக விலையில் ஏதேனும் நாட்டில் எரிபொருள் விற்கப்படுகிறதா என்கிற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். நிச்சயம் இருக்கு நமது நாட்டைக் காட்டிலும் பல மடங்கு அதிக விலையில் எரிபொருளை விற்கும் நாடுகள் பல இருக்கின்றன.

ரூ. 1.45க்கு பெட்ரோலா... பேசமா இந்த நாட்டுக்கு போய்டலாமா?.. உலக நாடுகளின் எரிபொருள் விலை விபரம்!!

அதில் உச்சபட்ச விலையில் எரிபொருளை விற்கும் ஊராக சீனாவின் ஹாங்காங் இருக்கின்றது. ஆசிய கண்டத்திலேயே அதிக விலையில் எரிபொருளை விற்கும் நகரமாகவும் ஹாங்காங் இருக்கின்றது. இங்கு ஒரு லிட்டர் எரிபொருள் 183 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

ரூ. 1.45க்கு பெட்ரோலா... பேசமா இந்த நாட்டுக்கு போய்டலாமா?.. உலக நாடுகளின் எரிபொருள் விலை விபரம்!!

இதேபோன்று, ஆஸ்திரியா, ஏமன், நியூசிலாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், அயர்லாந்து, ஜெர்மன், ஃபிரான்ஸ், சுவீடன், பின்லாந்து, கிரீஸ், போர்ச்சுகள், நார்வே நெதர்லாந்து, இத்தாலி, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளிலும் பெட்ரோல், டீசல் இந்தியாவைக் காட்டிலும் பல மடங்கு அதிக விலையில் விற்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Global Petrol Prices List. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X