இவங்கள சாதாரண பொண்ணுனு நினைச்சுடாதீங்க.. கோவாவுலேயே யாரிடமும் இல்லாத காரை வாங்கி இருக்காங்க..
சொகுசு மற்றும் ஆடம்பர ரக கார்களுக்கு இந்தியாவில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியர்கள் பலர் சொகுசு கார் விரும்பியாக மாறியிருக்கின்றனர். இதன் விளைவாக முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நாட்டில் சொகுசு கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே கோவாவிலேயே யாரிடமும் இல்லாத சொகுசு கார் மாடல் ஒன்றை ஓர் பணக்கார பெண் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த பெண் யார்? என்பதையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
அத்துடன், அவர் எந்த சொகுசு கார் மாடலை வாங்கி இருக்கின்றார்? அதன் சிறப்புகள் என்ன? மற்றும் அதன் விலை என்ன? என்பது போன்ற பிற முக்கிய விபரங்களையும் இந்த பதிவின் வாயிலாக நாம் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

மெர்சிடிஸ் மேபேக் எஸ் கிளாஸ் (Mercedes Maybach S-Class) சொகுசு காரையே அந்த பணக்கார பெண் வாங்கி இருக்கின்றார். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 3.5 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இத்தகைய அதிக விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இந்த கார் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த மாதிரியான ஓர் காரையே கோவாவைச் சேர்ந்த பணக்கார பெண் டெலிவரி பெற்றிருக்கின்றார். இந்த காரை அவருடைய கணவர் வாங்கியதாகக் கூறப்படுகின்றது. சூரஜ் ககுலோ என்பவரே இந்த காரை வாங்கி இருக்கின்றார்.
ஆனால், அவர் தன் மனைவியை முன்னிறுத்தியே இந்த காரை டெலிவரி பெற்றிருக்கின்றார். கோவாவிலேயே இந்த கார் டெலிவரி செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனை கோவாவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு விற்பனையாளரும் உறுதிப்படுத்தி இருக்கின்றார். மேலும், இது கோவாவின் முதல் மேபேக் எஸ் கிளாஸ் டெலிவரி என்பதால் அந்த ஷோரூமில் டெலிவரி நிகழ்வு விழாக் கோலம் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
மிகுந்த சொகுசு அம்சங்கள் நிறைந்த ஆடம்பர ரக கார் மாடலே மெர்சிடிஸ் மேபேக் எஸ் கிளாஸ் ஆகும். இந்த காரில் செங்குத்தான தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மிக மோசமான மன நிலையைகூட மிக சிறந்ததாக மாற்றும் ஆற்றல்மிக்க ஆம்பியன்ட் லைட், மிதக்கும் அனுபவத்தை வழங்கும் இருக்கைகள் என ஏகப்பட்ட சிறப்பு சொகுசு வசதிகளை இந்த கார் தனக்குள் தாங்கி இருக்கின்றது.

இந்த மாதிரியான அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவின் அல்ட்ரா லக்சூரி செடான் காராக மேபேக் எஸ் கிளாஸ் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, சூரஜ் ககுலோ வாங்கி இருப்பது மேபேக் எஸ் கிளாஸ்ஸிலேயே அதிக ஆடம்பர மற்றும் சொகுசு வசதிகளைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. இதனால்தான் அதன் விலை ரூ. 3.5 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
அதேவேளையில், இதே கார் மாடலை ரூ. 2.7 கோடியிலும் வாங்க முடியும். இது மேபேக் எஸ் கிளாஸ்-இன் ஆரம்ப நிலை மாடல் ஆகும். இந்த கார் மாடலில் இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதாவது, ஆரம்ப நிலை தேர்வு 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜட் எஞ்சினையும், உயர் நிலை தேர்வு 6.0 லிட்டர் வி12 எஞ்சினையும் கொண்டிருக்கும்.
முதல் எஞ்சினில் இக்யூ பூஸ்ட் வசதியை மெர்சிடிஸ் வழங்கி இருக்கின்றது. இது 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் ஆகும். இந்த மோட்டாரின் அதிகபட்ச திறன் வெளிப்பாடு 496 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் ஆகும். வி12 எஞ்சின் அதிகபட்சமாக 604 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 9 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் நான்கு வீல் இயக்கம் ஆகிய வசதிகள் இந்த இரண்டு மோட்டார் ஆப்ஷன்களிலும் மெர்சிடிஸ் வழங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒரு சிலர் தங்களை தனித்துவமானவர்களாக காண்பிக்க விரும்புகின்றனர். இதன் அடிப்படையிலேயே கோவாவைச் சேர்ந்த இந்த பணக்காரர் விலை உயர்ந்த பென்ஸ் சொகுசு காரை வாங்கி இருக்கின்றார். இதன் வாயிலாக வாகன உலகின் தலைப்பு செய்தியாக அவர் மாறியிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








