பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
கோவா (Goa) மாநிலத்தை சேர்ந்த அரசியல்வாதி மற்றும் தொழில் அதிபர்களில் ஒருவர், மைக்கேல் லாபோ (Michael Lobo). கோவா மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் தற்போது தனது மகளுக்கு, புத்தம் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்எல்55 ஏஎம்ஜி (Mercedes-Benz SL55 AMG) காரை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.
மைக்கேல் லாபோவின் மகள், இந்த விலை உயர்ந்த காரை டெலிவரி எடுக்கும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த காரின் விலை சுமார் 3 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது, 4.0 லிட்டர், ட்வின் டர்போ வி8 இன்ஜின் ஆகும்.

அதிகபட்சமாக 473 பிஹெச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 3.9 வினாடிகளில் எட்டி விடும்.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 295 கிலோ மீட்டர்களாக உள்ளது. இந்த விலை உயர்ந்த காரில், பாதுகாப்பு வசதிகளுக்கு (Safety Features) சற்றும் பஞ்சமில்லை. இதில், 8 ஏர்பேக்குகள், பாதசாரிகள் பாதுகாப்பு அமைப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்எல்55 ஏஎம்ஜி காரானது, மைக்கேல் லாபோவின் மகளுக்கு மிகவும் பிடித்த ஒரு கார் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மைக்கேல் லாபோ இந்த காரை தனது மகளுக்கு பரிசாக வழங்கியுள்ளார். அத்துடன் கோவா மாநிலத்தில் இந்த காரை முதல் முறையாக வாங்கியிருப்பது மைக்கேல் லாபோவின் குடும்பம்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக கோவா மாநிலத்தில் யாருமே மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்எல்55 ஏஎம்ஜி காரை வாங்கியது இல்லை. இப்படி ஒரு பெருமையை வசமாக்கியுள்ள மைக்கேல் லாபோ ஆரம்பத்தில் ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலையை செய்து வந்தார் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இந்த விஷயத்தை மைக்கேல் லாபோவே வெளிப்படையாக கூறியுள்ளார்.
''எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. அப்போது எனக்கு 14 வயது. அந்த சமயத்தில் நான் வேலை செய்த ஹோட்டலுக்கு தொழில் அதிபர் ஒருவர் மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் வருவார். அதை பார்த்த நான், ஒரு நாள் மெர்சிடிஸ்-பென்ஸ் காரை சொந்தமாக்குவேன் என எனக்கு நானே கூறி கொண்டேன்.
எனது இந்த கனவை நிஜமாக்கி கொள்ள நான் அதிக நாட்களை எல்லாம் எடுத்து கொள்ளவில்லை. எனது இளம் வயதிலேயே இந்த கனவு நனவாகி விட்டது. எனது 24வது வயதில் நான் மெர்சிடிஸ்-பென்ஸ் காரை வாங்கி விட்டேன்'' என நிகழ்ச்சி ஒன்றில் மைக்கேல் லாபோ கூறியுள்ளார். இது மிகப்பெரிய வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோட்டலில் பாத்திரம் கழுவி கொண்டிருந்த ஒருவர், மகளுக்கு சுமார் 3 கோடி ரூபாய் காரை பரிசாக வழங்கும் அளவிற்கு உயர்ந்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என நினைக்க கூடிய இளம் வயதினருக்கு மைக்கேல் லாபோவின் கதை உண்மையிலேயே உத்வேகம் தரக்கூடியது.


Click it and Unblock the Notifications








