பெண் சுற்றுலா பயணி விபத்தில் பலியான விவகாரம்-கொந்தளித்த முதலமைச்சர்.. அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!

பெண் சுற்றுலா பயணி பலியான விவகாரத்தில் கொந்தளித்த முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெண் சுற்றுலா பயணி விபத்தில் பலியான விவகாரம் - கொந்தளித்த முதலமைச்சர்... அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு...!

இந்தியாவில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தளங்களில் கோவாவும் ஒன்று. இங்கு இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த பலரும் சுற்றிப்பார்க்க வருகின்றனர்.

ஆகையால், சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்ற வகையில் இங்கு ஏராளமான ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பெண் சுற்றுலா பயணி விபத்தில் பலியான விவகாரம் - கொந்தளித்த முதலமைச்சர்... அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு...!

இதுமட்டுமின்றி, சுற்றுலாப் பிரியர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் வாடகை வாகன சேவையும் இங்கு கொடிக்கட்டி பறந்து வருகின்றது.

அந்தவகையில், ஹோட்டல்களுக்கு இணையான அளவில் வாகன வாடகை விடும் நிறுவனங்களும் அங்கு ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களை வாடகை எடுக்க ஒரு சில ஆவணங்கள் இருந்தாலே போதும் எளிதில் வாகனத்தை வாடகைக்கு எடுத்துவிட முடியும்.

பெண் சுற்றுலா பயணி விபத்தில் பலியான விவகாரம் - கொந்தளித்த முதலமைச்சர்... அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு...!

இத்தகைய வாகனங்களால் கோவாவில் அரங்கேறும் போக்குவரத்து விதிமீறல்கள் தற்போது எல்லையில்லாமல் உயர்ந்து வருவதாக போலீஸார் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இந்நிலையில், கோவாவின் மிக முக்கியமான மேம்பாலமான மண்டோவி பிரிட்ஜில் விபத்து ஒன்று அரங்கேறியது. இதில், சிக்கிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

பெண் சுற்றுலா பயணி விபத்தில் பலியான விவகாரம் - கொந்தளித்த முதலமைச்சர்... அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு...!

விபத்தில் இறந்த அப்பெண் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. கோவாவை சுற்றிப்பார்க்க வந்த அவர், வாடகைக்கு ஸ்கூட்டர் ஒன்றை எடுத்துள்ளார். பின்னர், அங்குள்ள சுற்றுலாத்தளங்களையும் சுற்றிப்பார்த்துள்ளார்.

பெண் சுற்றுலா பயணி விபத்தில் பலியான விவகாரம் - கொந்தளித்த முதலமைச்சர்... அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு...!

தொடர்ந்து, பனாஜியின் முக்கியமான மேம்பாலங்களில் ஒன்றான மண்டோவி வழியாக வந்துக்கொண்டிருந்த அப்பெண்மீது, திடீரென பின் பக்கமாக வந்த பேருந்து மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினார். இவரின், இறப்பு கோவாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பெண் சுற்றுலா பயணி விபத்தில் பலியான விவகாரம் - கொந்தளித்த முதலமைச்சர்... அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு...!

இதுகுறித்து தகவலறிந்த கோவாவின் முதலமைச்சர் பிரமோத் சாவந்த, "சமீபத்தில் மண்டோவி பாலத்தில் அரங்கேறிய விபத்து மிகவும் வேதனைக்கு அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. வாகனத்தை இயக்கத் தெரியாதவர்கள் ஏன் வாடகைக்கு எடுத்து கோவாவில் சுற்றி வருகிறார்கள் என தெரியவில்லை" என்று கூறியிருந்தார்.

விபத்தில் சிக்கிய அவரை மீட்பதற்கு பல மணி நேரங்கள் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. மேலும், விபத்தின் காரணமாக பல மணி நேரங்கள் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

MOST READ: "உன் வாழ்க்கைல 30 லட்சம் ரூபா பைக்க இனி பாக்க முடியுமா" -உரிமையாளர் முன்னிலையில் தமிழக போலீஸ் செய்த அட்ராசிட்டி..!

பெண் சுற்றுலா பயணி விபத்தில் பலியான விவகாரம் - கொந்தளித்த முதலமைச்சர்... அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு...!

தொடர்ந்து விபத்துக்குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் பிரமோத் சாவந்த், வாடகை வாகன விற்பனை நிலையங்களையும் சாடினார். உங்களால் வாகனத்தை இயக்க முடியவில்லை என்றால், வாகனங்களை வாடகைக்கு விடாதீர்கள். பெரும்பாலான வாடகை வாகன ஓட்டிகளுக்கு அவற்றை சரிவர இயக்கவே தெரியவில்லை. மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துகளுக்கு அவர்களே முக்கிய காரணமாக இருக்கின்றனர்" என்றார்.

MOST READ: ஃபாஸ்ட்டேக்கிலும் முறைகேடு.. கை வரிசை காட்ட ஆரம்பிக்கும் சுங்கச்சாவடிகள்.. சென்னையில் இனிதே ஆரம்பம்!

பெண் சுற்றுலா பயணி விபத்தில் பலியான விவகாரம் - கொந்தளித்த முதலமைச்சர்... அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு...!

தொடர்ந்து, இந்த விபத்து சம்பவம் காரணமாக போலீஸாருக்கு அதிரடி உத்தரவு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, விதிகளை மீறும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக அபராத இ-செல்லாண் வழங்கப்பட உள்ளது. ஆனால், இந்த விபத்து சம்பவத்தில் பலியாகிய பெண்மீது எந்தவொரு தவறும் இல்லையென அப்பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

MOST READ: கணவன், மனைவியின் சூப்பர் கண்டுபிடிப்பு... சும்மா நச்சுனு இருக்கு... என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க!!

பெண் சுற்றுலா பயணி விபத்தில் பலியான விவகாரம் - கொந்தளித்த முதலமைச்சர்... அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு...!

விதிமீறும் ஓட்டுநர்களுக்கு, குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதித்ததற்காக போலீஸார் தேவையில்லாமல் விமர்சிக்கப்படுகிறார்கள்.

இருப்பினும், கோவாவின் சாலைகளில் அதிகரித்து வரும் விபத்துக்கள் கவலைக்குரிய ஒன்றாக இருப்பதாகவும், அவற்றை இரும்புக் கரம் கொண்டு கடுமையாகத் தடுப்பதற்காகவே மாநில போக்குவரத்து காவல்துறையினருக்கு இத்தகைய உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

கோவாவில் விடுக்கப்பட்ட இதேபோன்று ஓர் அதிரடி உத்தரவையும் தமிழக அரசு அண்மையில் வெளியிட்டிருந்தது. அப்படி என்ன உத்தரவை அது வெளியிட்டது, எதற்காக வெளியிட்டது என்பதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

ஆட்டோக்களுக்கு போட்டியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் கால் டாக்ஸி சேவையில் களமிறங்கின. ஓலா மற்றும் உபேர் உள்ளிட்ட நிறுவனங்களின் வருகையால் ஆட்டோ தொழிலில் கற்பனை செய்து பார்க்க முடியாத மிக கடுமையான பாதிப்பு ஏற்படும் என அந்த சமயத்தில் கணிக்கப்பட்டது.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

ஆனால் தற்போது வரை அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை. அதற்கு மாறாக ஆட்டோ தொழில் நன்கு வளர்ச்சி அடைந்து கொண்டேதான் செல்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஆட்டோ தொழிலுக்கு புதிதாக வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம்தான் உள்ளது. சென்னை மாநகரில் மட்டும் தற்போது சுமார் 1 லட்சம் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

கேப்ஸ் தொழிலில் ஈடுபடுவதை விட புதிதாக ஆட்டோக்களை வாங்கி தொழில் செய்வதில்தான் டிரைவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆட்டோ கட்டணம் முறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான் இதற்கெல்லாம் ஒரே காரணம். கேப்ஸை விட ஆட்டோ தொழில்தான் மிகவும் லாபகரமானது என டிரைவர்கள் கருதி வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

கட்டணம் முறைப்படுத்தப்படாமல் இருப்பதால் அவர்களுக்கு என்னவோ நல்ல லாபம்தான். ஆனால் இதன் காரணமாக பயணிகள் மிக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் ஆட்டோ டிரைவர்கள் சிலர் நடத்தும் கட்டண கொள்ளைகளுக்கு விடிவு காலமே இல்லையா? என மக்கள் ஏங்காத நாளில்லை. ஆனால் இனி நீங்கள் இதை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

ஆம், ஆட்டோக்களில் இனி அதிக கட்டணம் வசூல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற வகையில் அதிரடியாக திட்டம் ஒன்றை தமிழக அரசு வகுத்துள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் சேர்த்து ஆச்சரியத்தையும் வரவழைக்கும் என்பது உறுதி. வெகு விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ள இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

கடந்த 2012ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில், சென்னை நகரில் இயங்கி வந்த 43 ஆயிரம் ஆட்டோக்களில், ஜிபிஎஸ் மற்றும் பிரிண்டருடன் கூடிய டிஜிட்டல் கட்டண மீட்டர்களை பொருத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 109 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்த அதிரடியாக திட்டம் வகுக்கப்பட்டது.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

ஆனால் அதன்பின் இரண்டு முறை டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. நீண்ட இடைவெளிக்கு பின்பு, கடந்த ஆண்டுதான் டெண்டர் இறுதி செய்யப்பட்டது. இந்த டிஜிட்டல் கட்டண மீட்டர்களை உற்பத்தி செய்வதுடன், அவற்றை கண்காணிக்கும் ஒப்பந்தத்தை டெல்லியை சேர்ந்த நிறுவனம் ஒன்று வென்றது. தற்போது இந்த திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

இதன்படி சென்னை மாநகரின் திருவான்மியூர் பகுதியில், முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் இந்த திட்டம் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்டோக்களுக்கு அரசு சார்பில் மீட்டர்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''டிஜிட்டல் கட்டண மீட்டர்கள் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டு விட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு விட்டது. அத்துடன் சோதனையும் நடந்து விட்டது. அதிகாரப்பூர்வமாக இந்த திட்டத்தை தொடங்குவது மட்டும்தான் பாக்கி.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

அது விரைவில் நடக்கவுள்ளது'' என்றனர். ஜிபிஎஸ் வாயிலாக இந்த ஆட்டோக்களை காண்காணிப்பதற்கான கட்டுப்பாட்டு மையம் அண்ணாநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''ஆட்டோ கட்டணங்களை கண்காணிப்பதற்கு என பிரத்யேகமான சாப்ட்வேர் ஒன்று உள்ளது.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

இந்த சாப்ட்வேரில் மாற்றங்களை செய்வதன் மூலமாக அரசால் ஆட்டோ கட்டணங்களை திருத்தியமைக்க முடியும். ஆட்டோ டிரைவர்களால் மேனுவலாக இதை செய்ய முடியாது. அதையும் மீறி ஆட்டோ டிரைவர்கள் முறைகேடுகளில் ஈடுபட முயன்றால், உடனடியாக கட்டுப்பாட்டு மையத்திற்கு எச்சரிக்கை வந்து விடும்'' என்றனர்.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

இதுகுறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்ட பின், இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்த திருவான்மியூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தின் கீழ், டிஜிட்டல் கட்டண மீட்டர்களை இலவசமாக பெற தகுதியுடைய ஆட்டோ டிரைவர்களை அடையாளம் கண்டறியும் பணியில் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

இதன்படி 2013 ஆகஸ்டுக்கு முன்பு (இந்த திட்டத்துடன் தொடர்புடைய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதி) ஆட்டோக்களை பதிவு செய்த டிரைவர்களுக்கு டிஜிட்டல் கட்டண மீட்டர்கள் இலவசமாகவே வழங்கப்படும். ஆனால் மற்ற ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் இதனை மார்க்கெட்டில் இருந்துதான் வாங்கி கொள்ள வேண்டும்.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

ஆனால் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்களின் விலை 8 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வரும் என கூறப்படுகிறது. எனவே இந்த தேதிக்கு பிறகு ஆட்டோக்களை பதிவு செய்த டிரைவர்கள், இதனை தங்களால் வாங்க முடியாது என தெரிவித்துள்ளனர். இந்த பிரச்னைக்கும் அரசு தீர்வு கண்டால், சிறப்பாக இருக்கும்.

ஆட்டோ டிரைவர்களுக்கு செக்

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டம் ஆட்டோ டிரைவர்களால் அரங்கேற்றப்பட்டு வரும் கட்டண கொள்ளை பிரச்னைக்கு தீர்வு காணும் என நம்பலாம். எனவே மக்கள் மத்தியில் நிச்சயம் இதற்கு அமோக வரவேற்பு இருக்கும். இந்த திட்டம் தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Goa CM Comment About Panaji Fatal Accident. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X