GOAT டீசரில் விஜய் ஓட்டி வந்த பைக்கில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ஏன் இப்படி பண்ணாங்க தெரியுமா?
நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் படக்குழுவினர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விதமாக திரைப்படத்திலிருந்து சில காட்சிகளை டீசராக வெளியிட்டுள்ளனர். இந்த காட்சியில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் பைக் சேஸிங்கில் ஈடுபட்டு வருவது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் விஜய் பஜாஜ் நிறுவனத்தின் டோமினார் 400 பைக்கை ஓட்டி வருகிறார். இந்த பைக்கின் ஸ்பெஷாலிட்டி என்ன? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் குறித்து எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரிதாக ஏற்பட்டுள்ளது. பல ர் இந்த திரைப்படத்தின் கதைகளம் குறித்து தீவிரமாக விவாதம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு GOAT திரைப்பட குழுவினர் அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக திரைப்படத்திலிருந்து சில காட்சிகளை வெளியிட்டுள்ளார்கள். அதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் பைக் சேஸிங் காட்சிகளில் நடித்துள்ளார். வெளிநாட்டில் படமாக்கப்பட்ட இந்த காட்சிகள் டீசராக வெளியாகி உள்ளது.
இதில் நடிகர் விஜய் டோமினார் 400 பைக்கில் சேஸிங் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பைக் இந்தியாவில் பிரபலமான பைக்காக இருக்கிறது. ராயல் என்பீல்டு பைக்கிற்க்கு போட்டியாக விற்பனையாகி வரும் பைக்காக இருக்கிறது. பைக்குகள் குறித்து அதிகம் ஆர்வம் காட்டும் மக்கள் பலர் இந்த பைக்கை வாங்க நிச்சயம் விரும்புவார்கள். அப்படி இந்த பைக்கில் என்ன இருக்கிறது என்ற விவரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

பஜாஜ் நிறுவனத்தின் டோமினார் 400 பைக்கை பொறுத்தவரை அதன் சிறப்பு அம்சமே அதன் இன்ஜின் தான். இந்த பைக்கில் 373.3 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 40 பி எஸ் பவரை 8,800 ஆர்பிஎம்-மிலும் 35 பிஎஸ் பவரை 6500 ஆர்பிஎம்-மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ஒரு லிட்டருக்கு 27 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
இந்த பைக்கில் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 199 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் ட்யூப்லெஸ் டயர்கள், அலாய் வீல்கள் எல்லாம் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக் மார்க்கெட்டில் ரூபாய் 2.30 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக்கில் பல்வேறு கூடுதல் ஆப்ஷன்களும் உள்ளன.

இந்த பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் ஆப்ஷன்களாக கியர் இண்டிகேட்டர், ட்ரிப் இண்டிகேட்டர், பெரிய வைசர், ஹேண்ட் கார்ட், இன்ஜின் பாஸ் பிளேட், லெக் ஸ்டாப்பர், நேவிகேஷன் ஸ்டே, ஷாடில் ஸ்டே உள்ளிட்ட அம்சங்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கி தங்கள் பைக்குகளில் பொருத்திக் கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கஸ்டமைஸ்டு ஆப்ஷன் கிடைக்கிறது.
நடிகர் விஜய் ஒட்டி வந்த இந்த பைக்கின் டீசரை வைத்து பார்க்கும் போது, அவர் தற்போது விற்பனையில் இருக்கும் டோமினோர் 400 பைக்கை ஒட்டி வருவது தெளிவாக தெரிகிறது. பைக்கின் பின்புறம் தெரியும் படியான காட்சிகளில் இந்த பைக்கில் உள்ள டூயல் எக்ஸாஸ்ட் சிஸ்டம் தெளிவாக தெரிகிறது. அதேநேரம் முன்பக்கம் பார்க்கும்போது பலருக்கு சில சந்தேகம் ஏற்படலாம்.
புதிய பஜாஜ் டோமினார் பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் திரைப்படத்தில் வரும் இந்த பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க் இல்லாமல் சாதாரண ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டு இருப்பது தெரியும். இதனால் பழைய வெர்ஷன் பைக்கை இந்த திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என சிலர் நினைக்கலாம் ஆனால் இது வேண்டும் என்றே செய்யப்பட்ட விஷயம்தான்.
திரைப்படங்களில் ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கப்படும் போது பைக்குகள் பல்வேறு விதமான வேகங்களில் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கும். பல்வேறு விதமான ரோடுகளில் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும். இதில் யூஸ்டு ஃபோர்க் பயன்படுத்துவது அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கலாம். முக்கியமாக திரைப்படத்தில் அவர்கள் எடுக்க வேண்டிய சில ஷாட்கள் யுஎஸ்டி ஃபோர்க் பொருத்தப்பட்டால் எடுக்க முடியாத சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கலாம்.
அதன் காரணமாக அவர்கள் இந்த புதிய டோமினார் 400 பைக்கை மாடிஃபிகேஷன் செய்து அதில் உள்ள யுஎஸ்டி ஃபோர்க்குகளை நீக்கிவிட்டு சாதாரண ஃபோர்க்குகளை பொருத்தியுள்ளார்கள். அதன் காரணமாக தான் பைக் பழைய பைக் போல காட்சியளிக்கிறது. ஆனால் பைக்கில் உள்ள மற்ற பாகங்களை வைத்து பார்க்கும் போது இது புதிய பைக் தான் என தெளிவாக தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் டோமினார் 400 பைக்கிற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்த பைக்கை பலர் விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்த பைக்கை நடிகர் விஜய் ஓட்டி உள்ளது தற்போது அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரைப்படத்தில் நடிகர் விஜய் பயன்படுத்தியதன் காரணமாக இந்த பைக்கின் விற்பனை அதிகமாக அதிக வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications









