இதுகெல்லாம் தனி கெத்து வேணும்!! துபாய் காரங்க தோற்றுப் போவாங்க... இந்தியாவின் கோல்டு மனிதர்கள்!!
மனிதர்களுக்கும், தங்கத்திற்கும் இடையே எப்போதுமே ஒரு நெருங்கிய பிணைப்பு உள்ளது. இதனாலேயே பெரும்பாலான மக்கள் தங்கத்தில் ஆபரணங்களை புதுசு, புதுசாக வாங்கி போட விரும்புகின்றனர். இதில் ஆண், பெண் பேதமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், கிலோ கணக்கில் ஆபரணங்களை கழுத்திலும், கை, கால்களிலும் அணிந்து திரியும் ஆண்களும் இருக்கின்றனர். உதாரணத்திற்கு, நம் தமிழ்நாட்டில் ஹரி நாடார் இருக்கிறாரே.
இத்தகைய கலாச்சாரம் ஆனது துபாயில்தான் துவங்கியது என்றாலும், நம் நாட்டிலும் பளிச்சென்று தெரியும் வகையில் அதிக நகைகளை அணிந்துக் கொண்டு உலா வருபவர்கள் இருக்கிறார்கள். அணிந்திருப்பவை அனைத்தும் தங்கமா அல்லது கவரினா என்பது அடுத்தப்படியான விஷயம், எவரொருவரும் எளிதாக தனது முகத்தை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இத்தகையவர்களின் எண்ணமாக உள்ளது.

நம் தமிழ்நாட்டில் இவ்வாறான மனிதர்களை அதிகம் பார்க்க முடியாது. ஆனால், வட இந்தியாவில் இப்போதும் ஊருக்கு ஊர் ஒருத்தராவது இவ்வாறு அதிக நகைகளை அணிந்துக் கொண்டு திரிகின்றனர். அத்தகையவர்களுள் ஒருவர்தான், சன்னி வாக்சூரே. பெரிய டாலர் கொண்ட சங்கிலிகளை எப்போதும் கழுத்தில் தொங்கவிட்டப்படி திரிவதினால் சுற்று வட்டார பகுதிகளில் பிரபலமானவராக விளங்கும் சன்னி வாக்சூரே தனது விலையுயர்ந்த கார்களுக்கும் கோல்டன் நிற பெயிண்ட்டை கொடுத்துள்ளார். இவரிடம் உள்ள சில சொகுசு கார்கள்...

மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் (Mercedes-Benz E-Class): சன்னி வாக்சூரே வைத்திருக்கும் விலையுயர்ந்த கார்களுள் ஒன்றாக இதனை கூறலாம். இது முழுவதுமாக கோல்டன் நிற வ்ராப்-ஆல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை உண்மையான தங்கம் கிடையாது. இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் பிரபலமான காரான இ-கிளாஸை பழைய ஜென்ரேஷனில் சன்னி வாக்சூரே வைத்துள்ளார்.

ஆடி க்யூ7 (Audi Q7): ஒரு சமயத்தில் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் இடையே பிரபலமாக இருந்த ஆடி கார் இதுவாகும். அதுமட்டுமின்றி அந்த சமயத்தில், இந்தியாவில் விலையுயர்ந்த ஆடி காராகவும் க்யூ7 விளங்கியது. இந்த காரையும் கோல்டன் கலர் ஃபினிஷிங்கில் சன்னி வாக்சூரே வைத்து உள்ளார்.

ஜாகுவார் எக்ஸ்.எஃப் (Jaguar XF): மெர்சிடிஸ் இ-கிளாஸுக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் ஜாகுவார் கார் இதுவாகும். அதாவது, தோற்றத்தில் இ-கிளாஸும், எக்ஸ்.எஃப் மாடலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன. ஜாகுவார் எக்ஸ்.எஃப் காரில் எக்ஸ்டெண்ட் ஏசி வெண்ட்ஸ், பாப்-அப் கியர் க்னாப் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ஆடி ஏ3 (Audi A3): ஒரு சமயத்தில், ஆடி விற்பனை செய்த விலை குறைவான செடான் கார் இதுவாகும். பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளினால் இந்தியாவில் இதன் விற்பனை நிறுத்தப்பட்டது. சன்னி வாக்சூரே இந்த ஆடி காரை கோல்டன் நிற வ்ராப்-ஆல் அலங்கரிக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. சன்னியின் ஆடி ஏ3 கார் வெள்ளை நிறத்தில் உள்ளது.

ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue): சன்னி வாக்சூரே வைத்திருப்பது பழைய ஜென்ரேஷன் ரேஞ்ச் ரோவர் வோக் கார் ஆகும். கருப்பு நிற ஃபினிஷிங்கில் வோக் காரை சன்னி வாக்சூரே வைத்துள்ளார். மேலே கண்ட ஆடி ஏ3 காரை போல், இந்த ரேஞ்ச் ரோவர் காருக்கும் கோல்டன் நிற ஃபினிஷிங் கொடுக்கப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோல்டு நிறம் எவரொருவரையும் வசீகரிக்கக்கூடியது. சன்னி வாக்சூரே போன்றோரை கொஞ்சம் அதிகமாகவே கவர்ந்து இழுக்கிறது. இதனால்தான், விலையுயர்ந்த கார்களிலும் கார் நிறுவனம் வழங்கும் நிறத்திற்கு பதிலாக கவர்ச்சிக்கரமான தங்க நிறத்தை இத்தகையவர்கள் வழங்குகின்றனர். மஹாராஷ்டிராவில் சன்னி வாக்சூரேவை போன்று இன்னும் நிறைய பேர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications









