வீட்ல தங்கத்துலேயே குளிப்பாரு போல! கோடி கணக்குல செலவு பண்ணி பிளாட்டினத்துலே காரை ரெடி பண்ணிட்டாரு!
இந்தியாவில் மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் சினிமா பைனான்ஸியரான சன்னி நானா சாஸிங் வாஞ்சோர் என்பவர் தங்கத்தை அதிகமாக பயன்படுத்துவதால் பிரபலமானவர் இவர் அதிக தங்க நகைகளை அணியும் பழக்கம் கொண்டவர்.கழுத்து நிறைய தங்க செயினை போட்டு வெளியில் வருவதால் இவர் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வரும். இவர் பயன்படுத்தும் கார் கூட தங்க மூலாம் பூசப்பட்டகாராக இருக்கும்.
இவர் சொந்தமாக மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் காரை வைத்திருக்கிறார். இந்த கார் முழுமையாக தங்க மூலாம் பூசப்பட்ட காராக இருக்கிறது. இந்தியாவிலேயே தங்க முலாம் பூசப்பட்ட ஒரே ஸ்கார்பியோ என் கார் இவருடைய கார் தான். தற்போது இந்த காரில் கூடுதலாக பிளாட்டினம் அம்சங்களை சேர்ந்துள்ளார். இது வாகனத்தை தனித்துவமாக பிரித்து காட்டுகிறது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இவரிடம் ஏகப்பட்ட கார்கள் கலெக்ஷனில் வைத்துள்ளார். அதில் பல எஸ்யூவி கார்களும் உள்ளன. இவரிடம் உள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை தான் தங்க மூலாம் பூசி பயன்படுத்தி வருகிறார். தற்போது இந்த காருக்கு சைகா பார்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து லெவல் 1 பாடி கிட்களை பொரத்தியுள்ளார். இந்த பாடி கிட்கள் எல்லாம் பிளாட்டினம் கொண்டு ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள லவ்ரோர் கவர், பின்பக்க ஸ்பாய்லர், டோர் டிரிப், வெளிப்பக்க பின்பக்கம் பார்க்கும் கண்ணாடி கவர், ஹூட் ஸ்கூப், ஆகிய பகுதிகளில் பிளாட்டினம் ஃபினிஷ் வழங்கப்பட்டுள்ளது. இது தங்க காரை இன்னும் லுக்காக மாற்றுகிறது. தங்கமே விலை அதிகமாக இருக்கும் போது இவர் பிளாட்டினத்தை கொண்டு இந்த காரை வடிவமைப்த்துள்ளன.

பூனேவை சேர்ந்த இவர் பொது வெளியில் அதிக தங்க நகை அணிந்து வருவதால் மக்கள் இவரை புனேவின் தங்க மனிதர் என பெயர் பெற்றவராக இருக்கறார். இவர் பல இந்தி திரைப்படங்களுக்கு பைனான்ஸியராக இருக்கிறார். இதன் காரணமாவே இவர் புகழ்பெற்றுள்ளார். இவர் வைத்திருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார ்தான் போது பிரபலமாக இருக்கிறது. பலர் இந்த காரை பற்றி பேசி வருகின்றனர்.
ஃஇந்த காரை பொருத்தவரை தற்போது மார்கெட்டில் ரூ13.99 லட்சம் முதல் ரூ24.89 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ஸ்கார்பியோ காருக்கு மாற்றாக களம் இறக்கப்பட்டது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு 4 சிலிண்டர் பெட்ரோல் எம்- ஸ்டாலியன் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 203 எச்பி பவரையும் 380 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது.
டீசல் இன்ஜினை பொருத்தவரை 2.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் தார் ராக்ஸ் மஹிந்திரா எக்ஸயூவி 700 ஆகிய கார்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 2 விதமான டியூன் ஆப்ஷனுன்களில் கிடைக்கிறது. ஒன்று 132 எச்பி பவர் 300 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. மற்றொன்று 175 எச்பி பவர் 370 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸில் இது 400 என்எம் டார்க் உடன் கிடைக்கிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கார் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பேஸ் வேரியன்ட் 2 வீல் டிரைவ் ஆப்ஷனாக இருக்கிறது. இது பின்பக்க வீல் டிரைவாக இருக்கிறது.மஹிந்திராவின் 4 வீல் டிரைவ் 4 எக்ஸ்பிளோர் என்ற தொழிற்நுட்பத்தில் இயங்குகிறது. இது டீசல் வேரியன்டில் மட்டுமே கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிலதிபர் சன்னியின் இந்த செயல் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. அதிக விலை மதிப்பில் இந்த மாடிஃபிகேஷனை செய்துள்ளார். எவ்வளவு பணம் இதற்காக செலவு செய்தார் என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அதிகமாக செலவாகியிருக்கும். இந்த காரை நீங்கள் ரோட்டில் பார்த்தால் என்ன ஃபீல் செய்வீர்கள் என கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications
