டோல்கேட்டை எல்லாம் தூக்க போறாங்க! முதல்ல இந்த ரோட்டுல போறவங்களுக்கு தலைவலி இல்ல!

இந்தியா முழுவதும் தற்போது ஃபாஸ்ட் டேக் கார்டு முறையில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த முறையை மாற்றி ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்து இருந்த நிலையில், முதற்கட்டமாக இது எந்த பகுதியில் இது அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு ஜிபிஎஸ் முறையிலான சுங்க கட்டணம் முறை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

நாடாளுமன்றத்தில் தற்போது கூட்டம் நடந்து வரும் நிலையில், இதில் உறுப்பினர்கள் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான பதில்களை தற்போது அந்தந்த அமைச்சகம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டு வருகிறது. இதன் இந்நிலையில் இந்தியாவில் புதிய சுங்க கட்டண வசூல் முறை அமலுக்கு வருவது குறித்த புதிய தகவல் ஒன்றை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதிலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மைசூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண் 275 மற்றும் ஹரியானாவில் உள்ள பானி பட் கிஷார் இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண் 709 ஆகிய இரண்டு நெடுஞ்சாலைகளிலும் முதற்கட்டமாக ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான ஜிபிஎஸ் முறை டோல் கட்டண வசூல் அமலுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறியுள்ளார்.

அதாவது இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகளை அமைக்காமல், இந்த சாலைகள் வழியாக பயணிக்கும் வாகனங்களின் நம்பர் பிளேட் கண்காணிக்கப்பட்டு, நேரடியாக அந்த நம்பர் பிளேட் உடன் இணைப்பில் இருக்கும் வங்கி கணக்கு எண்ணிலிருந்து பணத்தை கழித்துக் கொள்ளும் முறையை கொண்டு வரப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் இந்த தொழில்நுட்பம் விரைவில் இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றிவிட்டு, இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு இறங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதன்படி இந்தியாவில் இன்னும் 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதை விரைவில் முடிப்பதற்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் நெடுஞ்சாலை துறை தரப்பில் இருந்து சாலையோரம் மொத்தம் 402.28 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும். குறிப்பாக சாலை நடுவில் உள்ள தடுப்புகளில் மட்டும் இதுவரை 21.67 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை தமிழகத்தில் 29 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களும, தெலுங்கானாவில் 24 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களும், ஆந்திராவில் 36 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களும், கர்நாடகாவில் 40 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களும், கேரளாவில் 11 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களும் இதுவரை முடிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது சுங்க கட்டணம் முழுவதும் பாஸ்ட் டேக் கார்டு முறையில் வசூலிக்கட்டும் வரும் நிலையில் விரைவில் இந்த கார்டுகளும் நீக்கப்பட்டு ஜிபிஎஸ் அடிப்படையான சுங்க கட்டண வசூல்முறை அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் சாலையில் பயணிக்கும் பயணிகளுக்கும் சுங்க கட்டணம் என்பது குறைவாக இருக்கும். சாலையில் எவ்வளவு தூரம் பயணிக்கிறோமோ அவ்வளவு தூரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்ற சூழ்நிலை ஏற்படும்.

தற்போது ஒரு வாகனம் சுங்கச்சாவடியை கடந்து அடுத்த சுங்கச்சாவடி வரை எவ்வளவு தூரம் பயணிக்கிறதோ அவ்வளவு தூரத்திற்கும் சுங்க கட்டணத்தை செலுத்தி வருகிறது. இந்த புதிய தொழில்நுட்பம் அமலுக்கு வருவதன் மூலம் பயணிகளுக்கு இந்த அதிக கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. அதே நேரம் குறைவான கட்டணம் இருப்பதால் அதிகமான வாகனங்கள் பயணம் செய்யும் இதன் காரணமாக அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்க கட்டணம் அதிகமாக இருப்பதாக நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் புகார் எழுதுகிறது. சுங்கு சாவடிகளில் பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இதையெல்லாம் தவிர்ப்பதற்காக இந்த புதிய தொழில்நுட்பம் கொண்டுவர மத்திய அரசின் முயற்சி செய்து வருவது நிச்சயம் பாராட்டத்தக்கது தான். இதை விரைவாக இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டு வந்தால் நிச்சயம் பெரிய அளவில் பலன் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 25, 2024, 13:40 [IST]
English summary
Gnss based toll system replace fastag bengaluru mysuru expressway
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X