ஏர்போர்ட் உள்ளே பேசக்கூடாத 3 வார்த்தைகள் இது தான்! விளையாட்டுக்கு பேசினா கூட ஜெயில் தான்!

விமான நிலைய பாதுகாப்பு சோதனையின் போது "அந்தப் பையில் வெடிகுண்டு இருக்கிறது" என சொன்ன இரண்டு பயணிகளை தற்போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் கொண்டு வந்த பையில் எந்த விதமான குண்டுகளும் இல்லை என்றாலும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விரிவான விபரத்தை காணலாம் பாருங்கள்.

கோவாவில் உள்ள டேபோலின் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒரு முக்கியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த விமான நிலையத்தில் வழக்கம்போல பயணிகள் எல்லாம் விமானத்தில் ஏறுவதற்காக பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகள் ஒவ்வொருவராக சோதனை செய்து அவர்களை விமானத்திற்குள் ஏற அனுமதித்துக் கொண்டிருந்தனர்.

goa airport bomb hoax

வழக்கமாக எல்லா விமான நிலையங்களிலும் பின்பற்றுவது போல பயணிகளின் பைகள் எல்லாம் தனியாக சோதனை செய்யப்பட்டு கொண்டிருந்தது. அப்பொழுது பாதுகாப்பு சோதனைக்காக மத்திய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான அதுல் குமார் கேவாட் என்பவரும் கொல்கத்தாவை சேர்ந்த 29 வயதான திரிதி ஜனா என்பவரும் பாதுகாப்பு சோதனைக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவர்கள் அருகில் இருந்த பயணியிடம் ஒரு பையை குறிப்பிட்டு அந்தப் பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார்கள். இதை கேட்டு பதற்றம் அடைந்து அந்த பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறையிட்டார். உடனடியாக அவர்களிடம் விசாரணை நடத்திய அவர்கள் கொண்டு வந்த பை ஆகியவற்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

goa airport bomb hoax

இது எல்லாம் இரவு சுமார் 11:40 மணிக்கு நடந்தது. இவர்கள் சோதனை நடத்தியதில் எந்தவிதமான வெடிகுண்டும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்கள் பயணிக்க வேண்டிய விமானமும் முற்றிலுமாக சோதனை செய்யப்பட்டது. அதிலும் எதுவும் இல்லை என தெரிய தெரிந்த வந்தவுடன், சுமார் 90 நிமிடங்கள் காலதாமதமாக அந்த விமானம் புறப்பட்டு சென்றது. ஆனால் அதில் இந்த இரண்டு பயணிகளும் ஏற அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை முழுவதும் சோதனை செய்யப்பட்டு எதுவும் இல்லை என தெரிந்த பின்பு விமான பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த இருவர் மீதும் விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் இவர்களை கைது செய்து ஏன் இப்படி சொன்னார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இந்த ஜோடி கோவாவிற்கு விடுமுறையை கழிப்பதற்காக வந்துள்ளனர்.

goa airport bomb hoax

அவர்கள் விளையாட்டிற்கு இப்படியாக பேசியுள்ளனர். அதுவே தற்போது மிக மோசமான விளைவை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. பலருக்கு விமான நிலையத்திற்குள் இருக்கும் போது சில வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பேசக்கூடாது என்ற விவரம் தெரியவில்லை. குறிப்பிட்ட சில வார்த்தைகளை விமான நிலையத்திற்குள் இருக்கும் போது பயணிகளோ அல்லது விமான நிலைய ஊழியர்களோ யார் பேசினாலும் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விமான நிலையத்திற்குள் இருக்கும்போது துப்பாக்கி, வெடிகுண்டு, தீவிரவாதி இந்த மூன்று வார்த்தையை எப்படி பயன்படுத்தினாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முழு உரிமை இருக்கிறது. இந்த வார்த்தையை அவர்கள் விளையாட்டிற்கு பேசினாலும் அல்லது தெரியாமல் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வார்த்தை மட்டுமல்லாமல் விமான நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமான நிலைய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விமான நிலையை பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை பிடித்து அவரது செய்கை என்ன என்பதை விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து ஒப்படைப்பார்கள்.

அதன் பின்பு காவல் நிலை அதிகாரிகள் தான் இந்த வார்த்தையை ஏன் பேசினீர்கள் என விசாரிப்பார்கள். அவர்கள் விசாரித்து அதன் பின்பு குறிப்பிட்ட சம்பவத்தில் பேசக்கூடாத வார்த்தையை பேசிய நபர் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது விரிவாக தெரியவரும்.

அதே நேரம் இப்படியான வார்த்தைகளைப் பேசிவிட்டால் நிச்சயம் அந்த பயணி அவர் புக் செய்த விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் தடுக்கப்பட்டு விமானம் முழுவதுமாக சோதனை செய்யப்பட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு திருப்தி கிடைத்த பின்பே விமானம் கிளம்ப அனுமதிக்கப்படும்.

குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் கோவா விமான நிலைய போலீசார் தன் பையில் குண்டு இருக்கிறது என பேசிய இருவர் மீது ஐபிசி சட்டம் 55 படி பொது இடத்தில் தவறான முறையில் நடந்து கொண்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இவர்கள் கோர்ட்டில் வழக்கை சந்தித்து இதற்கான விளக்கத்தை கூறி அதற்கான தண்டனையை பெற வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான நிலையம் என்பது அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாகும். இதனால் இங்கு ஏராளமான பாதுகாப்பு போலீசார்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அவர்கள் சிறிய விஷயத்தை கூட கவனித்து கவனித்து பாதுகாப்பு பணியை செய்வார்கள். அதனால் நீங்கள் இங்கே நீங்கள் விளையாட்டுக்கு பேசும் வார்த்தை கூட சில நேரம் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வார்த்தையாக மாறிவிடும். இதனால் விமான நிலையத்திற்குள் இப்படியான வார்த்தைகளை பேசுவதை தவிர்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 16, 2023, 17:00 [IST]
English summary
Goa airport bomb hoax couple detained in security check
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X